அனானி வாரம்!!!
ஆம்! நானும் ஒரு அனானிதான் கடந்த சில மாதங்களாக. பதிவுகளை வாசித்து வந்ததோடு சில நேரங்களில் பின்னூட்டங்களும் இட்டுருக்கிறேன். அதற்காக என்னை முகம் வெளிகாட்ட விரும்பாத கோழை என்றழைத்தால் நான் பொருப்பல்ல. எனக்கும் நல்ல ஆக்கமான பதிவுகளை எழுத விருப்பம்தான். வேளைப் பளு மற்றும் சிறிது நாளாகட்டும் என்ற சோம்பேறித்தன்மும் தான் காரணம்.
அனானியாக வந்து மறுமொழி இடுவதை தடுத்து வைக்கும் கொள்கை என்னவென்று எனக்கு இதுவரை விளங்கவில்லை. யாரா இருந்தா என்ன? அவன் என்ன சொல்ல வர்ரான்னு தான் பாக்கணும். அவன் கருத்து பதிவுக்கு சம்மந்தம் இல்லையா, ஒதுக்குவதை உட்டுப் புட்டு சும்மா அது இதுனு...
அன்பு அனானிகளே, நான் உங்களில் ஒருவன். நம்மீது பார்வை பட்டுவிட்டது. பட்டய கெளப்புங்க! ஆனா ஒரு வரம்பு இருக்கட்டுமே!!!
தமிழ்ப்பதிவுகள்