Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Tuesday, February 06, 2007

கிரிக்கெட் நகைச்சுவை

ஒருவரின் மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கனவருக்கு மருத்துவமனை செல்ல இயலாத நிலை. மருத்துவமனைக்கு ஃபோன் செய்கிறார் மனிதர் நிலவரம் அறிவதற்காக. ஆனால், தவறுதலாக அவருடைய call கிரிக்கெட் மைதானத்திற்கு செல்கிறது. நிலவரம் என்ன என்று அவர் கேட்கிறார். அங்கிருந்த வந்த பதிலை கேட்டபின் மயங்கி வீழ்கிறார்.

அப்படி என்ன சொனார்கள் அவர்கள்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இதை ஆங்கிலத்தில் சொன்னால்தன் சுவை.
They said:
"7 are already out. Hopefully 3 more will be out before lunch. And the first one was DUCK."

Tuesday, December 05, 2006

கிரிக்கெட் வீரர்களின் மின்னஞ்சல்...

நமது கிரிக்கெட் வீரர்களின் மின்னஞ்சல் முகவரிகள்:

1.LAXMAN:

available@home-only.com

2.GANGULY:

dada@only_kolkatta.com

3.KUMBLE:

only@test_match.com

4.SACHIN:

admitted@hospital.com

5.KAIF:

good@for_nothing.com

6.SEHWAG:

consistently@out_of_form.com

7.DRAVID :

stick@crease_like_fevicol.com

8.PATHAN:

takewickets@only_with_kenya.com

9. GREG CHAPPELL

only_experiment@noresult.com

10. Munaf Patel

only_line&length@nospeed.com

11.Harbhajan Singh

no_spinpitch@nowicket.com

12. Suresh Raina

why_i_am_there@god_knows.com

Saturday, November 25, 2006

குஜராத்தி இரத்தம்

இணையத்தில் உலவிவரும் நகைச்சுவை துனுக்குகளில் ஒரு குறிப்பிட்ட இனத்தை வைத்து கேளி செய்து வரும் துனுக்குகளும் உண்டென்பது அறிந்ததே. அதில் மிக கூடுதலாக வருவது சர்தார்களை (பஞ்சாபிகளை) வைத்தே. அவர்களை முட்டாள்களாக (குண்டக்க மண்டக்க வகை) சித்தரித்தே வரும். அதே போல் குஜராத்திகளை பற்றி வருபவை அவர்களை கஞ்சர்களாக சித்தரித்தே வரும். அவ்வகையச் சார்ந்த ஒன்று எனக்கு மின்னஞ்சலில் வந்தது. முடிந்தால் நீங்களும் சிரித்துவிட்டு செல்லுங்கள்.

அரபி ஒருவர் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதற்காக தேவைப்படும் (அவருடையதோ அரிய வகை) இரத்தத்திற்காக மருத்துவர் உலகளவில் விளம்பர படுத்துகிறார். இறுதியாக, பரோடாவைச் சார்ந்த குஜராத்தி ஒருவர் அரபிக்காக இரத்த நன்கொடை செய்ய முன் வருகிறார்.

அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்து தாயகம் திரும்பிய அரபி, குஜராத்தியின் நல்லெண்ணத்தை வியந்து அவருக்கு பரிசாக ஒரு டொயொட்டா 4 வீலர், வைரங்கள், நகைகள் மற்றும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரும் அனுப்பிவைக்கிறார்.

பின்பொரு நாள் அதே அரபிக்கு சரி செய்யும் அறுவை சிகிச்சை செய்ய நேரிடுகிறது. மீண்டும் அதே மருத்துவமனைக்கு வருகிறார். அதே குஜாராத்திக்கு மருத்துவர் சொல்லி அனுப்புகிறார் இரத்த நன்கொடைக்காக. குஜராத்தியும் மகிழ்ச்சியுடன் ஒப்பிக் கொண்டு இரத்தம் வழங்குகிறார்.

இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை முடிந்து சென்ற அரபி, அந்த குஜராத்திக்கு வெறும் நன்றி சொல்லும் அஞ்சலட்டையும், கொஞ்சம் இனிப்புகள் மட்டும் அனுப்பி வைக்கிறார். இதைப் பார்த்த குஜராத்தி அதிர்ச்சியடைகிறார்.

அரபியிடம் இதைப் பற்றி கேட்டு விடுவது என முடிவெடுத்து, அரபியிடம் தொலைபேசியில் "நீங்கள் முதல் முறை போலவே இம்முறையும் நல்ல பரிசு தருவீர்கள் என எதிர்பார்த்தேன், ஆனால் நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?" என்று கேட்டார்.

அதற்கு அந்த அரபி "இம்முறை என் உடலில் ஓடுவது குஜராத்தி இரத்தமல்லவா" என்றார்.

Monday, October 02, 2006

என்ன தோன்றுகிறது??




மேலே உள்ள படத்தைப் பார்த்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். நான் இப்படத்தை பார்த்தவுடன் அலுவலகம் என்று கூட பாராமல் வாய்விட்டு சத்தமாக சிரித்து விட்டேன். எல்லாரும் என்னைப் பார்த்து முறைத்ததுதான் மிச்சம். (பின்பு எல்லாருக்கும் மின்னஞ்சல் அனுப்பி வைத்து விட்டேன்)

சிறந்த கமென்ட்... பரிசு... அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாதுங்க... சும்மா.. இதைப் பாத்து நீங்க என்ன் நினைக்கிறீங்கனு தெரிஞ்சுக்கத் தான். :) புகுந்து விளையாடலாம்.

Wednesday, September 27, 2006

நம்ம 23-ம் புலிகேசி Project Manager ஆனால்...

காலையில் ஒன்பது மணிக்கு வர வேண்டியது. கணிணியின் திரையைப் பார்த்துக் கொண்டே வேலை செய்வது போல் நடிக்க வேண்டியது. மாலையில் வீட்டிற்கு அடித்து புரண்டு ஓட வேண்டியது. இதில் இடையில் ஒரு மணி நேரம் உணவு இடைவேளை வேறு. அது மட்டுமின்றி இடையிடையில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் தேனீர் அருந்த ஓய்வு நேரம். கூடவே டோர்ம் (Dorm) - ல் உறங்க நாற்பது நிமிடங்கள் சென்று விடும். ஐந்தறிவு ஜீவன்கள் போல் ஒரு வாழ்க்கை. Deadline வந்தால் மட்டுமே ஆறாவது அறிவிற்கு வேலை. கேட்டால் மென்பொருள் நிறுவனத்தில் வேலை என்று பீற்றிக்கொள்வது.


(நண்பனிடம் இருந்த வந்த மின்னஞ்சலில் சிக்கியது)

Wednesday, September 06, 2006

சித்திரம் பேசுதடி

டைம்ஸ் ஆஃப் இன்டியாவில் வெளியான சில கேளிச் சித்திரங்கள்.