Tuesday, August 29, 2006

அனானி வாரம்!!!

ஆம்! நானும் ஒரு அனானிதான் கடந்த சில மாதங்களாக. பதிவுகளை வாசித்து வந்ததோடு சில நேரங்களில் பின்னூட்டங்களும் இட்டுருக்கிறேன். அதற்காக என்னை முகம் வெளிகாட்ட விரும்பாத கோழை என்றழைத்தால் நான் பொருப்பல்ல. எனக்கும் நல்ல ஆக்கமான பதிவுகளை எழுத விருப்பம்தான். வேளைப் பளு மற்றும் சிறிது நாளாகட்டும் என்ற சோம்பேறித்தன்மும் தான் காரணம்.


அனானியாக வந்து மறுமொழி இடுவதை தடுத்து வைக்கும் கொள்கை என்னவென்று எனக்கு இதுவரை விளங்கவில்லை. யாரா இருந்தா என்ன? அவன் என்ன சொல்ல வர்ரான்னு தான் பாக்கணும். அவன் கருத்து பதிவுக்கு சம்மந்தம் இல்லையா, ஒதுக்குவதை உட்டுப் புட்டு சும்மா அது இதுனு...


அன்பு அனானிகளே, நான் உங்களில் ஒருவன். நம்மீது பார்வை பட்டுவிட்டது. பட்டய கெளப்புங்க! ஆனா ஒரு வரம்பு இருக்கட்டுமே!!!

64 comments:

said...

//அனானியாக வந்து மறுமொழி இடுவதை தடுத்து வைக்கும் கொள்கை என்னவென்று எனக்கு இதுவரை விளங்கவில்லை. யாரா இருந்தா என்ன? அவன் என்ன சொல்ல வர்ரான்னு தான் பாக்கணும். அவன் கருத்து பதிவுக்கு சம்மந்தம் இல்லையா, ஒதுக்குவதை உட்டுப் புட்டு சும்மா அது இதுனு...
//
நம்ம கருத்தும் அதே தானுங்கோ..

said...

//நம்ம கருத்தும் அதே தானுங்கோ.. //

பின்ன என்னங்க, சொல்லவந்ததை எடுத்துகுறதை உட்டுபுட்டு....

சந்தோஷ்!! வருகைக்கும் இடுகைக்கும் நன்றி

said...

நம்ம கருத்தும் அதே தானுங்கோ..

said...

அனானிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணன் மகேந்திரனுக்கும் ஒரு 'ஓ' போடுங்க...

said...

ஆனால் அனானிகள் தகாத வார்த்தைகள் பயன்படுத்துவதையும் ஆதரிக்கின்றீர்களா?

said...

வாங்க நிலவு நண்பனே!!

//ஆனால் அனானிகள் தகாத வார்த்தைகள் பயன்படுத்துவதையும் ஆதரிக்கின்றீர்களா? //



இல்லை. ஆதரிக்க மாட்டேன்! இதை பாருங்க. //பட்டய கெளப்புங்க! ஆனா ஒரு வரம்பு இருக்கட்டுமே!!!
//

Anonymous said...

Anonykalukkana aadharavu padhivil pinnootamidatha Anony perumakkalae!!

What happened to u??

Anonykalai perumai paduthiya Loduku is the Vazgha!!

said...

வாங்க அனானி வாங்க!

நம்ம கூட்டத்துல இருந்து முதல் ஆளா வந்து இருக்கிய!! வாழ்க!!

said...

அனானிகள் வருக வருக என வரவேற்று உபசரிக்கும் லொடுக்குப் பாண்டி அவர்கள் வாழ்க வாழ்க

said...

//அனானிகள் வருக வருக என வரவேற்று உபசரிக்கும் லொடுக்குப் பாண்டி அவர்கள் வாழ்க வாழ்க//

அனானிகள் இல்லாத தமிழ்மணம், பார்வையாளர்கள் இல்லாத கிரிக்கெட் போலாகும். அதான்.

said...

நீங்கதான் அ.மு.க தலைவரா?

ஆஸ்திரேலியாவில இருக்கிறதா சொன்னாங்க!! இங்க எப்படி?

said...

//
நீங்கதான் அ.மு.க தலைவரா?

ஆஸ்திரேலியாவில இருக்கிறதா சொன்னாங்க!! இங்க எப்படி? //

ஆஹா அதையும் எலிக்குட்டி சோதனையில கண்டுபுடுச்சுட்டாய்ங்களா?? ஹய்யோ ஹய்யோ!!!

said...

வலக்கை எழுதுற கருத்து இடக்கைக்கு தெரியக்கூடாது என்ற உங்கள் அனானி கொள்கை வாழ்க. என் வலைப்பூவுக்கு அனானிகள் வரவேற்கப்படுகிறார்கள்

said...

வாங்க மருது!

//வலக்கை எழுதுற கருத்து இடக்கைக்கு தெரியக்கூடாது என்ற உங்கள் அனானி கொள்கை வாழ்க. என் வலைப்பூவுக்கு அனானிகள் வரவேற்கப்படுகிறார்கள் //

அதான் பாத்தேனே உங்க பதிவுல வந்து நம்ம ஆளுங்க கும்மி அடிச்சத. இன்னும் வயிறு வளிக்குது அன்னிக்கு சிரிச்சது. என்னோட 'இருவர்' பதிவை படிச்சீங்களா?

Anonymous said...

அனானிகளை ஆதரிக்கும் எங்கள் அண்ணன் லக்கியார் வாழ்க!

said...

வாங்க, கலக்குங்க...

Anonymous said...

ஆமா அது என்ன எலிக்குட்டி சோதனை?

said...

//வலைப்பூ சுனாமி லக்கியார் பாசறை said...
அனானிகளை ஆதரிக்கும் எங்கள் அண்ணன் லக்கியார் வாழ்க!
//

வாழ்க! வாழ்க! எல்லாம் அவர் தயவுதான்!

said...

//செந்தழல் ரவி said...
வாங்க, கலக்குங்க...
//

வந்து வாழ்த்தியமைக்கு ஒரு 'ஓ'.

said...

//Anonymous said...
ஆமா அது என்ன எலிக்குட்டி சோதனை?
//
பள்ளிக்கூடத்துல விலங்கியல் சோதனைக் கூடத்தில் எலி பிடித்து வந்து அறுத்து செய்வோமே அதா இருக்குமோ!!

Anonymous said...

//அனானிகள் இல்லாத தமிழ்மணம், பார்வையாளர்கள் இல்லாத கிரிக்கெட் போலாகும். அதான்.//
//. என் வலைப்பூவுக்கு அனானிகள் வரவேற்கப்படுகிறார்கள் ...மருதநாயகம்//


அனா பொன்னம்மா அக்கா வாழ்த்த வருவாங்க?

வந்தா ஒரு 'ஓஓஓஓ'...அந்த அக்காவுக்கு....

said...

//அனா பொன்னம்மா அக்கா வாழ்த்த வருவாங்க?
//

ஆமா, அது யாரு அந்த பொன்னம்மா அக்கா?

Anonymous said...

என்ன?....பொன்னம்மா அக்காவ தெரியாதா?......அட நம்ம பொன்ச தெரியாம தமிழ் ப்லொக்கரா?....

said...

//Anonymous said...
என்ன?....பொன்னம்மா அக்காவ தெரியாதா?......அட நம்ம பொன்ச தெரியாம தமிழ் ப்லொக்கரா?....
//
ஓ அவங்களா? தெரியாம கேட்டுபுட்டேன். மன்னிச்சுடுங்க.

Anonymous said...

////என்ன?....பொன்னம்மா அக்காவ தெரியாதா?......அட நம்ம பொன்ச தெரியாம தமிழ் ப்லொக்கரா?....///

பொன்னாத்தா, நம்ம மாரியாத்தா ..

said...

//பொன்னாத்தா, நம்ம மாரியாத்தா //
அய்யா!! அவுங்களை கொஞ்சம் விட்டுரீங்களா?

said...

//வலக்கை எழுதுற கருத்து இடக்கைக்கு தெரியக்கூடாது என்ற உங்கள் அனானி கொள்கை வாழ்க..//

பார்ரா....

said...

//ஆழியூரான் said...

பார்ரா....
//

பாத்தா மட்டும் போதாது. நீங்களும் இடக்கைக்கு தெரியாம கொஞ்சம் எழுதிட்டு போனும். புரியுதா??

Anonymous said...

///அனானியாக வந்து மறுமொழி இடுவதை தடுத்து வைக்கும் கொள்கை என்னவென்று எனக்கு இதுவரை விளங்கவில்லை. யாரா இருந்தா என்ன? அவன் என்ன சொல்ல வர்ரான்னு தான் பாக்கணும்.////

இதைத்தான் நான் என் ஆத்துக்காரர் மொகம்மது ராபர்ட் பாய் இடம் கூறி சந்தோஷப்பட்டோம்.

Anonymous said...

அனானிகளை அனுமதிக்காத லக்கியார்க்கு எமது கடும் கண்டனங்கள்.
அவர் மீன்டும் அனுமதிக்கவில்லை என்றால் அவரது ரசிகர் மன்றன்கள் கலைக்கப்பட்டு லொடுக்கு பான்டி ரசிகர் மன்றங்களாக மாற்றப்படும்.

லக்கிலுக் ரசிகர் மன்றம்
அடிலைட் கிளை
ஆஸ்ட்ரேலியா

Anonymous said...

அனானிகளை அனுமதிக்காத லக்கியார்க்கு எமது கடும் கண்டனங்கள்.
அவர் மீன்டும் அனுமதிக்கவில்லை என்றால் அவரது ரசிகர் மன்றன்கள் கலைக்கப்பட்டு லொடுக்கு பான்டி மன்றங்களாக மாற்றப்படும்.

லக்கிலுக் ரசிகர் மன்றம்
அடிலைட் கிளை
ஆஸ்ட்ரேலியா

Anonymous said...

//
பள்ளிக்கூடத்துல விலங்கியல் சோதனைக் கூடத்தில் எலி பிடித்து வந்து அறுத்து செய்வோமே அதா இருக்குமோ!!
//

வலை தள்த்தில் எலிகளை சோதனை செய்வதை நான் கடுமையாக எதிர்கிறேன்.

எலிகளின் விடுதலைக்காக லொடுக்கு பாண்டி அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார்கள் ....

Anonymous said...

//
பள்ளிக்கூடத்துல விலங்கியல் சோதனைக் கூடத்தில் எலி பிடித்து வந்து அறுத்து செய்வோமே அதா இருக்குமோ!!
//

வலை தளத்தில் எலிகளை சோதனை செய்வதை நான் கடுமையாக எதிர்கிறேன்.

எலிகளின் விடுதலைக்காக நமது தலைவர் லொடுக்கு பாண்டி அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார்கள் ....

said...

//அடுத்தாத்து லிண்டா அம்புஜம் said...

இதைத்தான் நான் என் ஆத்துக்காரர் மொகம்மது ராபர்ட் பாய் இடம் கூறி சந்தோஷப்பட்டோம்.
//

இது என்ன குடும்பமா? பல்கலை கழகமா?

Anonymous said...

நாங்க கணினி கயவர்களா இருப்பதுக்கு யார் காரணம் ?

அடுத்தவன் பேரில் பேடியாக போடாமல் அனானியாக தானே போடுகிறோம்.

இதில் என்ன பிரச்சினை உங்களுக்கு ?

வலைப்பதிவு மீட்டிங்கில் பேசும் அளவுக்கு இது முக்கியமான விஷயமா ?

ஆயிரம் பிரச்சினையை பற்றி பேசி இருக்கலாம், சமூக பொருளாதாரத்தை பற்றி பேசி இருக்கலாம், அதை விடுத்து,

அனானி பஞ்சாயத்து முக்கியமாக போயிற்றா உங்களுக்கு ?

அனானியா பின்னூட்ட்டம் போடும் எங்களை வெட்டி என்பவர்கள், அனானி பின்னூட்டம் பற்றி வலைபதிவில் பேசுபவர்களும் வெட்டி தான்.

இது எப்பிடி இருக்கு னைனா ?

Anonymous said...

பக் பக் என்று அடித்துக்கொள்ளும்..அனானியாக மப்புல் பின்னூட்டம் போடும்போது எங்கே நம்ம ஐ.டி தெரிந்து விடுமோ என்று.

ஆகவே, அனானி பின்னூட்டம் போடும்போது சரக்கு சாப்பிடுவதில்லை என்று அனானி சங்கம் கொள்கை முடிவு எடுத்துள்ளது.

said...

//அவரது ரசிகர் மன்றன்கள் கலைக்கப்பட்டு லொடுக்கு பான்டி மன்றங்களாக மாற்றப்படும்.

லக்கிலுக் ரசிகர் மன்றம்
அடிலைட் கிளை
ஆஸ்ட்ரேலியா
//

ஐயோ!! எனக்கு ஒரு தர்ம சங்கடமான (இதுக்கு தூய தமிழில் என்னவென்று சொல்வது) ஒரு நிலைங்கோ...

Anonymous said...

///இது என்ன குடும்பமா? பல்கலை கழகமா?///

நல்லதொரு குடும்பம், பல்கலை கழகம்.

அனானிமொழி வழங்கும் வழங்கும் கதம்பம்..

ஹோ ஹோ ஹோ

Anonymous said...

///அனானிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணன் மகேந்திரனுக்கும் ஒரு 'ஓ' போடுங்க...///

ஓ ஓ ஓ ஓ ஓ

5 ஓ போட்டாச்சிங்க. மொத்தம் ஆறு.

அண்ணன் மகேந்திரன் அதர் ஆப்சன் வைத்துள்ளதால் அவருக்கு ஓ மட்டும் அல்ல, பல நூறு பின்னூட்டங்களை அதிவேகமாக போட்டுள்ளோம்..அமுக சார்பில்..

Anonymous said...

அனைத்து அனானி முன்னேற்ற கழகங்களும் ஒருங்கினைக்கப்பட்டு, அவுஸ்திரேலியாவில் இருந்து ( ஆஸ்திரேலியான்னும் சொல்லலாம்) செயல்படும்.

இதில்

லக்கிலூக் ரசிகர் மன்றம்,
செந்தழல் ரவி ரசிகர் மன்றம்,
லொடுக்கு பாண்டி ரசிகர் மன்றம் அனைத்தும் செயல்படும்.

ஆழியூரான், பாலபாரதி, மகேந்திரன் பெ, கோவிகண்ணன்(இப்போது அனானி ஆப்சனை நீக்கி விட்டதால் இவருக்கு ஆட்டத்தில் இடம் இல்லை) போன்ற அனானி ரசிகர்களுக்கு, பதிவுக்கு 50 பின்னூட்டம் போட்டு ஆதரவு தரப்படும். ( மொக்கை பதிவுகளுக்கு)

பதிவு கொஞ்சம் தரமானதாக இருக்கும் பட்சத்தில் 100 சாதாரனம்.

தங்கள் பதிவுகளில் அனானி ஆதரவு வேண்டுவோர், தாராளாமாக வாய்ப்பு கேட்கலாம்.

Anonymous said...

எங்கள் தானைத்தலைவர் வலைப்பூ சுனாமி லக்கிலூக் மன்றத்தை கலைப்பதாக சொல்லிய அனானி, தலைமை மன்றத்தின் எந்த அனுமதியையும் பெறவில்லை.

ஆகவே, அவரை கழகத்தில் இருந்து, நீக்கி உத்தரவிடுகிறோம்.

அனானி முன்னேற்ற கழகம்,
வோடாபோன் பில்டிங்,
சேட்ஸ்வுட் ரயில்வே ஸ்டேஷன்,
அவுஸ்திரேலியா.

(வில்லோபி, மற்றும் ஆர்பன் மன்றங்கள் பரிசீலனையில் உள்ளன)

said...

//வலை தள்த்தில் எலிகளை சோதனை செய்வதை நான் கடுமையாக எதிர்கிறேன்.

எலிகளின் விடுதலைக்காக லொடுக்கு பாண்டி அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார்கள் ...//
ஆமாம். எலி சாகும் வரைதானே?

Anonymous said...

அனானிகளுக்கு தலைவர் அவரது பதிவுகளில் தகுந்த இடஒதுக்கீடு தருவதாக உறுதியளித்திருக்கிறார். எனவே வதந்திகளை நம்பாமல் தலைவர் வழியிலேயே தொடர்ந்து செயல்பட உடன்பிறப்புகளை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.

said...

//கணினி கயவன் said...
நாங்க கணினி கயவர்களா இருப்பதுக்கு யார் காரணம் ?
//
ஆம். கணிணி கயவர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள்.

//அனானியா பின்னூட்ட்டம் போடும் எங்களை வெட்டி என்பவர்கள், அனானி பின்னூட்டம் பற்றி வலைபதிவில் பேசுபவர்களும் வெட்டி தான்.//

அய்யா! பின்னிட்டீங்க போங்க.

said...

//நல்லதொரு குடும்பம், பல்கலை கழகம்.

அனானிமொழி வழங்கும் வழங்கும் கதம்பம்..//

கவுத கவுத!! இன்னும் எழுதுங்க!

said...

//பதிவு கொஞ்சம் தரமானதாக இருக்கும் பட்சத்தில் 100 சாதாரனம்.//

இப்பதிவும் தரமானது என நம்புகிறேன்.

Anonymous said...

//ஆமாம். எலி சாகும் வரைதானே?///

நல்ல நகைச்சுவை உணர்வைய்யா உமக்கு. பல பின்னூட்டங்களுக்கு தகுதியானவர்தான் நீர்..

பின்னிட்டீங்கய்யா..

Anonymous said...

லொடுக்குக்கே தொழில் கற்றுக் கொடுத்தது எங்கள் வலைப்பூ சுனாமி லக்கியார் தான். எனவே லொடுக்காராம் எங்கள் பாசறையில் இணைந்து அதர்-அனானி ஆப்ஷன் என்றாலே உச்சா போகும் கிழட்டுப் பதிவாளர்களை எதிர்த்து போரிட வேண்டும் என பாசறை சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Anonymous said...

//இப்பதிவும் தரமானது என நம்புகிறேன்.//

இதனை அனானி முன்னேற்ற கழக செயற்க்குழு சிங்கையில் கூடி முடிவெடுக்கும்.

ஹோட்டல் அன்னபூரணி,
முஸ்தபா பலசரக்கு கடை பின்புறம்,
லிட்டில் இண்டியா.

(அருகில் உள்ள ஹோட்டல் நியூ பார்க் கில் அறை எடுத்து தண்ணியடிக்கப்படும் அறை வாடகை 95 சிங்கை டாலர்கள - டேக்ஸ் தனி)

Anonymous said...

////லொடுக்குக்கே தொழில் கற்றுக் கொடுத்தது எங்கள் வலைப்பூ சுனாமி லக்கியார் தான். எனவே லொடுக்காராம் எங்கள் பாசறையில் இணைந்து அதர்-அனானி ஆப்ஷன் என்றாலே உச்சா போகும் கிழட்டுப் பதிவாளர்களை எதிர்த்து போரிட வேண்டும் என பாசறை சார்பாக கேட்டுக் கொள்கிறோம்./////

சில கிழட்டு பதிவாளார்கள், உச்சா மட்டுமல்ல, கக்காவும் போய்விட்டதாக எங்கள் நார்த் சிட்னி அலுவலக்த்துக்கு தகவல் வந்தது.

Anonymous said...

//எங்கள் தானைத்தலைவர் வலைப்பூ சுனாமி லக்கிலூக் மன்றத்தை கலைப்பதாக சொல்லிய அனானி, தலைமை மன்றத்தின் எந்த அனுமதியையும் பெறவில்லை.

ஆகவே, அவரை கழகத்தில் இருந்து, நீக்கி உத்தரவிடுகிறோம்//

Ayya I am very sorry...

//அனானிகளுக்கு தலைவர் அவரது பதிவுகளில் தகுந்த இடஒதுக்கீடு தருவதாக உறுதியளித்திருக்கிறார்//

Thalaivaruku jae!!

லக்கிலுக் ரசிகர் மன்றம்
அடிலைட் கிளை
ஆஸ்ட்ரேலியா

Anonymous said...

ஆச்சா ஐம்பது ? கிளம்பட்டுமா நாங்க ?

உமது மகிழ்ச்சி, எமது மகிழ்ச்சி.

said...

//ஆச்சா ஐம்பது ? கிளம்பட்டுமா நாங்க ?

உமது மகிழ்ச்சி, எமது மகிழ்ச்சி.

//
ஆச்சுப்பு!! அப்பப்போ இந்த மாதிரி கூட்டமா வந்து கும்மி அடிச்சுட்டு போங்க. புண்ணியமா போவும். சேவைக்கு நன்றி.

said...

//Thalaivaruku jae!!
//

பிற மொழிச் சொற்களை தவிர்க்கவும். :)

said...

லொடுக்கேய்!!

உம்ம பக்கம் காமெடி சூறாவளியா இருக்கு!!

புல் பார்ம்ல இருக்கீங்க போல! அடிச்சி ஓட்டுங்க!

said...

*******Dont publish********

//அறிந்தும் அறியாமலும் பெறுமையுடன் வழங்குபவர்கள்//

அது பெருமையா, அல்லது பொறுமையா?

*******Dont publish********

said...

//4/9/06 5:55 AM மணிக்கு, தம்பி சொன்னது...…

*******Dont publish********

//அறிந்தும் அறியாமலும் பெறுமையுடன் வழங்குபவர்கள்//

அது பெருமையா, அல்லது பொறுமையா?

*******Dont publish********
//
போகிற போக்க பாத்தா 'பொறுமை' சரின்னு தோனுது.

ஆமா, அது என்ன டோன்ட் பப்லிஷ்? என்னை பின்னூட்ட கயமைத்தனம் செய்ய தூண்டுகிரீரோ???

Anonymous said...

//எலிகளின் விடுதலைக்காக லொடுக்கு பாண்டி அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார்கள் ...
ஆமாம். எலி சாகும் வரைதானே?
லொடுக்கு பாண்டி

"அவர்கள்" என்ற வார்தையை கவனிக்கவில்லையா?...
ஓ..அந்த எலி நீதானா?.. அவன்தான நீ?...

ஓ.கே. உமது பெயர் இனி லொடுக்கு பாண்டி இல்ல. இனி மேல் எலி பாண்டி.

Anonymous said...

//எலிகளின் விடுதலைக்காக லொடுக்கு பாண்டி அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார்கள் ...
ஆமாம். எலி சாகும் வரைதானே?
//

"அவர்கள்" என்ற வார்தையை கவனிக்கவில்லையா?...
ஓ..அந்த எலி நீதானா?.. அவன்தான நீ?...

ஓ.கே. உமது பெயர் இனி லொடுக்கு பாண்டி இல்ல. இனி மேல் எலி பாண்டி.

said...

//இனி மேல் எலி பாண்டி.//

யோவ் அனானி
உனக்கு எப்படியா தெரிஞ்சது?

Anonymous said...

கெட்ட வார்த்தைகள் இல்லாத எந்த ஒரு அனானி பின்னோட்டத்தையும் அனுமதிக்கலாம்.லொடுக்கு சொல்வது போல் 'யாரா இருந்தா என்ன? அவன் என்ன சொல்ல வர்ரான்னு தான் பாக்கணும்'

வலைபூ ஒரு பொதுமேடை...எதிர்கருத்துக்கள் வரத்தான் செய்யும்.

said...

//"அவர்கள்" என்ற வார்தையை கவனிக்கவில்லையா?...
ஓ..அந்த எலி நீதானா?.. அவன்தான நீ?...
//
இல்லங்க, அதை இப்படி படிக்கிறது தான் சரி. ' எலிகளின் விடுதலைக்காக லொடுக்கு பாண்டி அவர்கள், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார்கள்.' அதனால் எலி சாகும் வரை என்பதே சரி.

said...

////இனி மேல் எலி பாண்டி.//

யோவ் அனானி
உனக்கு எப்படியா தெரிஞ்சது?

//
அடப் பாவிகளா!!! முடிவே பண்ணிட்டீங்களா??

said...

//4/9/06 7:15 AM மணிக்கு, செல்வமணி சொன்னது...…

வலைபூ ஒரு பொதுமேடை...எதிர்கருத்துக்கள் வரத்தான் செய்யும்.

//

எதிர் கருத்தை கண்டு தொடை நடுங்காமல், எதிர் கொள்ள வேண்டும். இல்லையேல் டைரியில் மட்டுமே எழுதிக்கொள்ள வேண்டும்.