Showing posts with label நாட்டு நடப்பு. Show all posts
Showing posts with label நாட்டு நடப்பு. Show all posts

Saturday, November 04, 2006

சன்னும், ஜெயாவும் இல்லாவிடில்....

ரொம்ப நாளாவே மனசுல உறுத்திக்கிட்டு இருக்கிற ஒரு செய்திங்க. தமிழ்கூறும் நல்லுலகிற்கு தொண்டாற்றி வரும் ரெண்டு சேனல்களைப் பற்றிய செய்திங்க. அதிலும் அவர்களின் செய்திகளைப் பற்றிய செய்திங்க.

ஆமாங்க. உலகில் உள்ள தமிழர்களுக்கு அவர்களின் அன்றாடப் பொழுதே இந்த ரெண்டும் இல்லன்னா போவதே கொஞ்சம் கடினம் தாங்க. ரெண்டில் ஒன்றில்லன்னாலும் ஒன்றாவது வேணும். ரெண்டும் இருந்தால் மிகச் சிறப்பு. ரெண்டும் இல்லன்னா எங்கேயோ ஒரு இருட்டுலகில் நீங்கள் வாழ்ந்து வருகிறீர்கள் என்று பொருள். காமெடி இல்லங்க சீரியசாத் தான் சொல்றேன். இந்த இரண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களால் தமிழ் பெண்களை (கனிசமான ஆண்களும் உண்டென்பது எனது வாதம்) அழவைப்பது தவறானது என்று எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு சேனல்களின் செய்திகள் மிக அருமைங்க. நீங்கள் இந்த இரண்டு சேனல்களும் கிடைக்கப் பெற்றிருந்தீர்களெனில் நீங்கள் கொடுத்து வைத்தவர். இருவரின் செய்திகளையும் தவறாது கண்டு வாருங்கள் (கண்டு வருபவர்களுக்குத் தெரியும்). தமிழகத்தில் நடக்கும் அரசியல் அட்டூழியங்கள் அம்பலமாகும். எதிர்கட்சியின் தகிடுதத்தங்கள் சன் டிவியில் அலசி ஆராய்ந்து அக்கு வேறு ஆணி வேராக காட்டுவார்கள். 'அவர்கள் மட்டும் ஒழுங்கா என்ன' என வரிந்து கட்டிக்கொண்டு ஜெயாவில் ஆளுங்கட்சி (மைனாரிட்டி)யின் அராஜகம் என அம்பலப்படுத்தப்படும். அரசியல் கட்சிகளின் நன்மைகள் (செஞ்சாத்தானே ??) நமக்குத் தெரிய வருகின்றதோ இல்லையோ, அவர்கள் செய்யும் அஜால் குஜால்கள் தெரிய வருகின்றது. மாறி மாறி சேறு வாரி இறைப்பது ஒரு வகைக்கு நல்லது தான். சில நேரங்களில் நகைச்சுவைக் காட்சிகள் கூட தோற்கும். இதற்காகவாவது இருவருக்கும் நாம் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம் (ரெண்டு பேருக்கும் ஓட்டு போடுங்க).


நீங்களே யோசிச்சுப் பாருங்க, இந்த இரண்டு சேனல்களும் இல்லாவிடில்.....

Monday, September 25, 2006

உலக வெப்பநிலை உயர்வால் (Global Warming) மெரினாவுக்கு ஆபத்தா?

ஆம் என்றே தோன்றுகிறது இந்த இணையத்தளத்தின் கணிப்புப் படி. உலக வெப்ப நிலை உயர்ந்தால் கடல் மட்டம் 7 மீட்டர் அளவு வரை உயரும் என்று ஆய்வாளர்களால் அறியப்படுகிறது. அவ்வாறு நிகலுமாயின் உலகின் நிலப்பரப்பில் எந்த அளவிற்கு கடல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த தளம் கணித்து அதற்கேற்ப நீல வண்ணத்தை பாதிக்கப்படும் இடங்களாக காட்டுகிறார்கள்.

கீழே சென்னை நகரத்தின் படம்.

Photobucket - Video and Image Hosting

எனது ஊர் கடற்கரையிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. இதன் கூற்றுப்படி பார்த்தால் எங்கள் ஊருக்கு அழகான (?!) கடற்கரை கிடைக்கும் என நினைக்கிறேன். நீங்களும் இத்தளத்தினுள் விரைந்து சென்று உங்கள் வீடு பாதுகாப்பாக இருக்குமா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். மெரீனாவிற்கு ஆபத்து என்றே தோன்றுகிறது. மெரீனா முழுவதும் கடலினுள் செல்லும் வாய்ப்பு உள்ளது. எழும்பூரில் வசிப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி. உங்களுக்கு அழகான கடற்கரை பார்த்தாற் போன்ற வீடு அமைய வாய்ப்புள்ளது.

link: http://flood.firetree.net/

Wednesday, August 30, 2006

அமெரிக்காவுக்கு இரான் சவால்!!

இன்றைய Gulf News நாளேட்டின் முகப்பு செய்தி:





இதில் யார் போக்கை திசை திருப்புகிறார்கள் என்பது எனக்கு குழப்பமாக இருக்கிறது. ஆமா! அதென்ன P5+1 பேக்கேஜ்? அமெரிக்கா பேக்கேஜ் லாபமில்லாமல் இவ்வளவு கூவாது என்று பொருளோ??? என்னமோ போங்க!

இதனை குறித்த விவாதங்கள் வரவேற்கப் படுகின்றன.