ஒரு ஆறு மாதத்திற்கு முன் தான் நான் தமிழ்மணத்திற்குள் எட்டி பார்த்தேன். பார்த்தவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. நமக்கு தெரியாம இங்க இப்படி ஒரு கூத்து நடக்குதான்னு. இங்க எப்படி? யார் மூலம்? நான் தலய காட்டுனேன்னு தான் மறந்து போச்சு.
உண்மையைச் சொன்னால் இங்கு தமிழில் எழுதுபவர்களை பார்த்து மகிழ்ச்சியடந்தேன். பலர் பல நிகழ்வுகளை தெரிந்து வைத்திருக்கின்றனர். அதோடில்லாமல் அதை விவாத்திற்குள்ளாக்கவும் தெரிந்து வைத்திருக்கின்றனர். நல்ல செய்திதான், ஆனால் அவர்களையும் அறியாமல் சிலரால் திசை திருப்பப்பட்டு இறுதியில் தனி மனித தாக்குதலோ / இன தாக்குதலோ தான் மிஞ்சுகிறது என்பது வருத்தம் அளிக்கிறது. ஆனால் இங்கு வந்து வாசிக்க தொடங்கியதிலிருந்து இணையத்தில் தவறாது நாள்தோறும் வாசித்து வந்த நாளேடுகள் வாசிப்பை நிறுத்தி விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அந்த அளவிற்கு எனக்கு தமிழ்மணத்தில் செய்திகள் கிடைத்ததும், நாளேடுகள் அனைத்தும் நடுநிலை இழந்து இருப்பதும் தான்.
சரி, எத்தனை நாட்களுக்குத் தான் வாசகராகவே இருப்பது, நாமலும் பட்டய கெளப்பலாம்னு தான் (அதாங்க உளறி கொட்டலாம்னு) இறங்கிட்டேன். இது தான் என் முதல் பதிவு. முதல் பதிவு எதைப் பத்தி எழுதலாம்னு யோசிச்சேன். ஏன் நம்மலோட தமிழ்மண உறவைப்பத்தி எழுதக்கூடாதுன்னு அதையே எழுதிட்டேன். என்ன இந்த தமிழ் தட்டச்சு தான் கொஞ்சம் மண்ட காயுது. போக போக சரியாகிடும். பாக்கலாம்.
ஆனா இங்க தான் இத்தனை குழுக்கள் இருக்கே எப்படி சமாளிக்க போரேன்னு தெரியல. ஆரியர், திராவிடர், ஆத்திகர், நாத்திகர், பார்ப்பனர், இஸ்லாமியர் இன்னும் சில. எப்படியோ குழு சேர்ந்து கும்மி அடிக்காம இருக்கத்தான் கொஞ்சம் மெனக்கெடனும். அப்பப்போ எதையாவது இங்க வந்து உளறலாம்னு இருக்கேன். இந்த வழிப்போக்கன் தமிழ் பதிவுலகத்திலும் கடந்து செல்ல வந்து விட்டான்.
குறிப்பு: இங்கு தமிழ் பிழைகள் காணப்படலாம், பிழை பொறுக்கவும்.