மனம்கவர் சென்னை ரசிகர்கள்
விளையாட்டை பெரும்பாலான மக்கள்(ரசிகர்கள்) விளையாட்டாக எடுக்காமல் ஒரு வினையாகவே எடுத்துக்கொண்டு அதற்காக அடிதடிகளில் கூட இறங்கி விடுவதுண்டு. மைதானங்களில் வெற்று பாட்டில்கள், சில சமயங்களில் கற்கள் மற்றும் கையில் கிடைப்பவற்றை எல்லாம் தன்மானத்தையும் சேர்த்து எரிந்து விடுவதுண்டு. நம் நாட்டில் அனேக கிரிக்கெட் மைதானங்களில் இந்த காட்சிகளை அடிக்கடி காணலாம் நம் அணியும் அடிக்கடி தோற்பதால்.
ஆனால், இவற்றிற்கெல்லாம் விதி விலக்காக இருப்பவர்கள் நம் தமிழர்கள். நம் சென்னை ரசிகர்கள். இவர்கள் ஆட்டத்தை (கிரிக்கெட்) ரசிக்கும் விதத்தை பார்த்து உலகின் பல நாட்டு வீரர்களும் வியந்து போற்றியுள்ளனர். இதில் வாசிம் அக்ரமும் அடக்கம். இன்றும் அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாக, இந்தியாவிற்கெதிரான பரபரப்பான டெஸ்ட் போட்டியில் 12 ரன்களில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதும் சேப்பாக்கமே எழுந்து நின்று 5 நிமிடம் கைதட்டி வாழ்த்தியதை குறிப்பிடுகிறார். அந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டெல்லியில் தான் தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், (ரசிகர்கள் மற்றும் பாகிஸ்தான் எதிர்பாளர்களிடமிருந்து) பாதுகாப்பு காரணமாக சென்னைக்கு மாற்றப்பட்டது. அந்த போட்டியில் தான் வாசிமின் மனம் கவர்ந்த இந்த நிகழ்ச்சி நடந்தது. அது அவர் ஒரு பேட்டியின் பொது கூறியதாவது :
What is your favorite city in India?
Wasim: From a cricket standpoint, I like Chennai. I will never forget the standing ovation we (Pakistan) got when we won a test match there. It is true sportsmanship.
மேலும் சயீத் அன்வர் அந்த சாதனை ரன்களான 196-ஐ எடுத்தபோதும் இது போலவே எழுந்து நின்று கைதட்டி விளையாட்டை விளையாட்டாய் ரசித்தவர்கள் நம் தமிழர்கள். இது போன்று பல கிரிக்கெட் வீரர்களின் அன்பை பெற்றவர்கள் நம் சென்னை ரசிகர்கள். அதில் நமக்கு பெருமையே.
நேற்று கூட Madras Cricket Association (MCA) - வின் 75 ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ட்ராவிடும் சச்சினும் சென்னை ரசிகர்களை புகழ்த்து தள்ளினர்.
ட்ராவிட் கூறியதாவது :
Dravid, in his address to the packed house, called it a "privilege" to play at this venue. "This venue has the best crowd in India, and it's always a pleasure to come and play in front of a fantastic, well-knowledgeable crowd," he said. "Tamil Nadu cricket has, over the past 75 years, produced some great cricketers and some great teams, and one of the greatest venues in world cricket. If you ask any of the current or past players who've played around the country and around the world, they'll say it's always a pleasure to come to Chennai and play here."
சச்சின் கூறியதாவது:
"Needless to say it's my favourite venue and crowd. I admire the knowledgeable crowd. It's very important for us, given that we haven't' been doing too well, to come here and be supported."
இதெயெல்லாம் படிக்கும் போதும் கேட்கும் போதும் எனக்கு உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. நானும் ஒரு டெஸ்ட் போட்டியை சேப்பாக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன் எனும் போது இன்னும் பெருமையாக இருக்கிறது.
இத்தனை சிறப்பு வாய்ந்த ரசிகர்களுக்கு நன்றி கடனாக இந்திய அணி ஒரு வெற்றியை பரிசாக வழங்குமா இன்று?
