Wednesday, April 18, 2007

துபையில் துணிச்சலான கொள்ளை - வீடியோ

துபையில் உள்ள Wafi City என்ற ஷாப்பிங் சென்டரில் உள்ள நகைக்கடையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் ஒரு துணிச்சலான கொள்ளை நடந்துள்ளது. 50 மில்லியன் திர்ஹாம்கள் (1 Dhm = 11 Rs)மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஷாப்பிங் சென்டர் திறந்திருந்த நேரத்தில் பொதுமக்கள் முன்னிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் துபையில் பெரும் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது நன்றாக திட்டமிடப்பட்டு செய்த கொள்ளையாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இரண்டு Audi A8 கார்களுடன் ஷாப்பிங் சென்டரின் கண்ணாடி வாயிலை இடித்து உடைத்தவாரு காரை ஷாப்பிங் சென்டருக்குள் ஓட்டி வந்துள்ளனர். அவர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த நகைக்கடையின் கண்ணாடியை (இங்கு பெரும்பாலும் நம் நாட்டிலுள்ளதைப் போல் இரும்புக்கதவுகள் இல்லை. கண்ணாடி கதவுகளே) கார் மூலமே உடைத்து மூன்று பேர் மட்டும் இறங்கி கடையில் புகுந்து இரண்டு நிமிடங்களுக்குள் முடிந்தவற்றை அள்ளிக்கொண்டு காரில் பறந்து சென்றுள்ளனர். இவர்கள் கருப்பு உடையணிந்து முகமூடியுடன் காணப்பட்டுள்ளனர். கையில் துப்பாக்கிகளும் வைத்திருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.



மூன்று நிமிடங்களுக்குள் காவல் துறையினர் விரைந்து வந்தும் அவர்களை பிடிக்க முடியவில்லை. காரை எடுத்துக் கொண்டு கிளம்பிய கொள்ளையர்கள் துபை- அபுதாபி சாலையில் சென்றிருக்கக் கூடும் என்று தெரிகிறது. பின்னர், இரண்டு கார்கள் இந்த சாலையோரத்தில் எரிந்த நிலையில் கிடந்துள்ளன. கொள்ளையர்கள் வெறெங்கேனும் தப்பிச் சென்றிருக்கக் கூடும் என்று காவல் துறை தெரிவிக்கிறது.



அமீரகத்தில் முதன் முறையாக இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. ஹாலிவுட் சினிமாக்களில் பார்ப்பது போன்ற கொள்ளைச் சம்பவம் இது. நகரங்கள் பெருத்து வருவதற்கு/வளர்வதற்கு கொடுக்கப்பட்ட விலையோ?

இந்த கொள்ளை நடந்த நிகழ்ச்சியை அங்கு நின்றிருந்த ஒருவர் தனது கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார். மேலும் சிலர் புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.

Sunday, April 15, 2007

க்ரீமி லேயரும் நானும்

மக்களே! சில நாட்களாகவே பதிவிடாமல் (??) இருந்து விட்டேன். வெறும் வாசகனாகவே மட்டுமே இருந்து வந்தேன்(??). இடையிடையே பின்னூட்டியும் வந்தேன். நான் தலைமறைவாக இருந்ததின் காரணம் சில துபை வலைப்பதிவர்களுக்கு மட்டுமே தெரியும்.

சரி, மேட்டருக்கு வருவோம். இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ்மணத்தில் சுவராஸ்யத்திற்கு குறைவில்லாமல் நிகழ்வுகள் நிகழ்ந்தவண்ணமே இருந்தன. வழக்கம்போல வெட்டு குத்து என கொலைவெறி தணியாமலே இருந்து வந்திருக்கிறது.

அப்படி வந்து (மீண்டும்) போன பிரச்சனைகளில் ஒன்றுதான் இந்த 'க்ரீமி லேயர்' மேட்டர். நானும் இதில் அப்படி என்னதான் இருக்கின்றதென விழுந்து விழுந்து (அடிபடாமல் தான்) படித்தேன். கொஞ்சம் மரமண்டை தான். இருந்தாலும் இதில் என்னால் ஒரு முடிவுக்கு வரமுடிந்தது. நாமலும் இந்த 'க்ரீமி லேயர்' பற்றிய நமது நிலைப்பாட்டை தெரிவித்து விடுவதென.

எனக்கு எப்பவுமே இந்த க்ரீமி லேயர் மீது மோகம் இருந்ததில்லை. எனக்கு பிடிக்கவே பிடிக்காது. அதை தவிர்த்தே வந்திருக்கிறேன். ஆனால் பாருங்கள் என் வீட்டிலேயே இதைப் பற்றி இரண்டு விதமான எண்ணங்கள். சிலருக்கு மிகவும் பிடிக்கும். அதற்காக சண்டை சச்சரவுகள் எதுவுமே வருவதில்லை. நான் ஊரில் இருந்த போதும் சரி இப்போது துபையில் இருந்த போதும் சரி. என்னுடைய நிலைப்பாடு 'ஐ ஹேட் க்ரீமி லேயர்' தான். அதற்காக, யாரையும் நான் 'க்ரீமி லேயர் வைக்கக்கூடாதென' வற்புறுத்த போவதில்லை. எனக்கு பிடிக்கவில்லை எனில் ஒதுக்கிவிடுவேன்......



ஒதுக்கி விட்டு கேக்(cake)-n மற்ற பாகங்களை அப்படியே சாப்பிடுவேன். திகட்டும் அந்த க்ரீமி லேயர் புடிக்கலைங்கிறதுக்காக கேக் சாப்பிடாம இருக்க முடியுமா?

ரொம்ப நாள் கழிச்சு வந்ததும் 'மொக்கை' போட்டுட்டேனோ? மக்களே மன்னிச்சுக்குங்க...