க்ரீமி லேயரும் நானும்
மக்களே! சில நாட்களாகவே பதிவிடாமல் (??) இருந்து விட்டேன். வெறும் வாசகனாகவே மட்டுமே இருந்து வந்தேன்(??). இடையிடையே பின்னூட்டியும் வந்தேன். நான் தலைமறைவாக இருந்ததின் காரணம் சில துபை வலைப்பதிவர்களுக்கு மட்டுமே தெரியும்.
சரி, மேட்டருக்கு வருவோம். இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ்மணத்தில் சுவராஸ்யத்திற்கு குறைவில்லாமல் நிகழ்வுகள் நிகழ்ந்தவண்ணமே இருந்தன. வழக்கம்போல வெட்டு குத்து என கொலைவெறி தணியாமலே இருந்து வந்திருக்கிறது.
அப்படி வந்து (மீண்டும்) போன பிரச்சனைகளில் ஒன்றுதான் இந்த 'க்ரீமி லேயர்' மேட்டர். நானும் இதில் அப்படி என்னதான் இருக்கின்றதென விழுந்து விழுந்து (அடிபடாமல் தான்) படித்தேன். கொஞ்சம் மரமண்டை தான். இருந்தாலும் இதில் என்னால் ஒரு முடிவுக்கு வரமுடிந்தது. நாமலும் இந்த 'க்ரீமி லேயர்' பற்றிய நமது நிலைப்பாட்டை தெரிவித்து விடுவதென.
எனக்கு எப்பவுமே இந்த க்ரீமி லேயர் மீது மோகம் இருந்ததில்லை. எனக்கு பிடிக்கவே பிடிக்காது. அதை தவிர்த்தே வந்திருக்கிறேன். ஆனால் பாருங்கள் என் வீட்டிலேயே இதைப் பற்றி இரண்டு விதமான எண்ணங்கள். சிலருக்கு மிகவும் பிடிக்கும். அதற்காக சண்டை சச்சரவுகள் எதுவுமே வருவதில்லை. நான் ஊரில் இருந்த போதும் சரி இப்போது துபையில் இருந்த போதும் சரி. என்னுடைய நிலைப்பாடு 'ஐ ஹேட் க்ரீமி லேயர்' தான். அதற்காக, யாரையும் நான் 'க்ரீமி லேயர் வைக்கக்கூடாதென' வற்புறுத்த போவதில்லை. எனக்கு பிடிக்கவில்லை எனில் ஒதுக்கிவிடுவேன்......
ஒதுக்கி விட்டு கேக்(cake)-n மற்ற பாகங்களை அப்படியே சாப்பிடுவேன். திகட்டும் அந்த க்ரீமி லேயர் புடிக்கலைங்கிறதுக்காக கேக் சாப்பிடாம இருக்க முடியுமா?
ரொம்ப நாள் கழிச்சு வந்ததும் 'மொக்கை' போட்டுட்டேனோ? மக்களே மன்னிச்சுக்குங்க...
13 comments:
பதிவு போடச்சொல்லி நச்சரித்து வந்த தம்பி, அபிஅப்பா, முத்துக்குமரனுக்கு இந்தப் பதிவு.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்கன்னு சொல்லலாம்னு நினச்சேன்....
எல்லார்த்துக்கும் கேக் குடுத்துட்டீங்க...
(எத்தன நாளைக்கு தான் அல்வாவே குடுத்துட்டு இருக்கிறது)
//மங்கை said...
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்கன்னு சொல்லலாம்னு நினச்சேன்....
எல்லார்த்துக்கும் கேக் குடுத்துட்டீங்க...
//
வாங்க வாங்க!!
அதாவது, இந்த மாதிரி சென்ஸிடிவ் மேட்டரெல்லாம் எழுதக்கூடாது என்ற எனது கொள்கை முதல் முறையாக மீறியிருக்கிறேன். :)
கிரீமி லேயர் அனுபவிப்பு தொடர்வது நல்லதுக்கு இல்லைன்னு சொன்னாலும் கேக்காதவங்களுக்கும் கேக்குற மாதிரி கேக்கை வச்சு சொல்லியிருக்கீங்க!
//கேக் சாப்பிடாம இருக்க முடியுமா?//
கேக் மட்டுமே சாப்பிட்டுகொண்டே இருக்க முடியுமா? :-))
கேக்கும் சாப்பிட்டா நல்லது!
:-)) நடத்துங்க!
//மக்களே! சில நாட்களாகவே பதிவிடாமல் (??) இருந்து விட்டேன்//
யார் சொன்னது நீங்க பதிவு போட்டுட்டுதான் இருந்திங்க நாங்களும் படிச்சிகிட்டுதான் இருந்தோம்.
மறுபிர"வேசத்திற்கு" வாழ்த்துக்கள்.
//Hariharan # 03985177737685368452 said...
கிரீமி லேயர் அனுபவிப்பு தொடர்வது நல்லதுக்கு இல்லைன்னு சொன்னாலும் கேக்காதவங்களுக்கும் கேக்குற மாதிரி கேக்கை வச்சு சொல்லியிருக்கீங்க!
//
நண்பர் ஹரிஹரன்,
நான் அரசியலில் புழங்கும் க்ரீமி லேயரை பத்தி சொல்லவேயில்லை. எல்லாரும் க்ரீமி லேயர் பதிவு போடுறாங்களேன்னு நானும் எனக்கு தெரிஞ்ச க்ரீமி லேயர் பதிவு போட்டேன். அம்புட்டுத்தேன். :)
மத்தபடி எனக்கு நீங்கள் சொல்ல வரும் க்ரீமி லேயரைப் பற்றிய பதிவு போடும் அளவிற்கு அறிவு இன்னும் வளரவில்லை. தமிழ்மணம் தொடர்ந்து வாசித்தால் வளரும் என நினைக்கிறேன்.
//யார் சொன்னது நீங்க பதிவு போட்டுட்டுதான் இருந்திங்க நாங்களும் படிச்சிகிட்டுதான் இருந்தோம்.
மறுபிர"வேசத்திற்கு" வாழ்த்துக்கள்.//
தம்பி,
சுகந்தன்னே?
ஐ! லொடுக்கு அண்ணாத்தே!
இன்னாம்மா கண்ணு சௌக்கியமா?
//அதாவது, இந்த மாதிரி சென்ஸிடிவ் மேட்டரெல்லாம் எழுதக்கூடாது என்ற எனது கொள்கை முதல் முறையாக மீறியிருக்கிறேன். :) //
:))))
சென்ஷி
//:))))
சென்ஷி
//
ஏதோ ஒரு க்ரீமி லேயரைப் பத்தி எழுதிட்டு 'சென்ஸிடிவ்'னு ஏன் பில்ட்-அப் கொடுக்குறேன்னு நினைச்சுத்தானே சிரிக்கிறீங்க சென்ஷி?
அந்த க்ரீமி லேயரை பத்தி எழுத நிறைய பேரு இருக்காங்க.
எனக்காவது அந்த கிரீம தரலாமா?
வேண்டாம்டா அது ஊசிப்போன கேக்கு, என் பேச்சை கேக்கு:-)
என்னது திடீர்னு ஒரே பூனை படையெடுப்பா இருக்கு!!
Post a Comment