Thursday, October 25, 2007

அணு ஒப்பந்தமும் காட்டுத்தீயும்


அமெரிக்கா-இந்தியாவுடனான ஒப்பந்தம் ஏற்படவேண்டும் என்பதற்காக கூறிய காரணங்களில் ஒன்று : இந்தியாவில் 70% ஆற்றல் நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படுவதால் சுற்றுப்புற சூழல் மாசுபடுகிறது. இதை இந்த ஒப்பந்தம் மூலம் தடுக்கலாம்.

அடடா! அமெரிக்காவிற்கு உலகத்தின் மீது என்ன ஒரு அக்கறை!!

ஆனால், அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் கடும் காட்டுத்தீ ஏற்பட்டு பல்லாயிரம் மைல்கள் அது பரவி சேதம் ஏற்படுத்துகிறது. இதனால் ஏற்படும் புகையினால் சுற்றுப்புற சூழல் மாசுபடவில்லையா? இயற்கை வளங்கள் ஏக்கர் கணக்கில் சீரழியவில்லையா? பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லையா? செவ்வாய்க்கே ராக்கெட் விடும் அமெரிக்காவிற்கு இதையெல்லாம் தடுத்த நிறுத்த வழி செய்ய முடியாதா இல்லை தெரியலையா? முடியவில்லையெனில், இந்த காட்டுத்தீ ஏற்படாமல் நாங்கள் கவனித்துக்கொள்கிறோம் என இந்தியா அமெரிக்காவிடம் ஒப்பந்தம் ஏற்பட பேரம் பேச வேண்டும். :)

என்னமோ போங்க, ஊருக்குத்தான் உபதேசம்.... என்ற பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது.

5 comments:

said...

"அடடா! அமெரிக்காவிற்கு உலகத்தின் மீது என்ன ஒரு அக்கறை!!"

அய்யய்யோ அவனுங்க அக்கறை சில சமயத்தில் உச்சி முடி நட்டுக்கும் அளவுக்கு நம்மை பரவசபடுத்திவிடும்.

said...

நல்ல பதிவு, எப்படி இருக்கீங்க. நலமா:)

said...

//அய்யய்யோ அவனுங்க அக்கறை சில சமயத்தில் உச்சி முடி நட்டுக்கும் அளவுக்கு நம்மை பரவசபடுத்திவிடும்.//

உங்களுக்கு தலையில முடியே இல்லன்னு பேச்சு அடிபடுதே!!!

//நல்ல பதிவு, எப்படி இருக்கீங்க. நலமா:)//

நீங்க நேத்து பதிவை போட்டுட்டு இன்னிக்கு கேக்குற கேள்வியா இது??

Anonymous said...

//இந்தியாவில் 70% ஆற்றல் நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படுவதால் சுற்றுப்புற சூழல் மாசுபடுகிறது. இதை இந்த ஒப்பந்தம் மூலம் தடுக்கலாம்.//
ன்யூக்லியர் வேஸ்டை யார் வீட்டுல கொண்டு கொட்டுவது?

said...

//ன்யூக்லியர் வேஸ்டை யார் வீட்டுல கொண்டு கொட்டுவது?//

7, Race Course Road
New Delhi.