Saturday, December 15, 2007

PIT: டிசம்பர் போட்டிக்கு - மலர்கள்

போட்டியின் தலைப்பு அறிவித்தவுடன் ஏற்கனவே சில மலர்கள் படங்கள் கைவசம் இருந்திருந்தாலும், புதிதாக எடுத்து போட்டிக்கு இடவேண்டும் என்ற முடிவுடன் கையும் பொட்டியுமாய் கடந்த 15 நாட்கள் கடந்தன. அதில் நிறைய படங்கள் சிக்கின. இருந்தாலும், போட்டிக்கு கீழ்கானும் இரண்டு மட்டும் :).



படம்:1



f-stop: f/3.5 , Exp: 1/160 sec , 13 mm (சொல்லிக்கொடுத்த PIT குழுவிற்கு நன்றி)

படம்:2


f/4 ; 1/50 Sec ; 6mm

================
கீழ்காணும் இந்த படம் ஒரு மாலைப்பொழுதில் எடுத்தது. இந்த மலர்களின் மீது மாலை கதிரவன் ஒளி பட்டி மலர்கள் மின்னியது. அதை படமாக்கி விட்டேன். படமும் நன்றாக வந்ததாகவே பட்டது. ஆனால், பின்னனியில் (Background) காணும் அந்த ஓலை தட்டி சிறிது உறுத்தலாக இருந்ததால் போட்டிக்கு அனுப்பவில்லை.


f/4.8 ; 1/20 sec ; 35 mm

போட்டிக்கான படங்கள் கடந்த முறை போல் பத்தில் ஒன்றாகவாவது வருமா?

8 comments:

said...

ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்த என்னை ஏமாற்றி விட்டீர்கள் நிறைய படங்கள் அழகு அழகாக எடுத்து இருந்தீங்க ஏன் அனைத்தையும் போடவில்லை?:(((

இதுக்காகவா சிஸ்டரை அம்புட்டு நேரம் கால் கடுக்க நிறுத்தி வெச்சு பூக்களை எல்லாம் போட்டோ எடுத்து அதை போட வில்லை என்றால் என்ன நியாயம்?:(((

(ஏதோ என்னால முடிஞ்சது)

said...

லொடுக்கு மாமா. கடைசிப்படம்தான் சூப்பர். முதலிரண்டு படங்கள் டைப்புலதான் போட்டில ஏகப்பட்ட படம் இருக்கு.

கடைசிப்படத்துல நல்ல நேச்சுரல் எபெக்ட் இருக்கு. தட்டி ஒரு மேட்டரா? தட்டி இருப்பதுகூட படத்துல நல்லாத்தான் இருக்கு.

கண்டிப்பா போட்டிக்கு மூணாவது படத்தை அனுப்புங்க.

said...

//குசும்பன் said...
ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்த என்னை ஏமாற்றி விட்டீர்கள் நிறைய படங்கள் அழகு அழகாக எடுத்து இருந்தீங்க ஏன் அனைத்தையும் போடவில்லை?:(((
//

மன்னிக்கனும் குசும்பரே... இன்னொரு நாளைக்கு எல்லாத்தையும் பதிவாக்கிவிடலாம். :)

said...

//நிலா said...
லொடுக்கு மாமா.
//

இன்னா கதை இது... யாரப்பா இந்த குட்டீஸ்.... குசும்பரே நீங்களே சொல்லுங்க... :)

//கடைசிப்படத்துல நல்ல நேச்சுரல் எபெக்ட் இருக்கு. தட்டி ஒரு மேட்டரா? தட்டி இருப்பதுகூட படத்துல நல்லாத்தான் இருக்கு.

கண்டிப்பா போட்டிக்கு மூணாவது படத்தை அனுப்புங்க.//

நன்றி. வித்தியாசமான படமா இருந்தாலும், நான் மேற்சொன்ன காரணத்தை நம்ம ஓசை செல்லா சொல்லி தட்டி கழிச்சிட்டா.. :)

said...

கடைசி படம் அழகாக இருக்கு..;)

எந்த இடம் அது?

said...

லொடுக்கு..

இந்த தடவை கோப்பை உமக்கு தான் என்று சொல்ல ஆசைப்படுறேன்.

நடக்கவும் வாழ்த்துக்கள் :)

said...

// கோபிநாத் said...
கடைசி படம் அழகாக இருக்கு..;)

எந்த இடம் அது?
//

நன்றி கோபி. அது Mamzar பூங்கா கடற்கரையோரம்.

நன்றி நாகை சிவா.

said...

//மன்னிக்கனும் குசும்பரே... இன்னொரு நாளைக்கு எல்லாத்தையும் பதிவாக்கிவிடலாம். :)// இன்னொரு நாள் இன்னுமா வாய்க்கவில்லை?