இன்னிக்கு ஆஷஸ் மூனாவது மேட்சுல ஆஸியின் ரெண்டாவது இன்னிங்க்ஸில் சும்மா இங்கிலாந்து பவுலர்களை துவம்சம் செய்து, 59 பந்துகளில் பந்தை அங்கிட்டும் இங்கிட்டும் பறக்கவிட்டு 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களின் உதவியோடு 102 ரண் எடுத்த கில்கிரிஸ்ட் ஆட்டத்தை பத்தி சொல்ல வந்தென்னு நினைச்சீங்களா?
அட போங்கங்க, அவய்ங்க எப்படி, எக்கேடு கெட்டு போனா நமக்கு என்னங்க.
நான் 'இந்த அடி போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?' னு கேட்டது, நம்ம தல, சிக்ஸர் ஸ்பெஸலிஸ்ட், தாதா, கங்குலியின் அந்த பொன்னான இன்னிங்க்ஸ் பத்திங்க. வழக்கம் போல நம்ம அணியின் ஓப்பனர்கள் சொதப்ப, அதை தொடர்ந்து நம்ம வால் (i mean 'wall') தகர்ந்து போக, அதுக்கப்புறம் நம்ம 'ஒலக நாயகன்' சச்சின் பொறுப்பற்று அவுட் ஆக, லக்சுமனனும் அவரோடு வன (பெவிலியன்) வாசம் போக... வந்தாரு நம்ம தல. என்ன பொறுப்பு, என்ன கடமையுணர்வு. இவ்ளோ ப்ரெஸ்ஸர் குக்கர் சிச்சூவேஷன் தலைக்கு. இருந்தாலும் அசராம பொறுமையா ஆடி 51 நாட் அவுட். இதில் ஒரு புல் ஷாட் சிக்ஸும் அடக்கம். அவரோடு இன்னிங்க்ஸ் மட்டும் இல்லன்னா.... கஷ்ட காலம் இந்தியாவுக்கு. நல்ல வேளை தல கை கொடுத்தார். மிகவும் கடினமான் சூழ்நிலையில் அற்புதமான பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தாதாவை புகழாமல் என்னால் இருக்க முடியவில்லை.
இப்போது தென் ஆப்பிரிக்கா ஏற்கனவே 5/3. பார்த்துக் கொள்ளுங்கள் எவ்வளவு கடினமான ஆடுகளத்தில் தாதாவின் ஆட்டம் வெளிப்பட்டுள்ளது என்று. என்னென்ன சொன்னார்கள். பவுன்ஸர் அவரோட வீக்னஸ் blah blah.. தாதாவுக்கு வீசப்பட்ட ஒவ்வொரு மூன்றாவது பந்தும் பவுன்ஸர் தான். என்ன நடந்தது? நடந்தது என்னவோ இறுதி வரை நாட் அவுட்... தாதா உனக்கு இருக்கு துபையில் ஒரு கட் அவுட். :)