இந்த அடி போதுமா???
இன்னிக்கு ஆஷஸ் மூனாவது மேட்சுல ஆஸியின் ரெண்டாவது இன்னிங்க்ஸில் சும்மா இங்கிலாந்து பவுலர்களை துவம்சம் செய்து, 59 பந்துகளில் பந்தை அங்கிட்டும் இங்கிட்டும் பறக்கவிட்டு 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களின் உதவியோடு 102 ரண் எடுத்த கில்கிரிஸ்ட் ஆட்டத்தை பத்தி சொல்ல வந்தென்னு நினைச்சீங்களா?
அட போங்கங்க, அவய்ங்க எப்படி, எக்கேடு கெட்டு போனா நமக்கு என்னங்க.
நான் 'இந்த அடி போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?' னு கேட்டது, நம்ம தல, சிக்ஸர் ஸ்பெஸலிஸ்ட், தாதா, கங்குலியின் அந்த பொன்னான இன்னிங்க்ஸ் பத்திங்க. வழக்கம் போல நம்ம அணியின் ஓப்பனர்கள் சொதப்ப, அதை தொடர்ந்து நம்ம வால் (i mean 'wall') தகர்ந்து போக, அதுக்கப்புறம் நம்ம 'ஒலக நாயகன்' சச்சின் பொறுப்பற்று அவுட் ஆக, லக்சுமனனும் அவரோடு வன (பெவிலியன்) வாசம் போக... வந்தாரு நம்ம தல. என்ன பொறுப்பு, என்ன கடமையுணர்வு. இவ்ளோ ப்ரெஸ்ஸர் குக்கர் சிச்சூவேஷன் தலைக்கு. இருந்தாலும் அசராம பொறுமையா ஆடி 51 நாட் அவுட். இதில் ஒரு புல் ஷாட் சிக்ஸும் அடக்கம். அவரோடு இன்னிங்க்ஸ் மட்டும் இல்லன்னா.... கஷ்ட காலம் இந்தியாவுக்கு. நல்ல வேளை தல கை கொடுத்தார். மிகவும் கடினமான் சூழ்நிலையில் அற்புதமான பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தாதாவை புகழாமல் என்னால் இருக்க முடியவில்லை.
இப்போது தென் ஆப்பிரிக்கா ஏற்கனவே 5/3. பார்த்துக் கொள்ளுங்கள் எவ்வளவு கடினமான ஆடுகளத்தில் தாதாவின் ஆட்டம் வெளிப்பட்டுள்ளது என்று. என்னென்ன சொன்னார்கள். பவுன்ஸர் அவரோட வீக்னஸ் blah blah.. தாதாவுக்கு வீசப்பட்ட ஒவ்வொரு மூன்றாவது பந்தும் பவுன்ஸர் தான். என்ன நடந்தது? நடந்தது என்னவோ இறுதி வரை நாட் அவுட்... தாதா உனக்கு இருக்கு துபையில் ஒரு கட் அவுட். :)
52 comments:
What language is this? Indian? Very different. I live in Ankara, Turkey. Good bye!
இன்னிக்கு ஆவி அண்ணாச்சி உங்க தல ய கிண்டில் பண்ணத பாக்கலையா?
//? arthur said...
What language is this? Indian? Very different. I live in Ankara, Turkey. Good bye! //
Yes arthur, this is Tamizh(Tamil). One of the indian languages. no.. no.. the only classical language of India. take care bye.
//இளவரசன் said...
இன்னிக்கு ஆவி அண்ணாச்சி உங்க தல ய கிண்டில் பண்ணத பாக்கலையா? //
ஆமா ஆமா. பார்த்தேன். கண்டித்தேன். இருந்தாலும் உளவு பார்த்து தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் உளவுப் பணி தொடரட்டும்.
ஆமா... நீங்க கல்கத்தா இளவரன் இல்லையே?
லொடுக்கு,
நீங்க கங்கூலி ரசிகரா????
//ராம் சொன்னது...…
லொடுக்கு,
நீங்க கங்கூலி ரசிகரா????
//
இல்லை. வெறியன். :)
என்னப்பா லொடுக்கு!
முதல் பின்னூட்டமே சம்பந்தமில்லாம வருது!
துருக்கிங்கிறா வருக்கிங்கிறா! என்னய்யா நடக்குது?
//கார்மேகராஜா சொன்னது...…
என்னப்பா லொடுக்கு!
முதல் பின்னூட்டமே சம்பந்தமில்லாம வருது!
துருக்கிங்கிறா வருக்கிங்கிறா! என்னய்யா நடக்குது?
//
வாங்க கார்மேகம்!
ஓ! அதுவா. அதாவது தாதாவுக்கு துருக்கில ஒரு ரசிகர் மன்றம் திறக்கலாமா-னு கேக்குறாரு.
தாதாவின் வருகையால்...
இந்தியா மின்னுது...இந்தியா மின்னுது... தெ.ஆ - 38/6
Z Khan 8 3 18 2 2.25
S Sreesanth 8 3 19 4 2.37
///
கானுக்கும் ஸ்ரீசாந்த்குமே 10விக்கெட் பத்தாதுபோல!
2வது இன்னிங்க்சும் சீக்கிரமா ஆரம்பிக்க சொல்லுங்க!
கார்மேகம்,
சரி சரி! உங்க சந்தோஷம் எனக்கு விளங்குது.
நீங்க தெ.ஆ பக்கம் கொஞ்சம் எட்டி பார்க்காம இருந்தாலே போதும்.
Present Sir!
//ஆவி அண்ணாச்சி சொன்னது...…
Present Sir!
//
ஆஹா! வந்தாச்சா.. இதுவரைக்கும் நல்லாத்தானய்யா போயிகிட்டு இருக்கு. யாரப்பா வரச்சொன்னது?
தென் ஆப்பிரிக்கா 67/7.
(எல்லாக் சிங்கம் வந்த நேரம்னு சொல்லப் போறாங்க, ஓவரா நம்ம பசங்களை உசுப்பேத்தி விட்டுட்டுமோ)
அது சிங்கம் இல்லை. புலி. வங்கப்புலி. :)
உசுப்பேத்துனதுல தெ.ஆ ரணகளமானா சரிதான்.
//அது சிங்கம் இல்லை. புலி. வங்கப்புலி.//
வெயிட் தலைவா!
அப்பக் கூட ரெண்டு பவுலர்களைத்தான் நாம கொண்டாடணும். வாட் அபவ்ட் பேட்ஸ்மென்?.
டெஸ்ட் மேட்சுல 250 ரன் ஒரு ரன்னா? ஒன் டே மேட்சுல கூட 300 ரன் அடிச்சாதான் கொஞ்சம் டஃப் குடுக்க முடியுது. ஆடுகளம் நல்லா இல்லைங்குறதெல்லாம் உதவாத கதை. அதே பிட்சுலதான அவங்க ஆடி ஜெயிச்சாங்க.
என்னவோ அவங்க ஏனோதானோன்னு இன்னிக்கு விளையாடுறாங்க. (அவங்களுக்கே ஜெயிச்சி ஜெயிச்சி போரடிச்சிதோ என்னவோ) அவ்வளவுதான். இன்னொன்னு நாம உசுப்பேத்தி விட்டது அவங்களுக்கு ஏறிகிச்சு போல. இதுதான் காரணம்.
75 ரன்னுக்கு 7 பேர் அவுட்டானாக் கூட மீதி 3 பேரு நின்னு விளையாண்டு ஓரளவு ரன் தேத்துவாங்கண்ணு சொல்ல முடியும்.
இந்தியாவுல 100 ரன்னுக்கு 4 பேரு அவுட்டானா போதும். மீதி பேரு வரிசையா போயிடுவாங்க! யாராவது நின்னு விளையாடுவாங்கன்னு உங்களால சொல்ல முடியுமா? ஒருத்தர் மட்டும் தம் கட்டி நின்னுகிட்டிருக்க மீதி பேரல்லாம் அப்படியே வரிசையா....
ஆவி,
அப்படி இல்லை. இந்த போட்டியின் முதல் நாளிலேயே இந்தியா 275+ எடுத்தாலே கடினமான இலக்குதான் என்று கணித்திருந்தார்கள். அதாவது ஆடுகளத்தின் தன்மையை வைத்து. அதனால் தானோ என்னவோ தெ.ஆ தடுமாறுகிறது. நம்ம பந்து வீச்சாளர்களையும் மட்டம் தட்டுவதற்கில்லை. அவர்களை விட நன்றாகவே பந்து வீசி வருகின்றனர். மட்டையாளர்களும் (குறிப்பாக தாதா) அவர்களை விட நன்றாக பேட்டிங் செய்துள்ளனர்.
//ஆவி அண்ணாச்சி சொன்னது...…
75 ரன்னுக்கு 7 பேர் அவுட்டானாக் கூட மீதி 3 பேரு நின்னு விளையாண்டு ஓரளவு ரன் தேத்துவாங்கண்ணு சொல்ல முடியும்.
இந்தியாவுல 100 ரன்னுக்கு 4 பேரு அவுட்டானா போதும். மீதி பேரு வரிசையா போயிடுவாங்க! யாராவது நின்னு விளையாடுவாங்கன்னு உங்களால சொல்ல முடியுமா? ஒருத்தர் மட்டும் தம் கட்டி நின்னுகிட்டிருக்க மீதி பேரல்லாம் அப்படியே வரிசையா.
//
ஒத்துக்கொள்கிறேன்.
லேட்டஸ்ட்: தெ.ஆ - 84/8
மீண்டும் லேட்டஸ்ட்: 84/9
//மீண்டும் லேட்டஸ்ட்: 84/9 //
பார்த்தேன். ஃபா லோ ஆன் ஆகுமா?
பட்டாசு வாங்கி வெச்சிக்கலாம்.
84 ஆல் அவுட்.
25.1 Singh to Nel, OUT, All over! VRV Singh is back into the attack and he gets a piece of the action. Nel goes for a big drive over the off side but only manages to get height on the ball, not distance. Zaheer runs back from mid-off and takes a well-judged catch
A Nel c Khan b Singh 21 (24b 2x4 1x6) SR: 87.50
84 க்கு ஆல் அவுட்
தளராது வைத்திருந்த நம்பிக்கை(நப்பாசை) நிஜமாகி இருக்கிறது லொடுக்குப் பாண்டி அண்ணாச்சி! வாழ்த்துக்கள்!
லேட்டஸ்ட் 84/10
செகண்ட் இன்னிங்க்ஸ்னு ஒண்ணு இருக்குல்ல!
நீங்களும் cricinfo ல தான் பார்த்தீர்களா?
நமக்கு அதான் ரொம்ப யூஸ்.
ஸ்டேடியம் வாஸ்துப் படி இல்லையாம்.
தென்னாப்பிரிக்க அணியினர் அதிரடி முறையீடு!
என்ன வாஸ்து சரியில்லையா? நம்மளைப் பார்த்து அவங்களும் பழகிட்டாங்க போல!
Ibdia restricted SA 84/10 and surely our bowlers did the great job.
So, What is the contribution of 'THALA'. Even his 51 not there, nothing will happen to India's lead.
//ஆவி அண்ணாச்சி சொன்னது...…
தளராது வைத்திருந்த நம்பிக்கை(நப்பாசை) நிஜமாகி இருக்கிறது லொடுக்குப் பாண்டி அண்ணாச்சி! வாழ்த்துக்கள்!
//
இதுக்கெல்லாம் ஒரு பொறுமை வேணுங்க.
//முத்துகுமரன் சொன்னது...…
லேட்டஸ்ட் 84/10
//
வாங்க முத்து சார்,
ஜோதியில் ஐக்கியம் ஆனதுக்கு வாழ்த்துக்கள்.
//மோகினிகள் கழகம் சொன்னது...…
செகண்ட் இன்னிங்க்ஸ்னு ஒண்ணு இருக்குல்ல!
//
நேரங்கெட்ட நேரத்துல இத வேற ஞாபகப்படுத்தனுமா? என்ன ஆனாலும் சரிதான். செகண்ட் இன்னிங்க்ஸில் ஒரு 150 எடுத்தாலே 165+150=315 டார்கெட் கொடுக்கலாம் அவங்களுக்கு.
//கார்மேகராஜா சொன்னது...…
நீங்களும் cricinfo ல தான் பார்த்தீர்களா?
நமக்கு அதான் ரொம்ப யூஸ்.
//
அதான் பெஸ்ட் கிரிக்கெட் வெப்ஸைட். நமக்கும் எப்போதும் அதான்.
//கொள்ளிவாய்ப் பிசாசு சொன்னது...…
ஸ்டேடியம் வாஸ்துப் படி இல்லையாம்.
தென்னாப்பிரிக்க அணியினர் அதிரடி முறையீடு!
//
ஆவி உலகத்தில் எத்தனை பெரியார் வந்தாலும்....
வாங்க அனானி,
அதாவது, 247 இந்தியா இந்த பிட்சுல எடுதது தொடக்கத்திலேயே விக்கெட் வீழ்ந்தது தான் தெ.ஆ அணிக்கு இக்கட்டான சூழ்நிலை. இதை முதல்ல தெரிஞ்சுக்குங்க. அப்புறம், தாதாவின் 51+ VRV Singh (its cos ganguly's partnership) 28 நீக்கிட்டு பார்த்தா தெ.ஆ விற்கு பிரச்சனை இல்லாத ஸ்கோராத்தான் இருந்து இருக்கும். அதனால் அவங்களும் டென்ஷன் இல்லாம ஆடி இருப்பாங்க. அதுனால சொல்றேன் தாதாவின் 51 ஒரு பொன்னான இன்னிங்க்ஸ். அதுவும் in the difficult conditions. U got me?
சரி எதா இருந்தாலும் நாளைக்கு சந்திக்கலாம். இப்போ கிளம்ப நேரமாச்சு.
இன்னிக்கு உங்க காட்டுல மழைதான் போங்க!
என்ஜாய்!
//ஆவி உலகத்தில் எத்தனை பெரியார் வந்தாலும்....
//
பேச்சு பேச்சா இருக்கும்போது பெரியாரை ஏங்க இங்க இழுக்குறீங்க!
:((
//நேரங்கெட்ட நேரத்துல இத வேற ஞாபகப்படுத்தனுமா? என்ன ஆனாலும் சரிதான். செகண்ட் இன்னிங்க்ஸில் ஒரு 150 எடுத்தாலே 165+150=315 டார்கெட் கொடுக்கலாம் அவங்களுக்கு.
//
செகண்ட் இன்னிங்க்ஸ்லயும் தென்னாப்பிரிக்கா இப்படியே விளையாடுவாங்களா என்ன? அவங்க என்ன இந்திய அணியா? இல்லை கேக்குறேன்.
நீங்க வேணா பாருங்க! நீங்க சொல்ற அதே டார்கெட்டுக்கு மிஞ்சிப் போனா நாளைக்கு மதியம் வரை விளையாடுவாங்க! அப்புறம் தென்னாப்பிரிக்கா அணிக்கு 2 1/2 நாள் முழுசா இருக்கும். பிட்ச் வேற பேட்டிங்குக்கு சாதகாமா மாறிடும். ஈஸியா அடிச்சிட்டு போயிடுவாங்க.
அவ்ளோ ஈஸியா விட்டுடுவமா? நாங்கள்ளாம் எதுக்கு இருக்கோம்!
இந்தியா 21 / 1.
ஹிஹி
இந்தியா இரண்டாவது இன்னிங்க்ஸ்
37/2
வாசிம் ஜாஃபர், டிராவிட் அவுட்.
41/3
சேவாக்கும் அவுட்டு!
//சரி எதா இருந்தாலும் நாளைக்கு சந்திக்கலாம். இப்போ கிளம்ப நேரமாச்சு//
வெவரமா ரெண்டாவது இன்னிங்க்ஸ் ஆரம்பிச்சவுடன் அண்ணன் லொடுக்கு எஸ்கேப் ஆகிட்டாருப்பா!
பொல்லாக் அண்ணா!
நம்ம முதல் இன்னிங்க்ஸை பார்த்து ஏமாந்துட்டாங்க போல!
லொடுக்கு வேற முழுசா நம்பிட்டாரு!
ஆவி அண்ணாச்சியும், மோகினிகள் கழகமும்தான் நம்மைப் பத்தி சரியா புரிஞ்சி வெச்சிருக்காங்க!
தல இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து நமது இந்தியப் பெருமையை நிலைநாட்டுவார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை....
அப்புறம், CricInfo நிறுவியவ்ர்களில் ஒருவர் தமிழர். அதுவும் தமிழ் பதிவாளர்.
//ஜி சொன்னது...…
தல இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து நமது இந்தியப் பெருமையை நிலைநாட்டுவார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை....
//
வாங்க ஜி,
எந்த நேரத்துல சொன்னீங்களோ தல 25 மட்டும் தான் அடிச்சிருக்காரு. பரவாயில்லை. ஏற்கனவே இந்த மேட்சை திசை மாத்தி நம்ம பக்கம் மாத்துனதே தலதானே. :)
//அப்புறம், CricInfo நிறுவியவ்ர்களில் ஒருவர் தமிழர். அதுவும் தமிழ் பதிவாளர்.
//
அப்படியா!!! யாருங்க அது? தெரிஞ்சுக்கலாமா?
//ஆவி அண்ணாச்சி சொன்னது...…
//ஆவி உலகத்தில் எத்தனை பெரியார் வந்தாலும்....
//
பேச்சு பேச்சா இருக்கும்போது பெரியாரை ஏங்க இங்க இழுக்குறீங்க!
:((
//
இப்போ அதானேங்க ட்ரெண்ட்!
//ஆவி அண்ணாச்சி சொன்னது...…
//நேரங்கெட்ட நேரத்துல இத வேற ஞாபகப்படுத்தனுமா? என்ன ஆனாலும் சரிதான். செகண்ட் இன்னிங்க்ஸில் ஒரு 150 எடுத்தாலே 165+150=315 டார்கெட் கொடுக்கலாம் அவங்களுக்கு.
//
செகண்ட் இன்னிங்க்ஸ்லயும் தென்னாப்பிரிக்கா இப்படியே விளையாடுவாங்களா என்ன? அவங்க என்ன இந்திய அணியா? இல்லை கேக்குறேன்.
நீங்க வேணா பாருங்க! நீங்க சொல்ற அதே டார்கெட்டுக்கு மிஞ்சிப் போனா நாளைக்கு மதியம் வரை விளையாடுவாங்க! அப்புறம் தென்னாப்பிரிக்கா அணிக்கு 2 1/2 நாள் முழுசா இருக்கும். பிட்ச் வேற பேட்டிங்குக்கு சாதகாமா மாறிடும். ஈஸியா அடிச்சிட்டு போயிடுவாங்க.
அவ்ளோ ஈஸியா விட்டுடுவமா? நாங்கள்ளாம் எதுக்கு இருக்கோம்!
//
ஒன்னும் கவலைப்படாதீங்க. இப்போவே 311 முன்னனி. 5 விக்கெட் கையில். இப்போ சொல்லுங்க நீங்க. நாலாவது இன்னிங்க்ஸ் 350+ சேஸிங். சாத்தியமா?
//மோகினிகள் கழகம் சொன்னது...…
//சரி எதா இருந்தாலும் நாளைக்கு சந்திக்கலாம். இப்போ கிளம்ப நேரமாச்சு//
வெவரமா ரெண்டாவது இன்னிங்க்ஸ் ஆரம்பிச்சவுடன் அண்ணன் லொடுக்கு எஸ்கேப் ஆகிட்டாருப்பா!
//
அதுக்காக நான் ஆஃபிஸ்லேயே இருக்க முடியுமா? இது என்ன கொடுமையா இருக்கு.
இதை படிச்சு பாருங்க: http://content-usa.cricinfo.com/rsavind/content/current/story/272992.html
"Australia chased down 292 at the Wanderers earlier this year, but South Africa are light years behind as a Test side. The next highest target chased in 50 years of Test cricket here is 217. India's lead is already 311, and could swell further with Laxman and Dhoni at the crease. Sunil Gavaskar reckons that the Oval Test victory that he was part of in 1971 remains the most significant in Indian cricket history, but if Rahul Dravid and his brave men pull this one off, it'll come mighty close. "
தெ.ஆ - 36/3. இன்னும் 366 ரன் வேணும்.
டண்டணக்கா... டணக்குனக்கா..!!
Post a Comment