பலூன் திருவிழாவும் எனக்கு கிடைத்த ஆப்பும்
சிறிது நாட்களுக்கு முன் முடிவடைந்த 'துபை ஷாப்பிங் திருவிழா'வில் பலூன் திருவிழாவும் (balloon festival) நடைபெற்றது. ஒரு மாத காலம் 'வெப்பக் காற்று' (hot air) பலூன் துபை வானில் பறக்கவிட்டு வேடிக்கை காட்டினார்கள். துபை வரலாற்றில் முதன்முறையாக என்று சன் டிவி ஸ்டைலில் விளம்பரம் வேறு. பெரும்பாலும் துபை புறநகர் பகுதியிலேயே இது நடந்தது.
இம்முறை இதை சோதனை ஓட்டமாகவே நடத்த இருப்பதாகவும், ஸ்பான்ஸர்கள் / வி.ஐ.பி-க்கள் தவிர பொதுமக்கள் (காசு கொடுத்தாலும் கூட) பறக்க முடியாது எனவும் கூறினர். சரி, நமக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி எப்படியாவது இதில் பறந்தவிட வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டேன். அது போலவே வாய்ப்பும் கிட்டியது. அன்றைய தினம் ஜுமைரா Burj-Al-Arab-ல் இருந்து தொடங்கி Global Village வரை பறக்க திட்டமிட்டிருப்பதாக கூறினர். மனைவி குழந்தையுடன் ஜுமைரா Burj-Al-Arab போய் சேர்ந்தேன்.
பலூன் ஒவ்வொன்றாக காற்று நிரப்பி ஆயத்தப்படுத்தினார்கள். அப்போது ஒருங்கினைப்பாளர் ஒருவர் என்னிடம் வந்து யார் யார் பறக்க போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் , மனைவி மற்றும் குழந்தை என்றேன். இல்லை சார், குழந்தைகள் பறக்க அனுமதியில்லை என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். வேறென்ன, வழக்கமான தியாக மனதோடு நான் குழந்தையை பார்த்துக்கொள்வதாகவும் மனைவி மட்டும் பறக்கட்டும் என கூறினேன் (மனதிற்குள் எனதருமை குழந்தையால் எனக்கு கிட்டிய ஆப்பை நினைத்து வருந்தியபடி). நமக்கு ஆப்பு எந்தெந்த ரூபத்திலெல்லாம் வருது பாருங்க. ஆசிப் அண்ணாச்சி ஸ்டைலில் 'நல்லா இரு' என வழியனுப்பி வைத்தேன். என் மனைவி மட்டும் மகிழ்ச்சியாக பறந்தார்.
வந்துட்டு சும்மா போனா நல்லா இருக்காதே என, கையோடு கொண்டு போயிருந்த காமராவில் கொஞ்சம் க்ளிக்கித் தள்ளினேன். இதோ உங்கள் பார்வைக்காக சில..

ஜுமைரா Burj-Al-Arab
பலூன்களில் வெப்பக் காற்று நிரப்பப்படுகிறது
மனைவி பறந்த பலூன் ஆயத்தமாகிறது
மனைவி பறக்கிறார்
அன்று பிடித்தவைகளில் எனக்கு பிடித்தது
9 comments:
ஆப்பு வெச்சது நல்லதுக்குத்தான்
இல்லாட்டி இது போல் அற்புதமான
படங்கள் கிடைத்திருக்குமா?
அடுத்த ஆப்பு எப்போ?
நானானி
ஐயா நானானி,
நல்லா இருங்கய்யா! வேற ஒன்னும் சொல்றதுக்கில்லை.
சொல்லவேல்ல, இந்த மாதிரி பலூன் பறக்க விட்டத என்கிட்ட யாருமே (சொல்லலியே, சொல்லியிருந்தா மட்டும் போயி கிழ்ச்சிருப்பியான்னு கேக்ககூடாது).
படங்கள் அருமையா இருக்கே!
எந்த கேமரா? மேலதிக தகவல்களுடன் ஒரு பதிவு போடுங்க சாரே!
தம்பி,
அதான் துபை முழுதும் பறை அடிச்சாய்ங்களே! பலூன் பறக்க விட போறோம் பலூன் பறக்க விட போறோம்னு. உங்களை சுத்தி என்ன நடக்குதுன்னு பாருங்க தம்பி. வீராச்சாமி படம் மட்டுந்தான் துபையில பாப்பீங்களோ!
எனக்கு கொஞ்சம் புகைப்படம் எடுப்பதுல ஆர்வம். கொஞ்சம் நல்லாவும் வரும். என்னோடது கோடாக் 2.0 MP கேமரா. ரெண்டு ஆண்டுக்கு முன்னாடி வாங்குனது. கவலைப்படாதீங்க ஒரு நாளைக்கு கராமாவுக்கு எடுத்துட்டு வர்ரேன். நீங்கதான் மாடல் அன்னிக்கும். சுட்டுத் தள்ளிடுவோம். :)
//மேலதிக தகவல்களுடன் ஒரு பதிவு போடுங்க சாரே!
//
மேலதிக தகவலா? இன்னொரு பதிவா?
வணக்கம் தல
இப்ப தான் உங்க பதிவுக்கு வரமுடிந்தது. அருமையான ஆப்பு...நல்லா எழுதியிருக்கீங்க...
\\சொல்லவேல்ல, இந்த மாதிரி பலூன் பறக்க விட்டத என்கிட்ட யாருமே \\
எல..இதுக்கு எல்லாம் சொல்ல மாட்டோம்...ஒன்லி கிடேசன் பார்க்க்கு மட்டும் தான் சொல்வோம்...(சரி..சரி...இந்த வாரம்......வர்ரீங்கல்ல)
//கோபிநாத் said...
வணக்கம் தல
இப்ப தான் உங்க பதிவுக்கு வரமுடிந்தது. அருமையான ஆப்பு...நல்லா எழுதியிருக்கீங்க...
//
வாங்க வாங்க, வணக்கம். வருகைக்கு நன்றி. நமக்கு யாராச்சும் ஆப்பு உங்கள மாதிரி ஆளுங்களுங்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்குமே!!
//சரி..சரி...இந்த வாரம்......வர்ரீங்கல்ல//
அபிஅப்பா கிட்ட கேட்டு சொல்றேன்.
test by abi appa
லொடுக்கு
அருமையான அனுபவ பதிவு. படங்கள் அருமை...
//ஒருங்கினைப்பாளர் ஒருவர் என்னிடம் வந்து யார் யார் பறக்க போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் , மனைவி மற்றும் குழந்தை என்றேன். இல்லை சார், குழந்தைகள் பறக்க அனுமதியில்லை என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். வேறென்ன, வழக்கமான தியாக மனதோடு நான் குழந்தையை பார்த்துக்கொள்வதாகவும் மனைவி மட்டும் பறக்கட்டும் என கூறினேன்//
ஆண் பித்தளை என பெண் ஈயம் பேசுவோர் அறியட்டும் இந்தத் தியாகத்தை!
Post a Comment