Tuesday, May 08, 2007

கவிதைகளில் ஆபாசம் ஏன்?

எனக்கு ஒரு சந்தேகம் இருக்குதுங்க. இது இன்னிக்கு நேத்து வந்த சந்தேகமில்லங்க நெடுங்காலமா இருக்குங்க. அது என்னன்னு கேக்குறீங்களா?

அதாவது, கட்டுரைகளில் யாராவது ஆபசமாக எழுதினால் எல்லாரும் வரிஞ்சு கட்டிக்கொண்டு வந்து எழுதினவரை உண்டு இல்லைன்னு ஆக்கிவிடுகிறோம். ஆனால், அதே மாதிரியான எழுத்துக்களை ஒருவர் கவிதையாக எழுதினால் மட்டும் சமூகம் கைதட்டி ரசிக்கிறது? அது ஏன்?

நமது வலைப்பதிவுகளிலேயே நான் இதை கண் கூடாக பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் யாரும் உடலுறவை பற்றியோ, மறைவான உடலுறுப்புகளை குறிக்கும் சொற்களை பயன்படுத்தியோ யாரும் கட்டுரையாக எழுதுவதில்லை. தவறி எழுதினாலும் சுட்டிக்காட்டப்படுகிறார் எழுதியவர். ஆனால், இங்கே (மட்டுமல்ல பொதுவாகவே) எழுதும் பல கவிதைகளில் சரளமாக உடலுறுப்புகளை பேச்சு வழக்கிலான சொற்களைப் பயன்படுத்தியே எழுதுவது, உடலுறவைப் பற்றி எழுதுவதை காணலாம்.

சில மாதங்களுக்கு முன் ஒரு பதிவர் முதலிரவில் நடக்கும் உறவைப்பற்றி விலாவாரியாக கவிதை என்ற பெயரில் எழுதியிருந்தார் (பதிவர் பெயர் மற்றும் அவருடைய வலைப்பதிவின் பெயர் எதுவும் ஞாபகமில்லை).அதற்கான பாராட்டுக்கள் குவிந்தன. பாராட்டியதோடு மட்டுமில்லாமல் சிலர் அந்த திருமணமாகாத பதிவருக்கு 'மனைவின் தேவையறிந்து / கேட்டறிந்து நடந்து கொள்ளுங்கள்' என்ற அறிவுரைகள் வேறு. கவிதைகளில் மட்டுமில்லை, கவிதை போன்ற நடையில் வரும் உரைநடைகளில் கூட இது போன்றவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இது பொல் முதலிரவில் நடப்பவற்றை ஒருவர் உரைநடையாக எழுதி பொதுவில் வைக்கமுடியுமா? மஞ்சள் பத்திரிக்கை என ஒதுக்கப்பட்டு விடாது? ஏன் இந்த இரட்டை நிலை?

கவிதை வடிப்பதற்கு கண்டிப்பாக தனித்திறமை பெற்றிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. கவிஞர்களுக்குள்ள கற்பனை வளத்தை கண்டு வியக்காதவர் யாருமிலர். ஆனாலும், இது போன்றவற்றை கவிதைகளில் எழுதுவதன் மூலம் என்ன தனித்துவம் வந்துவிடுகிறது. அதையும் சமூகத்தால் எப்படி பாராட்ட முடிகிறது? இப்படி எழுதுவது நாகரீகமல்ல என்பன போன்ற விமர்சனங்கள் அவைகளுக்கு பொருந்தாதது ஏன்?

இதுதாங்க எனக்குள்ள ஐயம். ஒருவேளை இதற்கான காரணங்கள் இருக்கலாம். அதை தெரிந்து தெளிந்து கொள்ளத்தான் இங்கு என்னுடைய ஐயத்தை பதிந்தேன்.

என்னைப்பொறுத்தவரை, இவ்வகையைச் சார்ந்தவற்றை எந்த வடிவில் எழுதினாலும் ஆபாசமே. இரண்டாம் தரமே.

27 comments:

said...

சூப்பர் லொடுக்கு! நான் கேக்கனும்ன்னு இருந்தேன். நீர் கேட்டுட்ட!! நல்லா இருய்யா!!

said...

வாங்க அபிஅப்பா,
அடடே! உங்களுக்கும் இந்த டவுட்டு இருந்துச்சா? பார்க்கலாம் நம்ம டவுட்டை யாராச்சும் தெளிவிக்கிறாங்களான்னு.

Anonymous said...

அந்தக் கவிதையையும் பதித்திருந்தால்
நன்றாயிருந்திருக்குமே.அது நல்லா இருக்கா அல்லது அசிங்கமா இருக்கா
என்று நாங்களும் கருத்து தெரிவிக்கலாமல்லவா

said...

சரியாச் சொன்னீங்க லொடுக்கு. கவிதைன்னா அதெல்லாம் கண்டுக்கப்டாதுன்னு விட்டுட்றாங்களே?
அவ்வாறு எழுதுபவர்கள், அந்த வார்த்தைகளை விடவும் சிறந்த வேறு வார்த்தைகளைக் கொண்டு கவிதைக்கு அதே வீச்சு கொடுக்க முடியாதென பரிதாபமாக நினைத்து முடிவெடுக்கிறார்கள்.

said...

அன்பு அனானி,
சத்தியமா எனக்கு அந்த கவிதையின் தொடுப்பு பற்றி ஒன்றும் ஞாபமில்லை. நான் வலையுலகிற்கு வந்து சில மாதங்களில் வாசித்தது. மேலும், நான் அந்த ஒரு கவிதையை மட்டும் குறிப்பிடவுமில்லை. அது ஒரு எடுத்துக்காட்டு. அவ்வளவுதான். தேடி பார்க்கிறேன். கிடைத்தால் அறியத்தருகிறேன்.

said...

//சுல்தான் said...
சரியாச் சொன்னீங்க லொடுக்கு. கவிதைன்னா அதெல்லாம் கண்டுக்கப்டாதுன்னு விட்டுட்றாங்களே?
அவ்வாறு எழுதுபவர்கள், அந்த வார்த்தைகளை விடவும் சிறந்த வேறு வார்த்தைகளைக் கொண்டு கவிதைக்கு அதே வீச்சு கொடுக்க முடியாதென பரிதாபமாக நினைத்து முடிவெடுக்கிறார்கள்.
//

வாங்க சுல்தான் பாய்,
நீங்கள் சொல்வது போல வேறு சொற்களைக் கொண்டு கூட அவற்றை சிறப்பிக்கலாம். இல்லாவிடில், இலைமறை காயாக கூட எழுதலாம் இல்லையா?

said...

லொடுக்கு ஸார்.. கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் எப்பவுமே அரசியல்வாதிகளைவிடவும் 'மப்பு' அதிகம்.

தான் எழுதுவது சமுதாயத்திற்கு ஏற்றதுதானா என்று பார்வையாளர்களும், பொதுமக்களும் தங்களிடம் கேள்விகளே கேட்கக் கூடாது என்பார்கள். ஏனெனில் அவர்களிடம், அவர்களுடைய படைப்பைப் பற்றிப் பேசுவதற்கே ஒரு தகுதி வேண்டும் என்பார்கள். அந்தத் தகுதி, சாதாரண பொதுமக்களாகிய வாசகர்களுக்கு இல்லை என்பது பெரும்பான்மையான எழுத்தாளர்களின் கருத்து..

நீங்கள் சென்று கருத்து சொன்னால்.. அட்லஸ் புக்கில் எங்கயோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு நாட்டின் பெயரைச் சொல்லி அந்த நாட்டுக்கார எழுத்தாளரின் பெயரையும் சொல்லி.. (கண்டிப்பாக அதை உங்களால் ஊகிக்கவே முடியாது) "அவருடைய எழுத்துக்களை நீங்கள் படித்திருக்கிறீர்களா?" என்பார்கள்.. இல்லை என்று தலையாட்டுவீர்கள்.. "போய்.. படிச்சிட்டு அப்புறமா என்கிட்ட வந்து பேசு.." என்று மீசையை முறுக்காமலேயே சொல்வார்கள்.

காமம் என்பதை கவிதை, எழுத்து வடிவில் 'கருத்து சுதந்திரம்' என்கிற போர்வையில் எழுத ஆரம்பித்து.. அதையும் சிலர் வரவேற்க ஆரம்பித்துவிட்டதால் இது மாதிரி எழுதுபவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே செல்கிறது.

நானும் உங்களது கட்சிதான்.. அது ஆபாசம்தான்.. சந்தேகமேயில்லை. அப்படிப் பார்த்தால் நீங்கள் எந்த எழுத்தாளரின் பெயரையும் நான் அவருக்கு விசிறி என்று சொல்லவே முடியாது.

என்ன செய்வது?

தொண்டையில் வழுக்கிக் கொண்டு போவது கல் என்பது தெரிந்தால் என்ன செய்வீர்கள்? 'எப்படியோ ஒரு நாளைக்கு வெளில போயிரும்ல' என்ற எண்ணத்தில் முழுங்குவீர்களே.. அதே போல் இதையும் முழுங்கி விடுங்கள்.. வேறு வழியில்லை.. ஏனெனில் நாம் சாதாரண வாசகர்கள்..

said...

உண்மைத் தமிழய்யா,
தங்களது நீண்ட பொறுமலுடன் என்னையும் உங்களுடன் சேர்த்துக் கொண்டதற்கு நன்றி.

//அப்படிப் பார்த்தால் நீங்கள் எந்த எழுத்தாளரின் பெயரையும் நான் அவருக்கு விசிறி என்று சொல்லவே முடியாது.
//

அப்படியா! எல்லா எழுத்தாளர்களுமே அப்படியா? :(

//தொண்டையில் வழுக்கிக் கொண்டு போவது கல் என்பது தெரிந்தால் என்ன செய்வீர்கள்? 'எப்படியோ ஒரு நாளைக்கு வெளில போயிரும்ல' என்ற எண்ணத்தில் முழுங்குவீர்களே.. //

குமட்டுகிறதய்யா.

Anonymous said...

//பெரும்பாலும் யாரும் உடலுறவை பற்றியோ, மறைவான உடலுறுப்புகளை குறிக்கும் சொற்களை பயன்படுத்தியோ யாரும் கட்டுரையாக எழுதுவதில்லை//

ஏன் இல்லை. சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு வலைப்பதிவில் அடர்கானகத்தை பற்றி எழுதியிருந்ததை படித்தீர்களா?

said...

//ஏன் இல்லை. சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு வலைப்பதிவில் அடர்கானகத்தை பற்றி எழுதியிருந்ததை படித்தீர்களா? //

ஆம் அனானி படித்தேன்.

Anonymous said...

அப்படியல்லநண்பரே...! உரைனடையோ, கவிதையோ...நோக்கம் என்ன என்பதுதான் முக்கியம். உடைனடையில் நீங்கள் குறிப்பிட்ட ஆபாச சொற்களை பயன்படுத்தியதன்நோக்கம் ஒருவரையோ ஒரு குறிப்பிட்ட குழுவையோ வசை பாடுவதற்காக அல்லது இரண்டாம்தர விஷயஙகளை பற்றி விவாதிக்கவோ இருந்தால் அது சரியல்ல என்பதில் மாற்று கருத்தில்லை.நரேனின் கெட்ட வார்த்தைகளின் அரசியல் கட்டுரை முழுக்க முழுக்க கெட்ட வார்த்தைகள்நிறைந்தது. ஆனால் அது இப்படி விமர்சிக்கப்படவில்லை. கவிதைகளில் பெரும்பாலும் இவ்வார்த்தைகள் வசை பாடுவதற்காகவோ, இரண்டாம் தர கீழ்நோக்கங்களுக்காகவோ எழுதப்படுவதில்லை. அப்படி இருப்பின் அது கவிதையானாலும், உரைனடையானாலும் தவறுதான்.

said...

லொடுக்கு பொது இடத்துல ஒருவ்ர நிர்வானமா நின்னா அசிங்கமா இருக்குதில்லியா?

இதுவே ஒரு ந்இர்வாண சிலை இருந்தா?

கவிதைகளில் ஒரு கலைய்மசம் ஒளிந்திருக்கிறது. இதனாலேயே அதிலிருக்கும் ஆபாசம் வெளியே தெரிவதில்லை என நினைக்கிறேன்.

கொஞ்சம் கவித்துவமாக உடலுறவை விவரித்து பதிவுகளில் ஒரு கட்டுரை படித்த நியாபகம்.

Anonymous said...

Listen to 'kutti revathy's ' interview in Kumudam.com. Maybe you can find an answer on why women poets do this.
I too realized that there is a difference after reading your post but no answer :(

Anonymous said...

கவிதைகளில் ஆபாசம் என்பதை எப்படி நிர்ணயிக்கிறோம் என்பதும் முக்கியம். உறுப்புகளின் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதால் மட்டும் கவிதை ஆபாசமாகி விடாது, அதே நேரத்தில் அப்படி எழுதாத கவிதைகளெல்லாம் ஆபாசமற்றவை எனும் வரிசையிலும் வந்துவிடாது. கவிதையை எழுதப்பட்ட சூழல், அதன் தன்மை, தேவை இவற்றின் பின்னணியில் விவாதிப்பதே பலனளிக்கும்.

பெண்கள் ஆபாசமாக எழுதுகிறார்கள் என்னும் விவாதம் வேறு தளத்துக்கானது, அதை விட அதிகமாய் ஆண்கள் எழுதியிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்

said...

//Anonymous said...
கவிதைகளில் பெரும்பாலும் இவ்வார்த்தைகள் வசை பாடுவதற்காகவோ, இரண்டாம் தர கீழ்நோக்கங்களுக்காகவோ எழுதப்படுவதில்லை.//

நிச்சயமாக தேவையில்லாமல் இயற்கையை வர்ணிக்க கூட அருவருப்பான இது போன்ற சொற்களை பயன்படுத்துகிறார்களே.

said...

//சிறில் அலெக்ஸ் said...
லொடுக்கு பொது இடத்துல ஒருவ்ர நிர்வானமா நின்னா அசிங்கமா இருக்குதில்லியா?

இதுவே ஒரு ந்இர்வாண சிலை இருந்தா?

கவிதைகளில் ஒரு கலைய்மசம் ஒளிந்திருக்கிறது. இதனாலேயே அதிலிருக்கும் ஆபாசம் வெளியே தெரிவதில்லை என நினைக்கிறேன்.
//

வாங்க சிறில்,
கவிதைகளில் கலையம்சம் இருக்கிறது என்பதற்காக அசிங்கமான சொற்களை ஏற்றுக்கொள்ள முடியுமா என்பதே எனது ஐயம்.

நிர்வான சிலைகளில் கூட அசிங்கமான நிலைகளில் இருப்பது வடிக்கப்பட்ட சிலையானால் பொதுவில் ஏற்றுக்கொள்ளப்படுமா? அதுபோல் தான் இதுவும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிறில்.

said...

//Anonymous said...
Listen to 'kutti revathy's ' interview in Kumudam.com. Maybe you can find an answer on why women poets do this.
I too realized that there is a difference after reading your post but no answer :(
//

ஓகே அனானி,
நான் அந்த நேர்முக பேட்டியை கேட்டு பார்த்து விட்டு சொல்கிறேன்.

said...

//சேவியர் said...
கவிதைகளில் ஆபாசம் என்பதை எப்படி நிர்ணயிக்கிறோம் என்பதும் முக்கியம். உறுப்புகளின் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதால் மட்டும் கவிதை ஆபாசமாகி விடாது, //
அது தேவையில்லாத நிலையில் பயன்படுத்தியிருந்தால்?

//அதே நேரத்தில் அப்படி எழுதாத கவிதைகளெல்லாம் ஆபாசமற்றவை எனும் வரிசையிலும் வந்துவிடாது.
//
இது ஒத்துக்கொள்ளக்கூடியது தான்.

//கவிதையை எழுதப்பட்ட சூழல், அதன் தன்மை, தேவை இவற்றின் பின்னணியில் விவாதிப்பதே பலனளிக்கும்.
//
உடலுறுப்புகளை பற்றிய கவிதையானால் இவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடும். தேவையில்லாமல் மிகையான புகழுக்கும் பரபரப்பிற்கும் எழுதப்பட்டால்தான் சகிக்க முடிவதில்லை.


//பெண்கள் ஆபாசமாக எழுதுகிறார்கள் என்னும் விவாதம் வேறு தளத்துக்கானது, அதை விட அதிகமாய் ஆண்கள் எழுதியிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்
//
இங்கு ஆண்கள் பெண்கள் என்ற பேதமில்லை.

said...

கவிதையில் ஒரு அழகியல் இருக்கும். ஆபாசமென்று நாம் கருதும் கட்டுரைகளும் கூட கவிதையில், அழகான மொழியோடு கலந்துவிட்டபடியால் அதுவும் அழகாக தெரியும்.

//என்னைப்பொறுத்தவரை, இவ்வகையைச் சார்ந்தவற்றை எந்த வடிவில் எழுதினாலும் ஆபாசமே. இரண்டாம் தரமே.//

ம்ஹூம்...எதுவும் இலைமறையாக சொல்லப்பட்டால் பிரச்சினையே இல்லை. 'சமஞ்சது எப்படி' என்று எழுதினால் தான் பிரச்சினையே. 'உன் பூக்கள் மொத்தம் எத்தனை சொல்லிவிடு' என்று சொன்னால் ஆபாசம் இல்லை தானே?

//கவிதைகளில் ஒரு கலைய்மசம் ஒளிந்திருக்கிறது. இதனாலேயே அதிலிருக்கும் ஆபாசம் வெளியே தெரிவதில்லை என நினைக்கிறேன்.//

அதே தான் சிரில் நானும் சொல்ல வந்தது...

//கவிதைகளில் கலையம்சம் இருக்கிறது என்பதற்காக அசிங்கமான சொற்களை ஏற்றுக்கொள்ள முடியுமா என்பதே எனது ஐயம்.//

அசிங்கமான சொற்கள் எது என்பதே விவாதத்திற்குறியது. Bastard என்றால் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். அதையே தமிழில் சொன்னால் நமக்கு பொத்துக் கொண்டு வருகிறது.

said...

//சீனு said...
கவிதையில் ஒரு அழகியல் இருக்கும். ஆபாசமென்று நாம் கருதும் கட்டுரைகளும் கூட கவிதையில், அழகான மொழியோடு கலந்துவிட்டபடியால் அதுவும் அழகாக தெரியும்.
//
வாங்க சீனு,
அழகாக திட்டினால் வசவு கூட வசவாகாது சுகம் என்று சொல்கிறீர்களா?

//ம்ஹூம்...எதுவும் இலைமறையாக சொல்லப்பட்டால் பிரச்சினையே இல்லை. 'சமஞ்சது எப்படி' என்று எழுதினால் தான் பிரச்சினையே. 'உன் பூக்கள் மொத்தம் எத்தனை சொல்லிவிடு' என்று சொன்னால் ஆபாசம் இல்லை தானே?
//

இலைமறை காயாக எழுதுவதை யாரும் எதிர்ப்பார்களா? அதை விடுத்து நேரடியாக குறிக்கும் நோக்கில் சொற்தேர்வோடு எழுதுவதைதான் நான் குறிப்பிட்டேன்.

மேலும், நான் இங்கு சினிமா பாடல்களை இழுக்கவேயில்லை. அவை வயிற்று பசிக்கு எழுதப்படுபவை. நான் குறிப்பிடும் கவிதைகள் எழுத்து பசிக்கு எழுதப்படுபவை.

//Bastard என்றால் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். அதையே தமிழில் சொன்னால் நமக்கு பொத்துக் கொண்டு வருகிறது.
//
Bastard என்பதே தவறு என்பது என் எண்ணம்.

said...

//அழகாக திட்டினால் வசவு கூட வசவாகாது சுகம் என்று சொல்கிறீர்களா?//

நான் சொல்லவந்தது வசவுகளை பற்றி அல்ல. கட்டுரை / கவிதையில் ஆபாசம் பற்றி.

//மேலும், நான் இங்கு சினிமா பாடல்களை இழுக்கவேயில்லை. அவை வயிற்று பசிக்கு எழுதப்படுபவை. நான் குறிப்பிடும் கவிதைகள் எழுத்து பசிக்கு எழுதப்படுபவை.//

என் சிற்றறிவு சினிமா பாடல்களை தான் சுத்தும். அதனால் அதனை உதாரணம் சொன்னேன்.

/////
//Bastard என்றால் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். அதையே தமிழில் சொன்னால் நமக்கு பொத்துக் கொண்டு வருகிறது.
//
Bastard என்பதே தவறு என்பது என் எண்ணம்.
/////

அது தவறு தான். ஆனால், அதனதன் தாக்கம் பற்றி நான் சொல்கிறேன்?

said...

//நான் சொல்லவந்தது வசவுகளை பற்றி அல்ல. கட்டுரை / கவிதையில் ஆபாசம் பற்றி.//

நண்பர் சீனு,

கவிதை/கட்டுரை என்பதை வசவு என்ற இடத்தில் இட்டு நிரப்பினால் சரியே. ஒரு உவமைக்காகவே சொன்னேன்.

//என் சிற்றறிவு சினிமா பாடல்களை தான் சுத்தும். அதனால் அதனை உதாரணம் சொன்னேன்.//

சினிமாவை நீங்கள் குறிப்பிட்டதை தவறென்று கூறவில்லை. சினிமா பாடல்கள் மற்றொருவரின் தேவைக்கேற்ப எழுதுவதால் அதில் கவிஞர்களை மட்டும் குறை கூற முடியாது. அதற்காகத்தான் நான் சொன்னேன். ஆனால், தனியாக தன்விருப்பத்திற்கு எழுதப்படும் கவிதைகளில் காணப்படும் ஆபாசத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா? அவ்வாறு எழுதுவதை அவர்கள் தவிர்க்க முடியுமல்லவா?

said...

லொடுக்கு,

உங்க சந்தேகம் நியாயமானதுதான், ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனா அழகு இயலை சொல்லும் போது வார்த்தை பிரயோகங்கள் சரியா அமையலை'ன்னா அது ஆபாசம்தான்.

இந்த ஐயன் குறளை பாருங்க...

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.


இதுக்கு ஆங்கிலத்திலே விளக்கம் பார்த்தேன்.

Vest on the buxom breast of her
Looks like rutting tusker's eye-cover.

இதுக்கு என்ன சொல்லுறீங்க???

said...

இங்கு அனானி நண்பர் ஒருவர் தந்த தகவலால் குமுதம் இணையதளத்தில் கவிஞர் குட்டி ரேவதியுடனான நேர்முகத்தை பார்த்தேன் & கேட்டேன். இதே கேள்வியை அந்த நிரூபரும் கேட்டுள்ளார். நீங்களும் காணலாம்.
http://www.kumudam.com/interviews.php?id=2&strid=1405&stream=4

ஆனால், அவர் அளித்த பதிலில் எனக்கு உடன்பாடில்லை.

said...

//இராம் said...
லொடுக்கு,

உங்க சந்தேகம் நியாயமானதுதான், ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனா அழகு இயலை சொல்லும் போது வார்த்தை பிரயோகங்கள் சரியா அமையலை'ன்னா அது ஆபாசம்தான்.
//
அது... :)

//இந்த ஐயன் குறளை பாருங்க...

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

இதுக்கு ஆங்கிலத்திலே விளக்கம் பார்த்தேன்.

Vest on the buxom breast of her
Looks like rutting tusker's eye-cover.

இதுக்கு என்ன சொல்லுறீங்க???
//

:) ஐயன் பேரைச்சொல்லி பயங்காட்டுறீங்களே!!

said...

//ஐயன் பேரைச்சொல்லி பயங்காட்டுறீங்களே!!/

லொடுக்கு,

என்ன சொல்ல வர்றீங்க??? கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்?

Anonymous said...

அட! இவ்வளவு விவாதம் நடந்திருக்கு அந்த சூட்டில் கலந்துக் கொள்ளாம விட்டுடேனே? ;-)

கவிதையோ கட்டுரையோ தேவையில்லாமல் ஆபாசம் தெளித்திருந்தா தவறுதான்.

* (கமெண்டை சிறிய திருத்தம் செய்துள்ளேன்)