சுனிதா விண்வெளியில் பிரியாணி சாப்பிட்டாரா?

அவருடன் விண்வெளிக்குச் சென்றவர்கள்:
அதைப் பற்றி ரொம்ப பேசக்கூடாது. அப்புறம் குதர்க்கவாதியாகி முத்திரை முதுகில் குத்திடுவாங்க.
நம்ம மேட்டருக்கு வருவோம். சரி, விண்வெளிக்கு போறாங்களே அங்கே என்னதான் சாப்பிடுவாங்க? எப்படி சமைப்பாங்க? யாரு சமைப்பா? எங்கே சமைப்பாங்க? என்ற உயிரினங்களுக்கு இன்றியமையாத மேட்டரை பத்தி சந்தேகம் வந்துடுச்சு. நம்ம புத்தி எங்கே போகுது பாத்தீங்களா? நமக்கு ஈடுபாடு உள்ளதுலதானே நமக்கு கேள்விகள் எழும். அங்குள்ள எடை வேறுபாடு, ஈர்ப்பு விசை, அழுத்தங்கள் இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு திரவ உணவாகத்தான் இருக்கும் என நான் நினைத்திருந்தேன். நமக்கிருக்கிற மூளைக்கேத்தவாறுதானே நாம சிந்திக்க முடியும். சரி சந்தேகம் வந்தது வந்துருச்சு உடனே தீர்த்திடுவோம். சந்தேகம் பொல்லாத நோய் என்று சொல்றாங்களே பெரியவங்க. 'இணையம் இருக்க பயமேன்' என்று உடனே இணையத்தில் தேடும் வேலையில் ஈடுபட்டேன். முதலில் விண்களங்களின் படங்களை தேடியபோது சுனிதாவிற்கான விண்வெளி சாப்பாடு மெனு கிட்டியது (அவிய்ங்களும் நம்ம டேஸ்டை தெரிஞ்சு வச்சிருக்காய்ங்கப்பா. தேடலின் முதல் படமே சாப்பாட்டு மெனு). பார்த்தவுடன் அசந்தே விட்டேன். நீங்களும் பாருங்கள்.

அடடா! அடிபொலி சாப்பாடுங்க. சிக்கன், மாட்டுக்கறி, சூப், பழச்சாறுகள் இன்ன பிற. வெலுத்து கட்டியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். எங்கே போனாலும் நம்ம மனிதர்கள் சாப்பாட்டில் குறைவைப்பதில்லை போலும். விண்வெளியிலும் இங்கு என்ன சாப்பிடுகிறோமோ அதே உணவு வகைகளைத்தான் சமைத்து சாப்பிடுவார்களாம். இருந்தாலும், தான் ஐஸ்கிரீமை ரொம்ப மிஸ் பண்ணியதாக சுனிதா தெரிவித்ததாக ஒரு பண்பலை வானொலி காலையில் கூறியது. மெனுவைப் பார்த்தா ஐஸ்கிரிம் கிடைக்காட்டி என்ன அதான் நல்ல சாப்பாடு கிடைச்சிருக்கே என தோன்றியது. ஒவ்வொரு விண்வெளி வீரர்களும் தங்களுக்கு பிடித்த உணவை பயணம் முழுதும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாமாம். ஆனால், உணவுக் கட்டுப்பாட்டு மருத்துவரின் ஆலோசனையுடன்.
விண்களத்தில், (அதாவது விண்வெளிக்கு சென்றடைந்து ராக்கெட்டிலிருந்து விடுபட்டு வெளியில் மிதக்கும் போது தான் சமைக்க முடியும் என தெரிகிறது)சமைப்பதற்கென்று விண்களத்தின் நடுப்பகுதியில் ஒரு இடம் உள்ளதாம். அது Galley என்றழைக்கப்படுகிறது. அதில் hot and cold water dispensers, pantry, oven, food serving trays, personal hygiene station மற்றும் water heater ஆகியவை இருக்குமாம். விண்வெளி வீரர்களில் யாராவது ஒருவர் சமைப்பாராம். ஒரு மணி நேரத்தில் நான்கு பேருக்கான உணவு சமைத்துவிடலாமாம். அமெரிக்க உணவு வகைகள் சமைக்க அவ்வளவு நேரம்தான் ஆகும். நம்ம நாட்டு சாப்பாடுக்கு? அங்கே நம்ம நாட்டுக்காரங்க யாராவது போகும் போது பார்த்துக்கொள்ளலாம். என்ன சொல்றீங்க? கொஞ்ச நாள் வெளிநாட்டுல தங்கியிருந்தாலே அங்குள்ள 'வேக(வேகா?) உணவு'க்கு அடிமையாகிவிடும் நாம் விண்வெளிக்கு போனால் மட்டும் நம்ம நாட்டு உணவா உண்ணப்போகிறோம்?
ஆக மொத்தம் பொறி தட்டிய சிறிய சந்தேகத்தால் ஓரளவு(சிறிதளவாவது) விண்வெளி உணவு முறை பற்றி அறிந்து கொண்டேன். உங்களுடன் பகிர நினைத்தேன். விரிவாக எழுத வேண்டுமெனில் முழுதுமாக மொழியாக்கம் செய்ய வேண்டி வரும். நமக்கு அத்தனை திறமையில்லைன்னு உங்களுக்கும் தெரியும். ஆகவே மேலும் விபரங்கள் correct technical termsஸுடன் அறிய கீழே க்ளிக்குங்கள்.
ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக அறிந்துகொள்ள.
நீளமான விரிவான கட்டுரை.
அதெல்லாம் சரி, சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் பிரியாணி சாப்பிட்டாரான்னு கேக்குறீங்களா? மேலுள்ள மெனுவை பாத்தா அப்படி தெரியலைங்கோ. விடு ஜூட்!!
10 comments:
//வம்சா வழியாம். அவரிடம் கேட்டால்தான் தெரியும் அவர் இந்தியரா அமெரிக்கரா என்று// என்னப்பா கேள்வி இது. செத்தாலும் அமெரிக்காவில்தான் புதைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் அந்த அம்மணி. ஆனாலும் நம்ம ஊரு ஊடகங்கள் கொண்டாடத்தான் செய்கிறார்கள்.
எவரெஸ்ட் கூட இந்தியாவில் தான் உள்ளது என்று படிக்கும் போது எனக்கு சொல்லித்தந்தார்கள். திபத்காரங்களோ, நேபாள்காரங்களோ (சீனர்கள் கூட) கேட்டானுங்க அம்புட்டுத்தேன்.
புதுத் தகவல்கள் நன்றி லொடுக்கு.
பிரியாணியைத் தேடத்தான் மெனு பார்த்தீரா!
நான் இந்தியன் இல்லைன்னு சொன்னாலும் நம்மாட்களுக்கு பற்று கொஞ்சம் ஓவர்தான்.
//சுல்தான் said...
புதுத் தகவல்கள் நன்றி லொடுக்கு.
பிரியாணியைத் தேடத்தான் மெனு பார்த்தீரா!//
வாங்க, நலம் நலமறிய ஆவல். பிரியாணி இல்லன்னா நமக்கு கையும் ஓடாது காலும் ஓடாது. ;)
நான் இந்தியன் இல்லைன்னு சொன்னாலும் நம்மாட்களுக்கு பற்று கொஞ்சம் ஓவர்தான்.
அதே தான். ஆனால், இருக்க வேண்டிய மேட்டர்ல நாட்டுப்பற்று இருக்காது :(
ஏன்? அமெரிக்கர்களுக்காக இந்திய மக்கள் வேண்டிக்கொள்ள கூடாதா? நல்லாயிருக்கு உங்கள் கூத்து.
India didn't send Sunita Williams to Space..She IS AN AMERICAN and she was sent by America.
It is a shame for Indians to "celebrate" her......
சரி விடுங்க. எப்படியோ எல்லாரும் பத்திரமாத் திரும்பி வந்தாங்களே.
ஆள் எப்படின்னாலும் பேரு இந்தியப் பேரு இல்லீங்களா? அந்த அபிமானம்தான்:-))))
//ஏன்? அமெரிக்கர்களுக்காக இந்திய மக்கள் வேண்டிக்கொள்ள கூடாதா? நல்லாயிருக்கு உங்கள் கூத்து.//
அனானி நண்பா,
நான் அப்படி சொல்லல. இந்திய வம்சா வழி மட்டும் உருப்படியா திரும்பனும். மத்தவங்க? கும்பிடுறது கும்பிடுறோம் எல்லாருக்கும் சேர்த்து கும்பிடலாம்ல. அதான்.
//India didn't send Sunita Williams to Space..She IS AN AMERICAN and she was sent by America.
It is a shame for Indians to "celebrate" her//
யாரையும் யாரும் கொண்டாடலாம். சாதனை செஞ்சா மட்டும் 'உரிமை' கொண்டாடக்கூடாது. என்ன சொல்றீங்க?
//துளசி கோபால் said...
சரி விடுங்க. எப்படியோ எல்லாரும் பத்திரமாத் திரும்பி வந்தாங்களே.
//
அதானே. :)
//ஆள் எப்படின்னாலும் பேரு இந்தியப் பேரு இல்லீங்களா? அந்த அபிமானம்தான்:-))))//
டீச்சர் நீங்க சொன்னா சரிதான்.
தேசி பண்டிட்டிற்கு நம்ம பிரியாணியை பரிமாறியதற்கு நன்றி.
Post a Comment