உலக வெப்பநிலை உயர்வால் (Global Warming) மெரினாவுக்கு ஆபத்தா?
ஆம் என்றே தோன்றுகிறது இந்த இணையத்தளத்தின் கணிப்புப் படி. உலக வெப்ப நிலை உயர்ந்தால் கடல் மட்டம் 7 மீட்டர் அளவு வரை உயரும் என்று ஆய்வாளர்களால் அறியப்படுகிறது. அவ்வாறு நிகலுமாயின் உலகின் நிலப்பரப்பில் எந்த அளவிற்கு கடல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த தளம் கணித்து அதற்கேற்ப நீல வண்ணத்தை பாதிக்கப்படும் இடங்களாக காட்டுகிறார்கள்.
கீழே சென்னை நகரத்தின் படம்.
எனது ஊர் கடற்கரையிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. இதன் கூற்றுப்படி பார்த்தால் எங்கள் ஊருக்கு அழகான (?!) கடற்கரை கிடைக்கும் என நினைக்கிறேன். நீங்களும் இத்தளத்தினுள் விரைந்து சென்று உங்கள் வீடு பாதுகாப்பாக இருக்குமா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். மெரீனாவிற்கு ஆபத்து என்றே தோன்றுகிறது. மெரீனா முழுவதும் கடலினுள் செல்லும் வாய்ப்பு உள்ளது. எழும்பூரில் வசிப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி. உங்களுக்கு அழகான கடற்கரை பார்த்தாற் போன்ற வீடு அமைய வாய்ப்புள்ளது.
link: http://flood.firetree.net/
18 comments:
அய்யய்யோ!! பயமாக இருக்கிறது.
எங்க ஊர்ல கடலே இல்லீங்க! அப்போ எங்க ஊருக்கு எந்த பிரச்சினையும் வராது இல்லீங்களா?
//தம்பி said...
எங்க ஊர்ல கடலே இல்லீங்க! அப்போ எங்க ஊருக்கு எந்த பிரச்சினையும் வராது இல்லீங்களா? //
வாங்க தம்பி வாங்க! கடலினால் எந்த தொல்லையும் இல்ல உங்க ஊருக்கு. மற்றபடி தொல்லை இல்லை என்று நான் கூற முடியாது.
//
எங்க ஊர்ல கடலே இல்லீங்க! அப்போ எங்க ஊருக்கு எந்த பிரச்சினையும் வராது இல்லீங்களா?
//
அதான் 10 கடலுக்கு சமமா நீங்க இருக்கீங்கள....
//அதான் 10 கடலுக்கு சமமா நீங்க இருக்கீங்கள.... //
ஹி ஹி :)
//அதான் 10 கடலுக்கு சமமா நீங்க இருக்கீங்கள....//
யாருயா அது சந்துல சிந்து பாடறது...
சத்தியமா நான் இல்லை அந்த அனானி. இப்போலாம் நான் அனானியா வர்ரது இல்லை. அதான் லொடுக்காகிட்டோம்ல.
//யாருயா அது சந்துல சிந்து பாடறது..//
அதாவது 10 கடல சுனாமி மாதிரி வந்தாலும் எதிர்த்தி போரடுவிங்கள அத சொன்னேன்.
(கொஞ்சம் வஞ்சிபுகழ்ச்சி அணி மாதிரி இருக்கோ).
//அதாவது 10 கடல சுனாமி மாதிரி வந்தாலும் எதிர்த்தி போரடுவிங்கள அத சொன்னேன்.
(கொஞ்சம் வஞ்சிபுகழ்ச்சி அணி மாதிரி இருக்கோ).
//
இருக்கோ என்ன.. அதானே :)
//கொஞ்சம் வஞ்சிபுகழ்ச்சி அணி மாதிரி இருக்கோ//
இன்னிக்கு சாயந்தரம் பதிவு போட மேட்டர் கிடைச்சிடுச்சி.
அங்க வந்து உங்க கருத்தை வீசு அனானி!
//இன்னிக்கு சாயந்தரம் பதிவு போட மேட்டர் கிடைச்சிடுச்சி.
அங்க வந்து உங்க கருத்தை வீசு அனானி!
//
அடப்பாவி தம்பி! ஏய்யா எனக்கு வர்ர பின்னூட்டத்துக்கு ஆப்பு வைக்கிற??
//இருக்கோ என்ன.. அதானே :)//
சரி ஓ.கே.இன்னைக்கு சாயந்திரம் கவுத்துர வேண்டியதுதான்.
ஊருல கடலே இல்லைன்னா சீக்கிரத்துலயே கடல் வருவதற்கான சாத்தியங்கள் இருக்கிறது.
தீபாவளி நேரம் இல்லையா, ஏதாவது துணிக்கடை விளம்பரம் பாருங்க!
ஜவுளிக் கடல்னு போட்டிருப்பாங்க!
//அமானுஷ்ய ஆவி சொன்னது...…
ஊருல கடலே இல்லைன்னா சீக்கிரத்துலயே கடல் வருவதற்கான சாத்தியங்கள் இருக்கிறது.
தீபாவளி நேரம் இல்லையா, ஏதாவது துணிக்கடை விளம்பரம் பாருங்க!
ஜவுளிக் கடல்னு போட்டிருப்பாங்க!
//
வாங்க ஆவியக்கா வாங்க!
கரெக்டா பெண் ஆவி என்பதை நிரூபிட்த்து விட்டீர்களே!
மெரினாவே அழிந்தாலும் காதலர்கள் அழிய மாட்டார்கள்.
// ராதாராகவன் சொன்னது...…
மெரினாவே அழிந்தாலும் காதலர்கள் அழிய மாட்டார்கள்.
//
இது என்ன கொடுமையாயிருக்கு. அதுக்காக தாஜ்ம்ஹால் இல்லைன்னா காதல் இல்லைன்னு ஆயிடுமா?? (சுட்டுட்டோம்ல)
முடிஞ்சா இந்த கதைய படிச்சுப் பாருங்க. அதுல சுனாமின்னு வர்ரதுக்கு பதிலா 'மஹா பனி உருகல்' ன்னு கூட போட்டுக்கலாம்.
கதை
//ஓகை சொன்னது...…
முடிஞ்சா இந்த கதைய படிச்சுப் பாருங்க. அதுல சுனாமின்னு வர்ரதுக்கு பதிலா 'மஹா பனி உருகல்' ன்னு கூட போட்டுக்கலாம்.
//
கதை தொடுப்பிற்கு நன்றி ஓகை. படித்தேன். நல்ல கதை. அப்போ எல்லாரும் சொல்ற மாதிரி கொஞ்ச ஆண்டுகளில் சென்னை பாதி அழிந்து விடுமோ?? :(
Post a Comment