Saturday, November 04, 2006

சன்னும், ஜெயாவும் இல்லாவிடில்....

ரொம்ப நாளாவே மனசுல உறுத்திக்கிட்டு இருக்கிற ஒரு செய்திங்க. தமிழ்கூறும் நல்லுலகிற்கு தொண்டாற்றி வரும் ரெண்டு சேனல்களைப் பற்றிய செய்திங்க. அதிலும் அவர்களின் செய்திகளைப் பற்றிய செய்திங்க.

ஆமாங்க. உலகில் உள்ள தமிழர்களுக்கு அவர்களின் அன்றாடப் பொழுதே இந்த ரெண்டும் இல்லன்னா போவதே கொஞ்சம் கடினம் தாங்க. ரெண்டில் ஒன்றில்லன்னாலும் ஒன்றாவது வேணும். ரெண்டும் இருந்தால் மிகச் சிறப்பு. ரெண்டும் இல்லன்னா எங்கேயோ ஒரு இருட்டுலகில் நீங்கள் வாழ்ந்து வருகிறீர்கள் என்று பொருள். காமெடி இல்லங்க சீரியசாத் தான் சொல்றேன். இந்த இரண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களால் தமிழ் பெண்களை (கனிசமான ஆண்களும் உண்டென்பது எனது வாதம்) அழவைப்பது தவறானது என்று எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு சேனல்களின் செய்திகள் மிக அருமைங்க. நீங்கள் இந்த இரண்டு சேனல்களும் கிடைக்கப் பெற்றிருந்தீர்களெனில் நீங்கள் கொடுத்து வைத்தவர். இருவரின் செய்திகளையும் தவறாது கண்டு வாருங்கள் (கண்டு வருபவர்களுக்குத் தெரியும்). தமிழகத்தில் நடக்கும் அரசியல் அட்டூழியங்கள் அம்பலமாகும். எதிர்கட்சியின் தகிடுதத்தங்கள் சன் டிவியில் அலசி ஆராய்ந்து அக்கு வேறு ஆணி வேராக காட்டுவார்கள். 'அவர்கள் மட்டும் ஒழுங்கா என்ன' என வரிந்து கட்டிக்கொண்டு ஜெயாவில் ஆளுங்கட்சி (மைனாரிட்டி)யின் அராஜகம் என அம்பலப்படுத்தப்படும். அரசியல் கட்சிகளின் நன்மைகள் (செஞ்சாத்தானே ??) நமக்குத் தெரிய வருகின்றதோ இல்லையோ, அவர்கள் செய்யும் அஜால் குஜால்கள் தெரிய வருகின்றது. மாறி மாறி சேறு வாரி இறைப்பது ஒரு வகைக்கு நல்லது தான். சில நேரங்களில் நகைச்சுவைக் காட்சிகள் கூட தோற்கும். இதற்காகவாவது இருவருக்கும் நாம் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம் (ரெண்டு பேருக்கும் ஓட்டு போடுங்க).


நீங்களே யோசிச்சுப் பாருங்க, இந்த இரண்டு சேனல்களும் இல்லாவிடில்.....

18 comments:

said...

//நீங்களே யோசிச்சுப் பாருங்க, இந்த இரண்டு சேனல்களும் இல்லாவிடில்.....//

வேற யாராச்சும் அள்ளி போட்டுக்குவங்க.

முரசொலியும், நமது எம்.ஜி.ஆரையும் விட்டுட்டீங்களே!

கொள்கைகளை காப்பாத்தறாங்களோ இல்லையோ ஆளுக்கு ஒரு சேனல வச்சி பேர காப்பாத்திக்கறாங்க!

said...

நீங்கள் சொல்வதும் சரிதான்.

said...

வாங்க தம்பி!
//முரசொலியும், நமது எம்.ஜி.ஆரையும் விட்டுட்டீங்களே!
//

நான் இதுவரை இவைகளை வாசித்ததில்லை.

//கொள்கைகளை காப்பாத்தறாங்களோ இல்லையோ ஆளுக்கு ஒரு சேனல வச்சி பேர காப்பாத்திக்கறாங்க!//

நான் அவர்களின் கொள்கைகளையோ, அவர்கள் செய்யும் தவறையோ இங்கு விமர்சிக்கவில்லை. இந்த இரு சேனல்கள் நமக்கு விளையும் நன்மையைப் பற்றி சொன்னேன். அவ்வளவே.

said...

//வெங்கட்ராமன் சொன்னது...…

நீங்கள் சொல்வதும் சரிதான்.
//

வந்து ஆமோதித்ததற்கு நன்றி.

said...

அதனால்தான், நான் தொலைக்காட்சியை கண்டுபிடித்தவனை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

கிடைத்தால் அவன் சாவு என் கையில்தான்.

said...

//கார்மேகராஜா சொன்னது...…

அதனால்தான், நான் தொலைக்காட்சியை கண்டுபிடித்தவனை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

கிடைத்தால் அவன் சாவு என் கையில்தான்.
//

வாங்க கார்மேகராஜா,
ஒருவகையா தமிழகத்தை செழிக்க வச்சிட்டீங்க போலிருக்கே. நன்றி.

அவனை எதுக்கு கொல்லனும். சொல்லப்போனா நன்றி சொல்லனுமய்யா.

கார்மேகத்துக்கு இவ்ளோ சூடு ஆகாது. குளிருங்கள். மழையாவது பெய்யும். :)

said...

லொடுக்கு,,

நல்லா இருக்கு உங்க வியக்கியானம்... :-))))

ரெண்டு டிவி காரங்களும் இதே படிச்சிட்டு உங்கமேலே நடவடிக்கை எதும் எடுக்கப் போறாங்க... ;)

said...

//ராம் சொன்னது...…

லொடுக்கு,,

நல்லா இருக்கு உங்க வியக்கியானம்... :-))))//

நன்றி ராம்.

//ரெண்டு டிவி காரங்களும் இதே படிச்சிட்டு உங்கமேலே நடவடிக்கை எதும் எடுக்கப் போறாங்க... ;)
//

கை கால் பதற வச்சிட்டீங்களே. நான் அவங்க செய்ற நன்மையத்தானுங்க சொன்னேன். :)

said...

லொடுக்கு,

இந்த ரெண்டு சானலையும் பார்த்தா பொது அறிவு போய் புது அறிவு வரும்!

உண்மையிலேயே நம்ம தமிழ்நாட்டுப் பொதுஜனம் எவ்வளவுக்கு தோல்தடித்து எருமையைப் பின்தள்ளியிருப்பதும் புரியும்!

said...

வாங்க ஹரிஹரன்,

இவை மூலம் நிகழும் மறைமுக நேர்மறை வினையத்தான் நான் சொன்னேன். :)

said...

//நீங்களும் எதாவது சோல்லனுமா?Post a Comment//

வேணாம்ப்பா...பொல்லாப்பு.நம்மாலேதாங்க முடியாது...நாம்பாட்டுக்கு போய்ட்டிருக்கேன்...ஏன் வம்புல
மாட்டிவிடறே...

said...

//sivagnanamji(#16342789) said...
//நீங்களும் எதாவது சோல்லனுமா?Post a Comment//

வேணாம்ப்பா...பொல்லாப்பு.நம்மாலேதாங்க முடியாது...நாம்பாட்டுக்கு போய்ட்டிருக்கேன்...ஏன் வம்புல
மாட்டிவிடறே...
//

சொல்லாம சொல்றது
இதுதானோ...

said...

அரசியலில் இருப்பவர்கள் கண்டிப்பாக ஒரு சேன்னலோ அல்லது பத்திரிக்கையோ இருக்க வேண்டுமென்று எழுதப்படாத சட்டம் ஒன்று இருக்கும் என நினைக்கிறேன்.

(எனக்கு தெரியாமல். உங்களுக்கு தெரிந்திருந்தாலும் இருக்கும்)

said...

//கார்மேகராஜா சொன்னது...…
அரசியலில் இருப்பவர்கள் கண்டிப்பாக ஒரு சேன்னலோ அல்லது பத்திரிக்கையோ இருக்க வேண்டுமென்று எழுதப்படாத சட்டம் ஒன்று இருக்கும் என நினைக்கிறேன்.

(எனக்கு தெரியாமல். உங்களுக்கு தெரிந்திருந்தாலும் இருக்கும்)//

ஹை.. அது எப்படி எனக்குத் தெரியும்?? எது எப்படியோ மக்களுக்கு இதனால் சிறிதளவேனும் நன்மை விளைந்தால் சரி. :)

said...

தமிழ்மக்கள் படும் எண்ணற்ற துயரங்களுக்கு மத்தியில் அவர்கள் ரிலாக்ஸ் அடைய உதவுவது இந்த இரண்டு சேனல்களும்தான். அதிலும் ஜெயா டி.வி.யின் செய்திகள் அடடா! அதில் வைகோவின் பேச்சு அடடா!அடடா!

said...

மிதக்கும் வெளி ஐயா,
அரசியலில் யாரைச் சொல்லி யாரை விடுவது? எதைச் சொல்லி எதை விடுவது?

said...

I am not able to read your blog in Firefox. Please take care of 'text-align: justify;'.

I presume it gives issues with browsers other than IE.

Thanks

said...

Dear Boston Bala,
I've removed 'text-align' tag everywhere in my template. Now, my homepage seems to be OK. But, the blog's link is still having problem in FireFox. I dont know what else i could do.

Thanx Bala.