Saturday, October 28, 2006

இந்தியாவில் ரன்னுக்கு பஞ்சமா?

காண்பதென்ன கனவா இல்லை நனவா? என்று எல்லோரும் தன்னைத் தானே ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியதாயிற்று இந்த முறை இந்தியாவில் நடக்கும் ICC Champion's Trophy முடிவுகளை பார்த்து. பிறகென்னங்க, இந்திய ஆடுகளங்கள் என்றாலே மட்டையாளர்கள் எல்லாம் வாயில் ரன் ஊறி விளாசித் தள்ளி ஓட்டக் குவியலை எடுத்துக் கொண்டிருந்த காலம் போய், இப்போ அணி 150 எடுப்பதற்கே போதும் போதும் என்றாகிவிடுகிறதே. முன்பெல்லாம் இந்தியாவில் 300 ஓட்டங்கள் எடுப்பது எளிதாயிருந்தது, அதிலும் கூத்து அதையும் எதிரணி சேஸ் செய்து விடுவது. இந்திய ஆடுகளங்கள் பந்து வீச்சாளர்களின் மயானம் என்றழைத்தார்கள்.


ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். பந்து வீச்சாளர்கள் காட்டில் அடை மழை பெய்து கொண்டிருக்கிறது. பந்து எகிரி குதித்து வருகிறது. மட்டையாளர்கள் காதோரம் ரீங்காரம் பாடிச் செல்கிறது பந்து. இது இந்தியாதானா என்று பந்து வீச்சாளர்களே வியக்கும் அளவிற்கு. என்னைப் பொருத்த வரை இதுவே சரியான ஆடுகளங்கள். ஆஸ்திரேலியாவின் பெர்த் அளவிற்கு இல்லையென்றாலும் பந்து வீச்சாளர்களை சாகடிக்காத ஆடுகளங்கள் இந்த முறை உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ICC- Pitch Specialist -ம் ஏதோ ஒன்றை ஆடுகளம் இறுதி வரை பிடிப்போடு இருக்க ஸ்ப்ரே செய்கிறாராம். இதையெல்லாம் சற்றும் எதிர் பார்த்திராத மட்டையாளர்கள் பெவிலியனுக்கும் பிட்சுக்கும் இடையே வை.கோ (அதாங்க நடை பயணம்) செய்து கொண்டிருக்கிறார்கள். கீழ்கண்ட ஸ்கோர் போர்டை பார்த்தால் நிலமை புரியும்:

Eng- 125/10 (37)
Ind - 126/6 (29.3)

NZ- 195/10 (45.4)
SA-108/10 (34.1)


SL - 253/10 (49.3)
PAK - 255/6 (48.1)

WI - 234/6 (50)
AUS - 224/9 (50)


NZ - 165/10 (49.2)
SL - 166/3 (36)

ENG-169/10 (45)
AUS-170/4 (36.5)

SA-219/9 (50)
SL-141/10 (39.1)

NZ-274/7 (50)
PAK-223/10 (46.3)

IND-223/9 (50)
WI-224/7 (49.4)

SA-213/8 (50)
PAK-89/10 (25)

இதில் நன்றாக பாதிக்கப்பட்டவர்கள் இந்தியா, பாக்கிஸ்தான், லங்கா அணியினர்தான். இவர்களுக்கு இந்திய ஆடுகளங்களே எமனாகி உள்ளது. என்ன செய்வது பாவம். தரமான ஆடுகளங்களில் பயிற்சி பெறாதவர்கள் தானே. ஏற்கனவே இதில் இரண்டு அணிகள் வெளியாகி விட்டது. இந்தியா மட்டும் மிச்சம். 29-ம் தேதி தெரியும் அதுவும். இத்தகைய ஆடுகளங்களில் நன்றாக பேட் செய்பவர்கள் செய்து தான் வருகிறார்கள். சரியான, முறையான ஆட்டத்தின் மூலம் (correct footwork, shot selection) இது போன்ற ஆடுகளத்திலும் ஓட்டங்கள் குவிக்கலாம் என்பது வேறு செய்தி. ஒரு தலை பட்ச ஆட்டங்களாக இல்லாமல் ஆட்டம் முடியும் வரை விருவிருப்பாகவே உள்ளது இம்முறை. இப்படித்தான் இருக்க வேண்டும். அதில்லாமல், சும்மா 300 எடுத்து, அதையும் எதிரணி சேஸ் செய்து வெற்றி பெற்று. சே! என்ன ஆட்டங்கள் அவை. அப்படி ஆடுகளங்களில் ஆடி தானே நாமெல்லாம் வெறும் மட்டையாளர்களை மட்டுமே தலையில் தூக்கி வைத்து ஆடுகிறோம். இந்தியாவில் எப்போதாவது பந்து வீச்சாளர்களை மதித்திருக்கிறோமா? எந்த பந்து வீச்சாளர்களாவது (கபில் - ஆல் ரவுண்டர்) இந்தியாவிற்கு தலமை தாங்கி இருக்கிறாரா? இது போன்ற ஆடுகளங்களை மேலும் உருவாக்கினால் அந்த குறை தீரும்.


இந்த முறை நடக்கும் போட்டிகளில் என்னை உறுத்திய மற்றொரு செய்தி என்னவென்றால், வெறும் நான்கு நகரங்களில் மட்டுமே இந்த அனைத்துப் போட்டிகளும் நடத்தப்படுகிறது. மும்பை (வான்கடேயில் இல்லை என்பது வேறு செய்தி), அஹமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் மொஹாலி. இந்த நான்கு நகரங்களும் இந்திய வரை படத்தில் மேற்கு & வட மேற்கு திசையில் உள்ள மாதிரி தெரியவில்லை? ஆம், இங்கும் அரசியல் இருப்பதாகவே தெரிகிறது எனக்கு. இதெல்லாம் (குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் வாரியங்கள்) பவாரின் ஜல்லியடி கூட்டத்தினர்கள் என்றே கருதுகிறேன். இல்லையென்றால் பெங்களூர், சென்னை, கல்கத்தா போன்ற ஒப்பற்ற நகரங்கள் புறக்கனிக்கப் பட்டிருக்குமா? என்று ஓயும் இந்த விளங்காத அரசியல் இந்திய கிரிக்கெட்டில்!!


சரி, 29-ந் தேதி ஆட்டத்திற்கு வருவோம். இன்று இந்தியா, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காலிறுதி போட்டி என்றே கூறலாம். இந்த மன்னாய்ப் போன சாப்பல் , இர்ஃபானை வைத்து சோதனை செய்வதை நிறுத்து விட்டு. சரியான அணியைத் தேர்ந்தெடுத்து (மோங்கியாவிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும்- ராய்னா அவுட்), சரியான பேட்டிங் ஆர்டர் அமைத்து, தன்னம்பிக்கை வீரர்களுக்கு அளித்து நம் அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஏன் இதையெல்லாம் நமது ட்ராவிடம் கூறாமல் சாப்பலிடம் கூறவேண்டும்? சாப்பல் சொல்வதை ஆமாம் சாமி, சரி சாமி போடுவது மட்டும் தானே ட்ராவிட் செய்து வருகிறார். முதுகெலும்பில்லாத அணித் தலைவர்.

7 comments:

said...

வாங்க சடையப்பா!
//காரணம் இப்பொழுது குளிர் காலம் அதுதான் பந்து இப்படியெல்லாம் எகிரி வருகிறது. இல்லை என்றால் அதோ கதிதான்//

இல்லையே. இந்த ஆண்டு மட்டும் தான் குளிர் காலம் வருகிறதா என்ன? அயல்நாட்டு சதின்னு சொல்லாம போனீங்களே! :)

எனக்கென்னமோ, இந்த முறை BCCI தவறுதலா இந்திய அணிக்கு நல்லது செய்ய திட்டமிட்டுள்ளதோ என்னவோ. :) தரமான ஆடுகளமைத்து இந்திய அணிக்கு நல்வழி காட்டினால் சரிதான்.

Anonymous said...

//சாப்பல் சொல்வதை ஆமாம் சாமி, சரி சாமி போடுவது மட்டும் தானே ட்ராவிட் செய்து வருகிறார். முதுகெலும்பில்லாத அணித் தலைவர்.//

தலயை இழிவு செய்த லொடுக்கை வன்மையாக கன்டிக்கிறோம்.

இவன்,
செயலாளர்,
தி(டி)ராவிட முன்னேற்ற கழகம்,
பெங்களூர்.

said...

//திமுக செயலாளர் said...

தலயை இழிவு செய்த லொடுக்கை வன்மையாக கன்டிக்கிறோம்.//

உள்ளதைச் சொன்னேன். :) உண்மை கசக்கும்.

said...

அடடே ரமணா ரேஞ்சுல புள்ளி விவரத்தோட போட்டீங்களே!

எனக்கு வருத்தம் என்னன்னா ஒரு மினி உலககோப்பை நடக்குறதுக்கான எந்த அறிகுறியும் இல்லையே என்பதுதான். ஒட்டு மொத்த அணியும் கிலி பிடிச்சி போயிருக்காங்க! இன்னிக்கு 100 மேல தேறுமோ தேறாதோன்னு.

அப்படியே குளிர்காலந்தான் காரணம்னாலும் இதுக்கு முன்னாடி குளிர்காலத்தில போட்டியே நடந்ததில்லையா?
ஆசிய நாடுகள் தவிர அனைத்து நாடுகளும் குளிர்பிரதேசங்களில் விளையாடுவது புதிதில்லை.அதிகபட்ச குளிர்பிரதேசமான இங்கிலாந்தும், நியூசிலாந்தும் 175 ரன்னை கூட தொடவில்லை.

என்னமோ நடக்குது. மர்மமா இருக்குது.

said...

//தம்பி said...
அடடே ரமணா ரேஞ்சுல புள்ளி விவரத்தோட போட்டீங்களே!
//
ஐவா தம்பி வந்தாச்சு!

கேப்டன் ரேஞ்சுக்கெல்லாம் நம்மல கம்பேர் பண்ணாதீங்க தம்பி. அவர் ரேஞ்சே வேறே. அம்மாவே நடுங்கி போயிருக்காங்கனு கேள்வி.

//என்னமோ நடக்குது. மர்மமா இருக்குது.
//
மர்மமெல்லாம் ஒன்னுமில்ல. எல்லாம் நல்லதுக்குத் தான். எத்தனை காலம் பேட்டிங் மட்டும் பாத்து ரசிக்கிறது. பேட்டிங் & பெளலிங் ரெண்டையும் கொஞ்சக் காலம் பாத்து ரசிச்சுட்டு போங்க.

ஆமா, இந்தியா ஜெயிக்குமா???

said...

//Sadai Appa சொன்னது...…

அட ஆமா! வெஸ்ட் இண்டீஸ் 274 ரன் எடுத்து விட்டட்தே!

வல்லவன் தானே வெற்றி பெருவான்.
//

அது மட்டுமில்லை சடை. இங்கிலாந்து அதையும் சேஸ் செய்து விட்டது. :) நேற்று ஆடிய ஆடுகளம் அத்தனை கடினமானதல்ல என கேள்விபட்டேன்.

said...

//ஐசிசிக்கென sponsors இருப்பதால் அதற்கு முரணான sponsors உள்ள மைதானங்கள் புறக்கணிக்கப்பட்டன என்று ஒரு சேதி அடிபட்டது. அதுதான் காரணமோ?

வைசா//

வாங்க வைசா!
எங்கு பார்த்தாலும் அரசியல் தான். ICC-க்கு இந்தியாவை பொறுத்தவரை தங்க முட்டை இடும் வாத்து.