மீண்டும் அசாருத்தீன்...
முகம்மது அசாருத்தீன். 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிரிக்கெட் உலகின் புகழின் உச்சியில் இருந்தவர். பல சாதனைகளுக்கு உரிமையாளர். அறிமுகமாகியதிலிருந்து (1984) முதல் மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து நூறுகளை அடித்தவர். ஜெயசூர்யா அதிரடியாக நூறு அடிக்கும் முன்பு வரை அதிவேக ஒருநாள் நூறுக்கு (62 பந்துகளில்) உரிமையாளர் (இன்று வரை அதுவே இந்தியாவின் அதிவேக நூறு). உலகின் தலைசிறந்த தடுப்பாட்டக்காரர் (ரோட்ஸுக்கு அடுத்து அவராகத்தான் இருப்பார்). இப்படி எத்தனையோ கூறிக்கொண்டே போகலாம்.
ஆனால், 2000-ம் ஆண்டு அவருக்கு வந்தது வினை. சூதாட்டத்தில் அவருக்குத்தான் பெரும் பங்குண்டு என்று குற்றாச்சாட்டிற்கு ஆளானார். அவருடன் சேர்ந்து ஜடேஜா, மோங்கியா, அஜய் ஷர்மா, பிரபாகர், சலிம் மாலிக், க்ரோனே ஆகியோரின் பெயர்களும் அடிபட்டது. அதில் க்ரோனே குற்றத்தை வெளிப்படையாக (சிறிது நாட்களுக்குப் பிறகுதான்) ஒப்புக் கொண்டார், அதோடில்லாமால் அவருக்கு சூதாட்டக்காரரை அசாருத்தீன் தான் அறிமுகப்படுத்தியதாக கூறினார். அதனால் அசாருக்கு வந்தது சோதனை. அவர் குற்றம் சுமத்தப்பட்டார். ICC-யும் அசார், க்ரோனே மற்றும் சலீம் மாலிக் ஆகியோர் மீது கிரிக்கெட் ஆட்டம் தொடர்பான (விளையாடுவது, வர்ணனை, பயிற்ச்சி கொடுப்பது போன்றவற்றிலிருந்து) செயல்களிலிருந்து முற்றிலும் ஆயுள் தடை விதித்தது. BCCI -யும் அதைத் தொடர்ந்து அதே போல் தடை விதித்தது. இதில் அசார் இதுவரை அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொள்ள வில்லை. தடையை எதிர்த்து நீதி மன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இதுவரை விசாரனையில் அவருக்கெதிரான குற்றத்திற்கு ஆதாரம் கிடைக்கவில்ல. குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. இந்த நிலையில் அவர் BCCI,ICC யால் ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்தார்.
ஓரிரு நாட்களுக்கு முன் திடிரென அவரைப் பற்றிய புதிய சலசலப்பு கிரிக்கெட் உலகில் கிளம்பியுள்ளது. அதாவது, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலமைச் செயலகம் மும்பையில் சில நாட்களில் திறக்கப்பட உள்ளது. அந்நிகழ்ச்சியில் இந்தியாவின் அனைத்து அணித் தலைவர்களையும் அழைத்து சிறப்பிக்க முடிவு செய்துள்ளார்கள். அதில் அசாருத்தீனும் அடக்கம். அவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது டால்மியா போய் பாவார் வந்ததால் வந்த மாற்றம் என கிசு கிசுக்கப்படுகிறது. டால்மியாதான் அசாரின் துன்பங்களுக்கு காரணமென ஒரு பேச்சும் உள்ளது. அது கிடக்கட்டும். அசார் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டதை ICC கண்டனம் செய்துள்ளது. அதை எதிர்த்து பிந்த்ரா, மற்றும் பவார் குரல் எழுப்பியுள்ளனர். தடை நீக்கம் குறித்தும் விவாதிக்கப் போவதாக தெரிகிறது. பவார் கூறியதாவது:
அசார் இந்திய அணிக்கு பலவாறு திறம்பட கடமையாற்றியுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவருக்கு எல்லா தகுதியும் உள்ளது.
ICC இந்திய அணியிடம் மட்டும் காட்டமாக நடந்து கொள்வதேன்? கலங்கம் சுமத்தப்பட்டு தடை செய்யப்பட்ட வீரர்கள் கிப்ஸ், வார்னே ஆகியோர் இப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அசார் இனிமேல் விளையாடப் போவதில்லை.
எது எப்படியோ, அசாரின் சாதனைகள் மகத்தானவை. அவர் இந்திய அணிக்கு ஆற்றிய தொண்டும் மகத்தானவையே. சிறந்த வீரர். அவருடைய அந்த லெக் ஃப்லிக் இன்று வரை எந்த ஆட்டக்காரராலும் பயிற்சியின் போது கூட செய்ய முடியாதவை. அவரின் பேட்டிங் ஸ்டைல் எதிரணி வீரர்களை கூட மயக்குபவை. அப்படி இருந்தவரின் இருந்தவரின் நிலை இன்று இப்படி. சோகமே, என்னைப் பொறுத்தவரை அவர் மேலுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாதவரை இந்த தடை பொருளற்றதே. அவரால் இனிமேல் இந்திய அணிக்கு விளையாட முடியுமா (தடை நீங்கி வாய்ப்பு கிடைக்குமா?) தெரியவில்லை (ஆனால் மனிதன் இப்போதும் அதே பெர்ஃபெக்ட் ஃபிட் தான்). அவருக்கு இந்திய கிரிக்கெட் தொடர்பானவற்றிலாவது அனுமதிக்க வேண்டும். என்ன சொல்கிறீர்கள்?
பின்பு, எனக்கு ஒரு வித்தியாசமான விருப்பம் ஒன்றுள்ளது. அதாவது, அசார் இதுவரை 99 (நாட் அவுட்) டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். அவருக்கு 100 போட்டி ஆடச்செய்து (ஏடன் கார்டனாக இருந்தால் சிறப்பு), அதே போட்டியில் நம்ம 'தல' கங்குலிக்கும் வாய்பளித்து, இருவருக்கும் சிறந்ததொரு பிரிவுபச்சார ஆட்டம் ஆடச்செய்து சிறப்பிக்க வேண்டும். இரண்டு வெற்றிகரமான தலைவர்களையும் சிறப்பித்தது போலாகிவிடும். என் விருப்பமும் நிறைவேறி விடும்.
4 comments:
சச்சினின் திருமணத்தில் கலந்துக்கொண்டவர்கள் அய்ம்பது பேரும் புக்கிகள் என்று 'புகை' கிளம்பி, பேருக்கு கூட விசாரணை இல்லாமல் - அவசரம் அவசரமாக அது அமுக்கப்பட்டது.
அசாருத்தீனுக்கு அதீத தண்டனை வழங்கப்பட்டதற்கு அவர் இச்லாமியராக இருந்ததும் அப்போது பி ஜே பி "புண்ணியவான்"கள் நாட்டை ஆண்டதும் பக்க காரணங்கள்.
வாங்க அனானி!
//சச்சினின் திருமணத்தில் கலந்துக்கொண்டவர்கள் அய்ம்பது பேரும் புக்கிகள் என்று 'புகை' கிளம்பி, பேருக்கு கூட விசாரணை இல்லாமல் - அவசரம் அவசரமாக அது அமுக்கப்பட்டது.
//
சச்சினைக் குறித்து சூதாட்டத்தில் பங்குண்டு என்று சில புகை எழும்பியது உண்மை. ஆனால் அது எந்தளவுக்கு உண்மை என எனக்கு தெரியவில்லை.
//அசாருத்தீனுக்கு அதீத தண்டனை வழங்கப்பட்டதற்கு அவர் இச்லாமியராக இருந்ததும் அப்போது பி ஜே பி "புண்ணியவான்"கள் நாட்டை ஆண்டதும் பக்க காரணங்கள்//
பின் எப்படி ஒரு இஸ்லாமியர் சுமார் பத்து ஆண்டுகளாக அணித்தலைவராக இருக்க முடிந்தது??
அதீதத்துக்கான பக்க காரணத்தைத் தான் நான் சொன்னேன். பக்கா காரணத்தை அல்ல. மேலும், தலைவர் ஆவதற்கான 'வேறு திறமை'களும் அசாருதீனுக்கு இருந்தனவே. இங்கு நாம் காண வேண்டிய அரசியல், ஜடேஜா, அசார்கள் அகப்பட்டுக்கொள்வதற்கும் சச்சின்கள் தப்பிக்கவைக்கப்படுவதற்கும் இடையில் இருக்கிறது.
இப்போதைய சச்சினை நம்பலாம், நம்பகத்தன்மையை கட்டிக்காக்கும்நிலையில் இருப்பதால்.
//அதீதத்துக்கான பக்க காரணத்தைத் தான் நான் சொன்னேன். பக்கா காரணத்தை அல்ல. மேலும், தலைவர் ஆவதற்கான 'வேறு திறமை'களும் அசாருதீனுக்கு இருந்தனவே//
இருக்கலாம்.
//இங்கு நாம் காண வேண்டிய அரசியல், ஜடேஜா, அசார்கள் அகப்பட்டுக்கொள்வதற்கும் சச்சின்கள் தப்பிக்கவைக்கப்படுவதற்கும் இடையில் இருக்கிறது.
//
அரசியல் தானே இந்திய கிரிக்கெட்டின் முழுநேரத் தொழில்.
Post a Comment