என்ன தோன்றுகிறது??

மேலே உள்ள படத்தைப் பார்த்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். நான் இப்படத்தை பார்த்தவுடன் அலுவலகம் என்று கூட பாராமல் வாய்விட்டு சத்தமாக சிரித்து விட்டேன். எல்லாரும் என்னைப் பார்த்து முறைத்ததுதான் மிச்சம். (பின்பு எல்லாருக்கும் மின்னஞ்சல் அனுப்பி வைத்து விட்டேன்)
சிறந்த கமென்ட்... பரிசு... அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாதுங்க... சும்மா.. இதைப் பாத்து நீங்க என்ன் நினைக்கிறீங்கனு தெரிஞ்சுக்கத் தான். :) புகுந்து விளையாடலாம்.
16 comments:
அமாவாசை இருட்டுல கூலிங் க்ளாஸ் போட்டுட்டு நடக்கிறா மாதிரி இருக்கு!
இத பாத்துட்டா சிரிச்சிங்க?
எனக்கு ஒண்ணும் வரலையே!
வாங்க தம்பி வாங்க!
//இத பாத்துட்டா சிரிச்சிங்க?
எனக்கு ஒண்ணும் வரலையே!//
அதுக்குத்தான் உங்க கருத்தை கேட்டது.
இது ஒவ்வொருத்தரோட நகைச்சுவை சுவையை பொறுத்தது. சிலருக்கு கவுண்டர்-செந்தில், சிலருக்கு விவேக், சிலருக்கு வடிவேலு... அதுமாதிரி எனக்கு சிரிக்கனும்னு தோனியிருக்கும் போல... :)
ஆமா... நீங்க அமாவாசை இருட்டுல கூலிங் க்ளாஸ் போட்டிருக்கியளா?
லொடுக்கு,
நான் என்னோட மோட்டார் பைக்கை எப்பல்லாம் கழுவுகிறேனோ அப்பல்லாம் மழை பெய்யும். அது நியாபகத்துக்கு வருகிறது!
அடப்போங்கப்பா, வயித்தெரிச்சலைக்கிளப்பிட்டு, என்பார் தஞ்சாவூர் விவசாயி. நான் : உன் சின்ஸியாரிட்டிக்கு ஒரு அளவேயில்லையாடா? [விவேக் போல சொல்லவும்]
அண்ணே!
மழைத் தண்ணியில அமிலம் கலந்திருக்குதாமே!; அதுதான் சுத்தமாக்கின குழாய்த் தண்ணில கழுவுராக போல!
சிரிச்சேன்
யோகன் பாரிஸ்
அந்த காரை கழுவுவதற்கு கூட எனக்கு சிரிக்க தோனவில்லை. அதற்கு வரிசையில் இன்னொரு கார் நிற்பதை பார்த்துதான் சிரிப்பு வந்தது.
//விடாதுகருப்பு சொன்னது...…
லொடுக்கு,
நான் என்னோட மோட்டார் பைக்கை எப்பல்லாம் கழுவுகிறேனோ அப்பல்லாம் மழை பெய்யும். அது நியாபகத்துக்கு வருகிறது!
//
வாங்க கருப்பு அய்யா!
அப்போ உடனே சிங்கப்பூரை விட்டுபுட்டு ஊரு பக்கம் போயி அடிக்கடி உங்க பைக்கை கழுவுங்க. :)
//MSV Muthu சொன்னது...…
அடப்போங்கப்பா, வயித்தெரிச்சலைக்கிளப்பிட்டு, என்பார் தஞ்சாவூர் விவசாயி. நான் : உன் சின்ஸியாரிட்டிக்கு ஒரு அளவேயில்லையாடா? [விவேக் போல சொல்லவும்]
//
முத்து,
உங்கள் கருத்தை படிச்சுட்டு சிந்தித்தேன், சிரித்தேன். கருத்துக்கு நன்றி.
//Johan-Paris சொன்னது...…
அண்ணே!
மழைத் தண்ணியில அமிலம் கலந்திருக்குதாமே!; அதுதான் சுத்தமாக்கின குழாய்த் தண்ணில கழுவுராக போல!
சிரிச்சேன்
யோகன் பாரிஸ்
//
வாங்க ஜான்,
மழைத்தண்ணில அமிலமா?? அடப்பாவிகளா அங்கேயும் கலப்படமா?? என்னத்த சொல்ல போங்க.
//கார்மேகராஜா சொன்னது...…
அந்த காரை கழுவுவதற்கு கூட எனக்கு சிரிக்க தோனவில்லை. அதற்கு வரிசையில் இன்னொரு கார் நிற்பதை பார்த்துதான் சிரிப்பு வந்தது.
//
கார்மேகராஜா,
எனக்கென்னமோ நீங்க சொன்ன அந்த அடுத்த கார் கழுவுவதற்காக வரிசையில் நிற்கவில்லை, மாறாக அது கடந்து செல்லும் வண்டி என்றே எனக்கு படுகிறது.
மழை டாப்ப மட்டுந்தாம் நைனா கழுவும் கீழ யார் கழுவ
ஹி ஹிஹி ஹிஹிஹி
எனக்கும் சிரிப்பு வரலைங்க லொடுக்கு.. மழைபெய்யும் போது பைப் போட்டு செடிக்குத் தண்ணி விடும் ஆளுங்க நாங்க :)
//கொய்ந்த சொன்னது...…
மழை டாப்ப மட்டுந்தாம் நைனா கழுவும் கீழ யார் கழுவ
ஹி ஹிஹி ஹிஹிஹி
//
வாங்க கொய்ந்த வாங்க, இன்னும் கொய்ந்தயாவெ இருக்கீங்க... அதை மழை நின்னவுடனே செய்ய வேண்டியதுதானே....
அடாத மழையிலும் விடாது காரைக் கழுவுகிறார்.
இதுல என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கு!
கடமை உணர்ச்சியை பாராட்டணும் ஐயா பாராட்டணும்!
//பொன்ஸ் சொன்னது...…
எனக்கும் சிரிப்பு வரலைங்க லொடுக்கு.. மழைபெய்யும் போது பைப் போட்டு செடிக்குத் தண்ணி விடும் ஆளுங்க நாங்க :)
//
வாங்க பொன்ஸக்கா,
அதுசரி... உங்க சங்கத்து ஆளு செய்யும் போது உங்களுக்கு எப்படி சிரிப்பு வரும்...
//அமானுஷ்ய ஆவி சொன்னது...…
அடாத மழையிலும் விடாது காரைக் கழுவுகிறார்.
இதுல என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கு!
கடமை உணர்ச்சியை பாராட்டணும் ஐயா பாராட்டணும்!
//
ஆஹா!! வந்தாச்சய்யா வந்தாச்சு... ஆமா ஆவியக்கா, அங்கேயெல்லாம் மழை கிழை பெய்யுமா???
//எலிவால்ராஜா சொன்னது...…
சமயத்தில... ஒரு சில அழுக்கு எல்லாம் மழையால மட்டும் போய்விடாது, நல்ல கழுவ வேண்டியிருக்கும்.... ஒருகால் நல்ல மழை பெய்துதிருக்கும்போது இதுபோல அழுக்குகள் நல்ல ஊறி மிக இலகுவாக இருக்கும் அதை கழுவுகிறாரோ என்னவோ....
//
எலிவால்ராஜா,
நல்ல ஆராய்ச்சி!
//அது போல கழுவும் போது மழை பெய்ந்து இருக்கலாமில்லை.
ஒரு சில வேலையை பாதியிலே விட்டுவரமுடியாது இல்ல....ஹி..ஹி.....
//
அந்த விட்டுவராத தனம் தான் எனக்கு சிரிக்க தூண்டியது.
Post a Comment