ஜெயிச்சு தொலைங்கடா!
இன்று தெரியும் இந்தியாவின் வண்டவாளம். ஆமாம், நடந்து வரும் ஐசிசி சாம்பியன் கோப்பை போட்டியின் சுற்று போட்டிகளின் இறுதி போட்டி இன்று. கிட்டத்தட்ட காலிறுதி மாதிரித்தான். வெல்லும் அணி அரையிறுதிச் செல்லும். எனக்குத் தெரிந்து ஏழெட்டு ஆண்டுகளா அசராம கலக்கி வரும் ஆஸ்திரேலியா கூடத்தான் நமக்கு ஆட்டம் இன்னிக்கு. பாக்கலாம் நம்ம பசங்க என்ன பண்றாய்ங்கன்னு.
இந்த ஆண்டு தொடக்கத்தில் மேற்கிந்திய சுற்றுப் பயணத்தில் தோற்க தொடங்கிய நம்ம அணி இன்னும் அதை மறக்காம் செஞ்சுக்கிட்டு இருக்கு. அணியோட மனநிலை சுத்தமா தன்னம்பிக்கை வீழ்ந்து கிடக்கு. இதுக்கெடையில, பட்டகாலிலே படும்னு சொல்ற மாதிரி, மேலும் ரெண்டு மூனு இடி நம்ம அணிக்கு விழுந்துருக்குங்க. அகார்கர் காயத்தினால் வெளியேறிவிட்டடார். யுவராஜ்சிங்கும் அவரை தொடர்ந்து 'நீ மட்டும் சாட்டு போடுவியா' னு அகார்கர்கிட்ட சொல்லிகிட்டே அவரும் காலில் காயம்பட்டு வெளியே. முனாஃபிற்கும் காயம் என்று சொல்லப்படுகிறது. ஆடுகளங்கள் வேறே ரணகளமா இருக்கு. இவற்றை எல்லாம் மீறி நம் அணி வெல்லுமா?
அப்புறம் நம்ம அணியிலேயே உஷாரா ஆஸ்திரேலியாகாரய்ங்க ஒரு சதிகாரனை வச்சிருக்காய்ங்க. அதாங்க நம்ம கோச். நல்ல கோச் போங்க. எத்தனை பேரு வாயில இருந்துட்டான் இந்தாளு. இந்தாளு நாசமாக்குன வீரர்களின் பட்டியல்ல லேட்டஸ்ட் கைஃப். ஒழுங்க ஆடிட்டுருந்தவன் நம்பிக்கையை 'உள்ளே வெளியே' ஆடி நாசாமாக்கிட்டாரு. அனேகமா இன்னிக்கு கைஃபுக்கு சான்ஸ் கிடைக்கும். எல்லாம் ஒரு தற்காலிகம் தான். சாப்பலோட எக்ஸ்பெரிமென்ட் வேறே இன்னும் முடிஞ்ச மாதிரி தெரியல. அனேகமா இன்னிக்கு ஓபனிங் பவுலிங் நம்ம ட்ராவிட் செஞ்சாலும் ஆச்சர்யப்படுவதுக்கில்ல. என்னமாச்சும் பண்ணி ஜெயிச்சு தொலைங்கடா! உங்க பின்னாடி அலைஞ்சுக்கிட்டு, நாங்களும் ஒழுங்கா கஞ்சி தண்ணி இல்லாம, வேலை வெட்டி பாக்காம... என்னத்த சொல்றது போங்க....
21 comments:
லொடுக்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது ஆனாலும் நம்பிக்கை நிறைய உள்ளது. வெற்றி நமதே
வாங்க பொதக்குடியான்,
உங்களுக்கு உள்ள நம்பிக்கை நம்ம பசங்களுக்கு இருந்தாலே போதும் பாதி ஜெயிச்சா மாதிரி. :)
மேட்ச் தொடங்கியாச்சு.. இந்தியா பேட்டிங்... 34/0 (6.2)
ஸேவாக் - 25(27)
சச்சின் - 4 (15)
"Interestingly, Dravid is not padded up. Mongia, perhaps? Hopefully not that Pathan "experiment"..." from Cricinfo commentary..
experiment கிண்டலா போச்சு...
இல்ல சடை... இது உள் நாட்டு களவானித்தனம் :)
57/1 (14.2 ov)
76/1-18.0
india will win today if it fix the target 275 to aussies
இன்னிக்கு பொழப்பு எப்படி?
மணக்குமா? இல்ல வழக்கம்போலதானா?
90/2 (20.1 ov)
----
அனானி அது ஒங்களுக்கு டூ மச்சா தெரியல??
வாங்க தம்பி,
இன்னிக்கு பொழப்பு என்னைப் பொறுத்தவரை நாற்றம் தான்... யாருக்குனு சொல்ல மாட்ட்டேன்... ஹி ஹி...
டார்கெட் ஃபிக்ஸ் பண்ணலாமா? இந்தியா 235... ஓ.கே. வா?
லொடுக்கு,
நாம ஜெயிக்கபொறோம், நாளைக்கு பார்டி கொடுக்க தாயாரா இருங்க, உங்க ஊருக்கு பக்கத்தில் தான் இருக்கிறேன்.
லியோ சுரேஷ்
துபாய்
லொடுக்கு,
ஜெயிக்கப்போவது நாம் தான்,நாளைக்கு பார்ட்டி தர ரெடியாகவும்.
லியோ சுரேஷ்
துபாய்
India 105/2 (23.5 ov)
---------------------
வாங்க சுரேஷ்,
//ஜெயிக்கப்போவது நாம் தான்,நாளைக்கு பார்ட்டி தர ரெடியாகவும்.
//
ஜெயிச்சா தானே.. அப்பாடா தப்பிச்சேன்...
//உங்க ஊருக்கு பக்கத்தில் தான் இருக்கிறேன்.
லியோ சுரேஷ்
துபாய்
//
நீங்க எங்கே? விவேகானந்தர் குறுக்குச் சாலையா?
//நீங்க எங்கே? விவேகானந்தர் குறுக்குச் சாலையா?//
குறுக்கு சந்துப்பா அது... குறுக்கு சாலைன்னு டீஜண்டா சொன்னா எப்படி?
//ஜெயிச்சா தானே.. அப்பாடா தப்பிச்சேன்...//
அப்போ தோத்தா பார்ட்டி தருவீங்களா?
என்னா பெரிய மனசு ஒங்களுக்கு!
//குறுக்கு சந்துப்பா அது... குறுக்கு சாலைன்னு டீஜண்டா சொன்னா எப்படி?///
ஓ! குறுக்குச் சந்தா? மறந்து போச்சு தம்பி...
//அப்போ தோத்தா பார்ட்டி தருவீங்களா?
என்னா பெரிய மனசு ஒங்களுக்கு! //
அதுக்கு அப்படியில்ல அர்த்தம்... 'ஜெயிக்கவா போது இந்தியா' னு அர்த்தம்...
128/3(29.3)
India 208/5 (45.1 ov)
--------------------
என்னோட கணிப்பு டார்கெட் பலிச்சுடுமோன்னு பயமாகீது...
249/8 (50)
---
டார்கெட் மிஸ் ஆயிடுச்சு :)
தோத்துட்டாய்ங்க
ஏமாத்திப்புட்டாங்களே ஐயா ஏமாத்திப்புட்டாங்களே
//கலாநிதி சொன்னது...…
ஐயோ உங்க நினைப்புல மண்ணு பொண்டிங்கு அசராம அடிக்கிறாரூங்கோ... வழக்கம்போல சொதப்பல் செப்பல்..
//
கலாநிதி ஐயா!
முடிஞ்சு போச்சு... எல்லாம் முடிஞ்சு போச்சு... ஆட்டம் பாட்டம்... எல்லாம்.. என்ன செய்ய சொல்றீங்க... இவனுங்களையெல்லாம் .....
//-L-L-D-a-s-u சொன்னது...…
தோத்துட்டாய்ங்க
//
லாடு லபக்கு... என்ன சொல்றது மேற்கொண்டு... அதை மட்டும் இவய்ங்க கரெக்டா செய்றாய்ங்க...
//ஆவி அண்ணாச்சி சொன்னது...…
ஏமாத்திப்புட்டாங்களே ஐயா ஏமாத்திப்புட்டாங்களே
//
ஆஹா.. மேலோகத்திலும் நம்ம நாறுனது தெரிஞ்சு போச்சா... சே... கேவலம்...
Post a Comment