Monday, February 19, 2007

பார்க்கிங் தொல்லை

இன்னிக்கு காலையில வேலைக்கு அவசரமாக புறப்பட்டு கார்ல ஏறப்போனேன். அப்போ, பக்கத்து வண்டியை எங்க பில்டிங் வாட்ச்மேன் கழுவிக்கொண்டிருந்தார். "என்னது உங்க வண்டி முன்னாடி இடிபட்டிருக்கே" அப்படின்னார். எனக்கு தூக்கி வாரி போட்டது. என்னடா நமக்கு நேரம் சரியில்லையோன்னு ஓடிப் போயி பார்த்தேன். பெரிய அடி ஒன்னும் இல்லை. இருந்தாலும் நல்லா உரசியிருக்கு. பெயிண்ட் தான் கொஞ்சம் உறிஞ்சிருக்கு. அவர் இன்னிக்கு காலையில என்னோட வண்டியை கழுவும் போது பாத்தாராம். நான் தான் கவனிக்காம விட்டிருக்கேன்.

வீட்டுல பார்க் பண்ணியிருக்கும் போது இது நடந்திருக்க வாய்ப்பில்லை. நேத்து அலுவலகம் வந்தப்ப நிறுத்தியிருந்த பார்க்கிங்ல தான் ஏதோ ஒரு நாதாரி இடிச்சுட்டு ஓடியிருக்கு. என்ன பண்ண! காலையிலேயே போலிஸுக்கு தொலைபேசி பேப்பர் வாங்க நேரமில்லாததால் நானும் கெளம்பி அலுவலகம் வந்துட்டேன். என்ன செய்றதுன்னு அப்புறம் யோசிக்கலாம். அதுக்கிடையில இந்த பார்க்கிங் தொடர்பா ஒரு வீடியோ மின்னஞ்சல் ஒன்னு வந்தது. மனுசன் எப்படி பார்க் பண்றான்னு பாருங்களேன் இந்த வீடியோல. இவனோட சேர்ந்த ஏதோ ஒரு நாதாரி தான் என்னோட வண்டியையும் இடிச்சிருக்கனும். இவனுங்களையெல்லாம்.....

14 comments:

said...

கண்டிப்பாக துபை லைசென்ஸ் உள்ள ஆளா இருக்காது. இடமும் துபையாக இருக்காதென்றே நினைக்கிறேன்.
இவ்வளவு தைரியமா?

said...

ஆமாம் வீடியோவில் உள்ளது துபை இல்லையென்றே நினைக்கிறேன். :) தப்பித்தோம்.

ஆனால், என்னோட வண்டி இடிபட்டது துபையில் தான்.

said...

லொடுக்கு தம்பி,
நா சூப்பரா பார்க் பன்னுவேன். நேரா ஆபீஸ் வந்தவுடன் மெதுவா என் சீட்டுகிட்ட வந்து கீழே பேக்கை வச்சுட்டு மேஜை பக்கமா என் முகம் இருக்குறாப்புல வச்சிகிட்டு(ரிவர்ஸ் பார்கிங்) நாற்காலியின் இரண்டு கைகளுக்கும் நடுவே நின்னுகிட்டு டபுக்ன்னு பார்க்கிங் தான். ரொம்ப ஈசி!!!

said...

வாங்க அபி அப்பா!

உங்க பார்க்கிங் மெட்தெட் நல்லாத்தான் இருக்கு. :)

ஆமா! உங்களை காணோம்னு ஒரே புகாரா இருக்கு.

said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

அதெல்லாம் சதி லொடுக்குதம்பி, ஒரு கும்மி குரூப் கராமாவுல லாட்ஜ் எடுத்து தங்கிகிட்டு அடிக்கிற ரவுசு தாங்கல...

said...

//அபி அப்பா சொன்னது...…

அதெல்லாம் சதி லொடுக்குதம்பி, ஒரு கும்மி குரூப் கராமாவுல லாட்ஜ் எடுத்து தங்கிகிட்டு அடிக்கிற ரவுசு தாங்கல...
//

அதெல்லாம் யாருன்னு நான் கண்டுபுடிச்சுட்டேன்.

Anonymous said...

லொடுக்கு...இந்த அபி அப்பாவோட வச்சிக்காதீங்க...

இவர் வீராசாமி படத்தை ரெண்டு முறை பார்த்தவரு...

ஏதாவது பேய் பிடிச்சிருந்தாலும் இருக்கும்..

said...

வாங்க செ.ரவி,

ஓ! அவர்தான் இவரா?

ஒருத்தர் வீராச்சாமி படத்தை ரெண்டு தடவை பாத்திருக்காருன்னு வலையுலகம் முழுதும் பேசிக்கிற ஆளு இவர் தானா. நல்லவேளை முன்னாடியே சொன்னீங்க ரவி. அவர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கிறேன்.

said...

இப்டீல்லாம் சொன்னாக்க "வீராசாமி" விமர்சனம் போடுவேன்.

Anonymous said...

//அபி அப்பா சொன்னது...…

இப்டீல்லாம் சொன்னாக்க "வீராசாமி" விமர்சனம் போடுவேன்.
//
வீட்டுல திரும்ப படம் பாத்து உயிர வாங்குனது போதாதா அப்பா?

said...

//அபி அப்பா சொன்னது...…

இப்டீல்லாம் சொன்னாக்க "வீராசாமி" விமர்சனம் போடுவேன்.
//
கொஞ்சம் கூட கருனையில்லாம என்ன இது?

said...

உங்க வண்டிய நான் இடிக்கலிங்கோ.

இப்பதாம்ல லைசென்ஸே அப்ளை பண்ணியிருக்கேன்.

வீராசாமி விமர்சனத்தை எழுத தூண்டிய லொடுக்காரை கண்டிக்கும் விதமாக அவர் குடும்பத்தோடு வீராசாமி படம் பார்க்க கடவது.

said...

//தம்பி சொன்னது...…

உங்க வண்டிய நான் இடிக்கலிங்கோ.

இப்பதாம்ல லைசென்ஸே அப்ளை பண்ணியிருக்கேன்.

வீராசாமி விமர்சனத்தை எழுத தூண்டிய லொடுக்காரை கண்டிக்கும் விதமாக அவர் குடும்பத்தோடு வீராசாமி படம் பார்க்க கடவது.
//
தம்பி,
உங்க கிட்ட லைஸன்ஸ் இல்ல. இல்லன்னா நான் முடிவே பண்ணியிருப்பேன் நீங்கதான்னு.

ஆமா, அது என்ன மூச்சுக்கு முன்னூறு தடவை 'வீராச்சாமி' 'வீராச்சாமி' னு சொல்லிக்கிட்டே இருக்கீங்க?