கங்குலியும் சதுரங்கமும்
மீண்டும் ஒருமுறை கங்குலி எனும் பகடை இந்திய கிரிக்கெட் அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்பட்டுள்ளது.
ஆமாங்க, நான் ஒரு கங்குலி விசிறிதான். அதற்காக அவர் தான் உலகின் தலைசிறந்த வீரர் என்று சொல்லவில்லை (என்னைப் பொறுத்தவரை ட்ராவிட் தான் தற்போதய கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த வீரர்). ஆனால் அவரை கிரிக்கெட் அரசியலில் இறக்கிவிட்டு. பகடை காயாக்கி வேட்டயாடி விளையாடிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டமே. இதில் இந்திய அணியின் தற்போதய பயிற்சியாளரும் அடக்கம். க்ரேக் சாப்பலின் நடவடிக்கைகள் அனைத்தும் முட்டாள் தனமாகவே உள்ளது (முட்டாள்களின் விளையாட்டு என்பதனாலா?). இன்றைய தேதி வரை அவர் சோதனை(experiment) மட்டுமே செய்து கொண்டிருக்கிறார். எப்போது சோதனை முடிந்து ஒரு முடிவுக்கு வரப் போகிறாரோ தெரியவில்லை. அவருக்கு உலகக் கோப்பை நெருங்கி வருகிறது என்பதை யாராவது நினைவுபடுத்தினால் புண்ணியாமய் போகும். ட்ராவிட் தொடக்க ஆட்டக்காரராம். என்ன எளவுப்பா அது. அவர் தான் முதுகெலும்பு. அதைப் பலிகட ஆக்கவா சோதனை முயற்சி.
ம்ம்ம். அதை விடுங்க. கங்குலி நீக்கப்பட்ட நேரத்தில் அப்படி என்ன மோசமாக ஆடினார் என்று தூக்கினார்கள்? அந்த நேரத்தில் அவர் கண்டிப்பாக சேவாக், சச்சின், கைஃப் விட நன்றாகத்தான் ஆடி இருந்தார். அவரது நீக்கம் முற்றிலும் அரசியல் என்பது நாடறிந்த உண்மை. அதன் பிறகு ஒரு வருட காலம் முற்றிலும் சீண்டக்கூட படவில்லை. கேட்டால், இளைஞர்களுக்கு முன்னுரிமை, ஃபீல்டிங்கில் அவர் வீக். அடப் பாவிகளா?? அப்போ நீங்க, சச்சின் மட்டும் முழுதகுதி இல்லாத போதும் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்? அதிலும் இந்த சச்சின் இருக்காரே சரியான உஷார் பேர்வழி. துனைக்கண்டங்களின் நடக்கும் தொடருக்கு மட்டும் 'நான் ஃபிட்' என்று அறிவித்து விடுவார். வெளியே என்றாலே கிலிதான் மச்சானுக்கு (தற்போதய சச்சினை மட்டுமே சொன்னேன்). ஆனால் அவர் காயங்களில் இருந்து மீண்டு வந்தால் நேரடியாக தேர்வாவார். உள்ளூர் போட்டிகளில் ஆடத்தேவையில்லை. மற்றவர்கள் கண்டிப்பாக ஆட வேண்டும். அதென்ன அப்படி? அவர் என்ன ட்ராவிட் மற்றும் கும்ப்ளே விட டெஸ்ட் போட்டிகளை வென்று தந்தாரா? இல்லை கங்குலி போல் ஒரு நாள் போட்டிகளை வென்று தந்தாரா? அவர் செய்தது எல்லாம் எக்கேடு (அணி) கெட்டாவது சொந்தா எண்ணிக்கை கூட்ட வேண்டும். கங்குலி ஒன்றும் சச்சினுக்கு (ஒரு நாள் போட்டிகளில்) குறைந்தவரில்லை என்பது கிரிக்கெட் அறிந்தவருக்கு தெரியும். அப்படி இருக்கும் போது ஏன் இரு வேறு அளவுகோல்கள்?
எது எப்படியோ? அணி வெல்ல வேண்டும் (உள் நாட்டில் மட்டுமில்லாமல்). DADA அணிக்கு திரும்ப வேண்டும். அந்த lofted Straight Sixes நாங்கள் மீண்டும் காண வேண்டும்.(விடுபட்டவை பின்னூட்டங்களில் அலசப்படும்.)
19 comments:
சொதப்பும் பட்சத்தில் கேப்டனாக இருந்தாலும் தூக்கு என்ற கொள்கை ஆஸ்திரேலிய தேர்வாளர்களிடம் மட்டுமே இருக்கும் என்று நினைத்தேன். கங்குலியை துக்கினதும் அடடா இந்திய அணியில் கூட இந்த மாதிரி செய்ய முடியுமா என்று ஆச்சரியப்பட்டேன். இப்போதான் தெரிஞ்சது சுத்தமா திட்டமிட்டே கங்குலிய "மாஞ்சா" போட்டாங்கன்னு கங்குலி விளையாடுறாரோ இல்லியோ அவர வச்சி நல்லா விளாடுறாங்க.
//அவர் செய்தது எல்லாம் எக்கேடு (அணி) கெட்டாவது சொந்தா எண்ணிக்கை கூட்ட வேண்டும்//
இந்த விஷயத்தில எனக்கு உடன்பாடு இல்லை.
தவிர உலகமே வியக்கும் ஒரு வீரர் அவர். என்னோட விருப்பம் சச்சின் சிங்கமாவே அணியிலருந்து போகணும். யாரும் துரத்துற மாதிரி ஆகக்கூடாது.
////அவர் செய்தது எல்லாம் எக்கேடு (அணி) கெட்டாவது சொந்தா எண்ணிக்கை கூட்ட வேண்டும்//
இந்த விஷயத்தில எனக்கு உடன்பாடு இல்லை.
//
நான் சொன்னது சச்சின் கடந்த 2/3 ஆண்டுகளாக செய்து வருவதை.
//சச்சின் சிங்கமாவே அணியிலருந்து போகணும்//
சிங்கத்துக்கு முன்னாடி 'அ' சேர்க்க வேண்டி வரும்னு நினைக்கிறேன்.
Sachin is a best player.He is the best example to youth.He is very good in both Cricket & his personal life.But Ganguly is not like that he is a good player but he have over confidence and his approches led him in trouble.
ஜிலேபியா தெரியுது நோட்பேடில் ஒட்டித்தான் படித்தேன். கங்குலிக்கு நேரம் சரியில்ல அவ்வளவுதான். கங்குலி இப்ப படுக்குழி ;-)
//ஜெஸிலா சொன்னது...…
ஜிலேபியா தெரியுது நோட்பேடில் ஒட்டித்தான் படித்தேன். கங்குலிக்கு நேரம் சரியில்ல அவ்வளவுதான். கங்குலி இப்ப படுக்குழி ;-)
//
அப்படியா?? இங்கு நானும் சில கணிணியில் பார்த்து விட்டேன், இங்கு ஜிலேபி தெரியவில்லை. என்னமோ உங்களுக்கும் ஜிலேபிக்கும் 'பூர்வ ஜென்ம பந்தம்' போல.
கங்குலிக்கு இப்போ படுக்குழியா? நீங்க வேனா பாருங்க DADA திரும்ப வரத்தான் போராரு.
it is ganguly who brought all these dynamic players in to the team. as you correctly said tendulkar plays only for his records.
//Anonymous said...
it is ganguly who brought all these dynamic players in to the team. as you correctly said tendulkar plays only for his records.
//
அப்பாடா!! ரொம்ப நாளைக்கப்புரம் நம்ம தலைக்கு ஒரு ஆதரவுக் குரல்... சேலஞ்சர் ட்ராஃபில தல ஜொலிக்க வாழ்த்துக்கள்.
//அணி வெல்ல வேண்டும் (உள் நாட்டில் மட்டுமில்லாமல்)//
இது நப்பாசையா? பேராசையா?
ஆசையே அழிவிற்குக் காராணம்!
//இது நப்பாசையா? பேராசையா?
ஆசையே அழிவிற்குக் காராணம்! //
முதலில், இந்திய அணியை விடாமல் துரத்தும் ஆவியை வன்மையாக கன்டிக்கிறேன்.
ஆத்தா! ஆவியாத்தா! நம்ம அணி எப்படியாவது ஜெயிக்கட்டும் னு நினைக்கிறது தப்பா??
ஆமா, எனக்கு ஒரு சந்தேகம். நீங்க நல்லவரா? கெட்டவரா?
லொடுக்கு,
கங்கூலியின் காலம் முடிந்துவிட்டது.(விளையாட்டில் தானய்யா).கங்கூலி டீசண்ட்டாக ரிட்டையர் ஆகியிருக்கலாம்.
சச்சினின் மீதான உம் விமர்சனம் என்னை பொறுத்தவரை உண்மைதான்.
வாங்க முத்து(தமிழினி),
இப்பதிவுக்கு காலம் கடந்து வந்தாலும் நன்றிகள். ஆனா நம்ம தல அணிக்கு மீண்டும் வர இருக்கும் நேரத்துல தான் வந்து இருக்கிய.
நம்ம தலயோட சோலி முடிஞ்சு போச்சு பட்டுன்னு சொல்லிராதிய. சனியன் கிரன் மோரெ பொயிட்டான்ல. சேலஞ்சர் ட்ராஃபில தல கலக்கிட்டா போதும்ல. உள்ள வந்துருவோம்ல. வெங்க்சர்க்கார் நல்லவர்னு கேள்விபட்டேன்.
பொறுமையா இருக்கலாம். தென் அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் தல-க்கு நிச்சயம் இடம் இருக்கு. பந்தயம் வச்சுக்குவோமா?
அப்புறம் சொல்ல மறந்துட்டேன் அன்பர் முத்து, சச்சினைப் பற்றிய நமது கருத்துக்களை மறுப்பவர்கள் அவரின் தீவிர ரசிகர்களாவே இருப்பார்கள். வேறு எவரும் அதை மறுக்க வாய்ப்பில்லை.
//ஆவியாத்தா! நம்ம அணி எப்படியாவது ஜெயிக்கட்டும் னு நினைக்கிறது தப்பா??
//
தப்பே இல்லை! எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லையா என்ன? எப்படியாவது என்பதற்கு பதில் எப்போதாவது என்பதைச் சேர்க்கவும்.
பங்களாதேஷ், அரேபிய அணிகளுடன் விளையாடும்போது.
ஜிம்பாப்வே போன்ற அணிகளுடன் விளையாடும்போது கூட இந்த ஆசை ஏதோ கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது.
//நீங்க நல்லவரா? கெட்டவரா?
//
இம்மாம்பெரிய கேள்விய கேட்டு என்னைய சாச்சிப்புட்டியே தம்பி!
சச்சினுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் கங்குலி வழங்கப்படவில்லை என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. இன்றைய இந்தய அணியின் இளம் வீரர்கள் பலரை உருவாக்கியதில் கங்குலியின் பங்கு முக்கியமானது. என்ன சச்சின் அளவுக்கு கங்குலி விவரம் கிடையாது. சச்சின் விமர்சனங்கள் வரும் போது ஒரு சதம் அடித்து அடுத்த 20 ஆட்டங்களுக்கு பிரச்சனை இல்லாமல் தப்பித்துக் கொள்வார். அந்த வகையில் சச்சினை விட கங்குலி பின்தங்கிதன் இருக்கிறார். கங்குலி பலிகடாவாக்கப்பட்ட திறமைசாலி. தாதா வாழ்க்கையில் வெங்சர்கர்தான் விளக்கு ஏத்தி வைக்கணும்
//அமானுஷ்ய ஆவி சொன்னது...…
தப்பே இல்லை! எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லையா என்ன? எப்படியாவது என்பதற்கு பதில் எப்போதாவது என்பதைச் சேர்க்கவும்.
பங்களாதேஷ், அரேபிய அணிகளுடன் விளையாடும்போது.
ஜிம்பாப்வே போன்ற அணிகளுடன் விளையாடும்போது கூட இந்த ஆசை ஏதோ கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது.
//
ஏக்கா! இது ஒங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல? சும்மா பங்களாதேஷ் கூடல்லாம் விளையாடும் போது நம்ம அணி ஜெயிக்கும்னு அடிச்சு சொல்ரீங்களே அதத் தான் சொன்னேன்.
//இம்மாம்பெரிய கேள்விய கேட்டு என்னைய சாச்சிப்புட்டியே தம்பி!
//
நீங்க சாய்ஞ்சா என்ன சாயாட்டி என்ன.. ஒங்களுக்குத் தான் காலே இல்லையே.
------
அன்பு முத்துக்குமரன்,
உங்களுடன் நான் முழுமையாக ஒத்துப் போகிறேன். :) சச்சினுக்கு இப்படு உள்குத்து கொடுத்ததற்காக நமது அனானி சகாக்களிடம் சொல்லி மெளன்ட் ரோடில் கட்-அவுட் வைக்க ஏற்பாடு செய்யலாம்.
nalla alasal..gangulay thavare seydhirundhalum avrai indha alavu avamana paduth thevai illai than..
வாங்க கார்த்திக்,
இந்திய கிரிக்கெட்டில் அரசியல் காலகாலந்தொட்டு உண்டு என்பது எல்லாரும் அறிந்ததே. ஆனால் கங்குலி விவகாரம் அதில் சிகரம் என்று நான் நினைக்கிறேன். கங்குலி மட்டுமில்லாமல் நிறைய வீரர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தொடர்ந்து புறக்கனிக்கப் பட்டு வரும் ஜாகிர் கானும் இன்னொரு எடுத்துக்காட்டு.
Post a Comment