Sunday, September 17, 2006

கிரிக்கெட்: பொழப்பு நாறாம இருந்தா சரிதான்

நம்ம ஆளுங்களுக்குத் தான் கிரிக்கெட் பத்தி பேசுரதுன்னா போதுமே. நாலு நாளைக்கு கஞ்சி தண்ணி இல்லாமக் கூட இருந்த இடத்துல சீட்டு தேயுர வரைக்கும் (நானும்தாங்கோ) பேசுவானுங்க. இப்போ நடந்துக்கிட்டு இருக்கும் கோலாலம்பூர்ல (பேருல ஏதோ அமெரிக்கா சதி மாதிரி தெரியுதுல்ல? ... இருக்கட்டும் அதைப் பத்தி அப்புறம் விசாரிக்கலாம்) நடக்கும் முத்தரப்பு போட்டியை பத்தி விளாவாரியா அரட்டை அடிக்கலன்னா எப்படிங்க. அதான் ரெண்டு மூனு பேரு எழுதுராங்கல்ல உனக்கென்ன லொடுக்குன்னு சொல்ரீங்கலா? நம்ம நாட்டுல கிரிக்கெட்டுக்கு இருக்குர மவுசுல ரெண்டு மூனெல்லாம் பத்தாதுங்கோ.. அதான் நானும் இங்க...


நம்ம டீம் போகும் போதே சச்சின் பேரைச் சொல்லி படங்காட்டிடுத் தான் போச்சுங்க. படங்காட்டுன மாதிரி நம்மாளு அடிக்கத்தாஞ் செஞ்சான். ஆனா பாருங்க அவரு அடிச்சாலே டீம் வெளங்காதுன்னு என்னோட கூட உள்ளவனுங்க சொன்ன மாதிரி ஆகி போச்சு. அட முடிவை நம்ம ஆட்களுக்கு ஏத்துக்குற பக்குவம் போதாதுங்க. மழை குறுக்க வந்து கெடுத்து புருச்சாம். அலுத்துக்கிறானுங்க. நான் சொன்னேன், அட போங்கப்பா சச்சின் அடிச்சதெல்லாம் சரிதான். ஆனா வெஸ்ட் இன்டீஸ் காரனுங்க கெடச்ச 20 ஓவர்ல நம்ம பந்துவீச்சாலர்களை பிரிச்சு மேய்ஞ்சாய்ங்க பாருங்க அதை மறுக்கா கூடாதுன்னு. என்னங்க நான் சொன்னது சரிதானே? என்ன கேட்டா, மழை வராம இருந்திருந்தா 40 இல்ல 45 ஓவர்லேயே அவனுங்க ஜெயிச்சுருப்பானுங்க. ஆமா.


அப்புறம். இந்த ரெண்டாவது ஆட்டம். அதுவும் ஜகஜால கில்லாடிங்க ஆஸ்திரேலியா கூட. கொஞ்சம் தொட நடுங்குர சமாச்சாரம் தான் (பின்ன ரொம்ப நாள் கழிச்சு, பந்த அளந்து பிசகாம வீசுர படுபாவி மெக்ராத் வந்துருக்கான்ல). செய்தியெல்லாம் ஒரே பரபரப்பு செய்தி 'சச்சின் - மெக்ராத் மீண்டும்' என்று. நான் மனசுக்குல்லேயே நெனச்சுக்கிட்டேன். இது அப்போ உள்ள சச்சின் இல்லன்னு. இப்போ உள்ள சச்சின் தரம் கொறஞ்ச பந்துவீச்சை மட்டும் தான் விளாசுவாரு. முன்ன மாதிரி இல்லன்னு. அதுவும் இந்த முறை சேஸிங் வேர. மெக்ராத் சச்சினுக்கு வீசுன மொத பந்தே ஹெல்மெட்ல. கொடுமட சாமி. பயங்காட்டுரானே நெனச்சா மீண்டும் மழை. சரி டார்கெட் தான் குறச்சாச்செ பசங்க சீக்கிரம் பயப்படாம அடிச்சுருவானுங்கன்னு நப்பாசை. கிழிஞ்சது போங்க. அந்த ஜான்ஸன் பய வந்து ஆட்டத்தையே கெடுத்துப்புட்டான். மட மடன்னு கம்பி நீட்டுரானுங்க நம்ம பசங்க. போச்சுடான்னு நெனச்சா மீண்டும் மழை. புள்ளிகள் பங்கீடு. என் கூட இருந்தவனுங்க இதை ஒரு வெற்றி மாதிரி கொண்டாடுரானுங்க. அட நாதாரிங்களா! இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு இந்த மழை வந்திருந்தா நாறிப் போயிருக்கும்டா நாறி. பொழப்பு சிரியா சிரிச்சுருக்கும். நம்ம ஆளுங்க ஆடுன ஆட்டத்தை நெனச்சு வருத்தப்படுவானுங்களா? கொண்டாடுரானுங்க. சே இதெல்லாம் ஒரு பொழப்பா!!!

சே! இந்த சாப்பல் எப்பத்தான் சோதனை முயற்சியை நிறுத்தப் போறாரோ! நமக்குத்தான் அதுவரை சோதனையா இருக்கும்.


என்னாமோ போங்க! நம்ம டீம் ஃபைனல் போகுதானு பாப்போம். யப்பா சாமிகளா கொஞ்சம் (நிறைய) நல்லா ஆடுங்கடா!!

14 comments:

said...

//நம்ம டீம் ஃபைனல் போகுதானு பாப்போம்//

பேராசை பெருநஷ்டம்.......!

said...

ஆவி வந்துருச்சா!!! போச்சுடா. இந்த ஆவிங்களாம் எங்கே கிரிக்கெட் பாக்குது.

ஆவியாரே! எல்லாம் ஒரு பாஸிடிவ் அப்ரோச் (இதுக்கு தமிழ்ல எப்படி சொல்லுரது) தான்.

said...

//பாஸிடிவ் அப்ரோச் //

நேர்மறை அணுகு முறை!

said...

தமிழாக்கத்திற்கு நன்றி ஆவி.

ஆமா இப்போ எந்த ஏரியாவுல சுத்துரிய?

said...

"லிட்டில் மாஸ்டரை" ஓரங்கட்டும் உங்களது எழுத்தை வன்மையாக கண்டிக்கிறேன் :(

said...

//தம்பி said...
"லிட்டில் மாஸ்டரை" ஓரங்கட்டும் உங்களது எழுத்தை வன்மையாக கண்டிக்கிறேன் :(
//

அவரே ஓரங்கட்டிக்குவாருன்னு நினைக்கிறேன்.

Anonymous said...

"அதற்கு முன் அவுஸ்திரேலியாவுடன் நடந்த ஆட்டத்தைப் பாருங்கள். "

Yes... Yes... We have Irfan Mgrath, RP Jhonson etc in our bowling line up.

said...

//அதற்கு முன் அவுஸ்திரேலியாவுடன் நடந்த ஆட்டத்தைப் பாருங்கள். "

Yes... Yes... We have Irfan Mgrath, RP Jhonson etc in our bowling line up //

சரியாக சொன்னீர்கள் சாப்பல்.

said...

//வைசா said...
முதலாவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றிருக்கும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
//

யாரும் எப்படி வேண்டுமானாலும் கணிக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். இதுவரை ஆடிய ஆட்டங்களில் நமது அணி மோசமாகவே ஆடி உள்ளது.

said...

கிரிக்கட் நேரடி ஒளிபரப்பு, நையாண்டி, சிரித்து மகிழ - http://lollusabha.tk

said...

வருகைக்கும் தொடுப்பிற்கும் நன்றி லொல்லு- சபா.

said...

போச்சுங்க! எல்லாம் போச்சுங்க!! இந்த மேற்கிந்திய அணி வேற நேத்து ஜெயிச்சிருச்சு. நம்ம கதி அதோ கதி தான். கண்டிப்பா வர்ர ரெண்டையும் ஜெயிச்சே ஆவனும். கடினமான இலக்கு நமக்கு. முறியடிக்க முடியுமா????

said...

//17/9/06 7:43 PM மணிக்கு, அமானுஷ்ய ஆவி சொன்னது...…

//நம்ம டீம் ஃபைனல் போகுதானு பாப்போம்//

பேராசை பெருநஷ்டம்.......!
//

:))))

இந்தியா செமி ஃபைனலுக்கு முன்னாடியே போயிடுச்சாமே!

said...

அந்த பொழப்பு கெடக்கட்டும்... ஆவியக்கா எப்போ அண்ணாச்சியா மாறுனீங்க?? அதச் சொல்லுங்க மொதல்ல.