குஜராத்தி இரத்தம்
இணையத்தில் உலவிவரும் நகைச்சுவை துனுக்குகளில் ஒரு குறிப்பிட்ட இனத்தை வைத்து கேளி செய்து வரும் துனுக்குகளும் உண்டென்பது அறிந்ததே. அதில் மிக கூடுதலாக வருவது சர்தார்களை (பஞ்சாபிகளை) வைத்தே. அவர்களை முட்டாள்களாக (குண்டக்க மண்டக்க வகை) சித்தரித்தே வரும். அதே போல் குஜராத்திகளை பற்றி வருபவை அவர்களை கஞ்சர்களாக சித்தரித்தே வரும். அவ்வகையச் சார்ந்த ஒன்று எனக்கு மின்னஞ்சலில் வந்தது. முடிந்தால் நீங்களும் சிரித்துவிட்டு செல்லுங்கள்.
அரபி ஒருவர் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதற்காக தேவைப்படும் (அவருடையதோ அரிய வகை) இரத்தத்திற்காக மருத்துவர் உலகளவில் விளம்பர படுத்துகிறார். இறுதியாக, பரோடாவைச் சார்ந்த குஜராத்தி ஒருவர் அரபிக்காக இரத்த நன்கொடை செய்ய முன் வருகிறார்.
அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்து தாயகம் திரும்பிய அரபி, குஜராத்தியின் நல்லெண்ணத்தை வியந்து அவருக்கு பரிசாக ஒரு டொயொட்டா 4 வீலர், வைரங்கள், நகைகள் மற்றும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரும் அனுப்பிவைக்கிறார்.
பின்பொரு நாள் அதே அரபிக்கு சரி செய்யும் அறுவை சிகிச்சை செய்ய நேரிடுகிறது. மீண்டும் அதே மருத்துவமனைக்கு வருகிறார். அதே குஜாராத்திக்கு மருத்துவர் சொல்லி அனுப்புகிறார் இரத்த நன்கொடைக்காக. குஜராத்தியும் மகிழ்ச்சியுடன் ஒப்பிக் கொண்டு இரத்தம் வழங்குகிறார்.
இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை முடிந்து சென்ற அரபி, அந்த குஜராத்திக்கு வெறும் நன்றி சொல்லும் அஞ்சலட்டையும், கொஞ்சம் இனிப்புகள் மட்டும் அனுப்பி வைக்கிறார். இதைப் பார்த்த குஜராத்தி அதிர்ச்சியடைகிறார்.
அரபியிடம் இதைப் பற்றி கேட்டு விடுவது என முடிவெடுத்து, அரபியிடம் தொலைபேசியில் "நீங்கள் முதல் முறை போலவே இம்முறையும் நல்ல பரிசு தருவீர்கள் என எதிர்பார்த்தேன், ஆனால் நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு அந்த அரபி "இம்முறை என் உடலில் ஓடுவது குஜராத்தி இரத்தமல்லவா" என்றார்.
3 comments:
உன்னை நான் தேடினேன்!
நீ காணவில்லை அன்று!
அன்றுதான் மேட்சு! (2nd ODI, India Lost All Wickets Within 100 Runs)
உனக்கெழவில்லையா பேச்சு!
-உன்னை நான் தேடினேன்!
ஆஹா... ஆவி நம்மள வுடாது போலருக்கே...
மேட்ச் அன்னிக்கி நாங்க ஆகிட்டோம்ல எஸ்ஸ்ஸ்ஸ்ஸூ....
வருகையை பதிந்ததற்கு நன்றி செந்தழல் ரவி.
Post a Comment