Sunday, November 05, 2006

லொடுக்கான கதை

நமக்கு கிரிக்கெட்னா உசுருங்க. இருக்காதா பின்ன இந்தியனாச்சே. நான் கிரிக்கெட் பாக்க தொடங்கியது 1987 உலக கோப்பையிலிருந்து தான். அப்போ நம்ம பழய தல அசார்தான் ஹீரோ. அதுனால அவரே எனக்கும் ரோல் மாடல் (சூதாட்டம் அவர் செய்திருந்தது உண்மையெனில் அது தவிர்த்து). அப்போ புடிச்ச கிரிக்கெட் சனியன் என்னை இன்னும் உட்ட மாதிரி இல்லங்க. இந்த கிரிக்கெட்னால நான் என்னோட வீட்டுல வாங்கின அடி உதை திட்டுக்கு கொறவில்லங்க. இப்போ வரைக்கும் பொண்டாட்டிகிட்ட திட்டு தான். என்ன செய்ய சனியனை உட்டுத் தொலைக்க முடியல.


சரி மேட்டருக்கு வருவோம். பதிவெழுதவதற்காக ஒரு வித்தியாசமான பேரு போட யோசிச்சப்ப 'நந்தா' படத்துல கருணாஸ் கேரக்டர் பேரு ஞாபகம் வந்துச்சு. அதுல அவரு கொஞ்சம் தெந்தி தெந்தி நடப்பாருங்க. அதுனால அவருக்கு அதுல 'லொடுக்கு' பாண்டினு பேரு. பேரு வித்தியாசமா இருந்துச்சு. சரி அதையே வச்சுக்கலாம்னு வச்சுட்டேன். இப்போ பாத்தீங்கன்னா என்னோட நிலமையும் அவரை மாதிரியே தெந்தி தெந்தி நடக்க வேண்டியதா போச்சு. எல்லாம் இந்த சனியன் கிரிக்கெட்னால வந்த வெனை. வயாசிகிடுச்சுனு உடம்பு சொன்ன போதுமா மனசு இன்னும் எளமையாத் தானே இருக்குனு நானும் கிரிக்கெட் ஆட கெளம்பிட்டேன். எங்க நிறுவனத்துல கிரிக்கெட் டீம் ஒன்னு இருக்குங்க. அதுல நானும் உண்டுங்க. துபையில நடக்குற டிவிஷன் லெவெல் (A , B , C னு பல லெவல் இருக்கு) பங்கெடுக்குறது வழக்கம். கோடை காலம் முடிஞ்சு இப்போ சீஸன் தொடங்கியாச்சு. எங்க நிறுவனத்துக்குள்ள பல டீம்கள் உருவாக்கி Inter Company Tournament நடக்கும். இந்த முறையும் இன்னும் சில நாட்களில் நடக்க இருக்கிறது. அதுக்காக நம்ம பசங்களோட போன வியாழக்கிழமை ப்ராக்டீஸ் பண்ணப் போனப்ப தான் இந்த வினை நடந்துச்சு. ப்ராக்டீஸ் முடியப்போகும் நேரத்துல காலில் இருந்து 'கடக்'னு ஒரு சத்தம். உடனே உயிர் போகும் வலி. காலை நகத்த முடியல. அப்போதான் பழய காயம் ஞாபகம் வந்துச்சு. ஆமாங்க, 5 ஆண்டுக்கு முன்னாடி கிரிக்கெட் ஆடும்போது, முழங்காலில் (மூட்டு சந்திப்பில்) உள்ள லெக்மா ஸ்ட்ரெச் ஆகிவிட்டது. அது சரியாக பல மாதங்கள் ஆனது. அதுக்கிடையில் knee-band இல்லாமல் விளையாடும் போதெல்லாம் வலி எடுக்கும். இப்போதும் மறந்து போய் knee-band அணியாமல் விளையாடச்சென்று விட்டேன். அதான் இப்படி ஆகிவிட்டது. சிறிது சிறிதாக வலி குறைந்து வருகிறது. சீக்கிரம் குணமாக இறைவனை வேண்டுவோம். இன்னும் 10 நாட்களில் குணமாகவில்லையெனில் எங்கள் அணி ஒரு ஸ்டார் ப்ளேயரை இழக்க வேண்டியிருக்கும். :)


பதிவெழுத தேர்ந்தெடுத்த பெயருக்கான பெயர்காரணம் இப்போது தான் அமைந்தது. அதான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த பதிவு.

10 comments:

said...

விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் ... 'இந்தியா' விற்காக ஆடும் உத்தேசம் ஏதும் உள்ளதா?

said...

மிக்க நன்றி இன்பா.
இந்தியாவிற்காகவா? இனிமேலா? அதுவும் ட்ராவிட் & சாப்பல் கூட்டனியிலா? வேனாம்பா ஆளை வுடுங்க... :)

said...

விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்!

டீமும் வெற்றீபெறனும்னு வாழ்த்தினா
அது முன்னுக்குப்பின் முறன் ஆகிடுமோ........?

said...

வாழ்த்துக்கு நன்றி சிவஞானம்ஜி.
//டீமும் வெற்றீபெறனும்னு வாழ்த்தினா
அது முன்னுக்குப்பின் முறன் ஆகிடுமோ........? //

ஹா ஹா. :)

said...

வெகு விரைவில் வலியெல்லாம் நீங்கி பூரண குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
சமீபத்தில் மெயிலில் வந்த ஜோக் - முடிந்தால் சிரியுங்கள்
ஒரு ஆறு வயதுக் குழந்தையின் தாயும் தந்தையும் டைவர்ஸ் வேண்டி கோர்ட்டில்..
பிள்ளை யாரிடம் இருப்பதென்பதை பிள்ளையிடம் கேட்டு முடிவெடுக்க நினைக்கிறார் நீதிபதி
(இதற்கும் கீழ் ஆங்கிலத்தில் அல்லது உருதுவில் இருந்தால்தான் சரியாக வரும்.)
Judge: Child. Would you like to stay with your mum
Child: No. Mummy beats me
Judge: O.K. Would you like to stay with your father
Child: No. Daddy beats me
After long thinking judge decides the child to saty with Indian Cricket Team
(As it never beats).

said...

நன்றி சுல்தான் அவர்களே உங்கள் துஆவிற்கு.

உங்கள் நகைச்சுவை துனுக்கு உண்மையிலேலே அடிபொலி. :)

said...

விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.
லியோ சுரேஷ்
துபாய்

said...

//Leo Suresh சொன்னது...…

விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.
//

நன்றி சுரேஷ்.

said...

//மிக்க நன்றி இன்பா.
இந்தியாவிற்காகவா? இனிமேலா? அதுவும் ட்ராவிட் & சாப்பல் கூட்டனியிலா? வேனாம்பா ஆளை வுடுங்க... :)//

இது கொஞ்சம் ஓவராதான் இருக்கு!

said...

//தம்பி சொன்னது...…

//மிக்க நன்றி இன்பா.
இந்தியாவிற்காகவா? இனிமேலா? அதுவும் ட்ராவிட் & சாப்பல் கூட்டனியிலா? வேனாம்பா ஆளை வுடுங்க... :)//

இது கொஞ்சம் ஓவராதான் இருக்கு!
//

ஏனுங்கோ... நம்ம சச்சின், ஸேவாகே ஆடும்போது நான் ஆடப்டாதா?? :(