ஆஸ்திரேலியா நல்ல(வர்கள்) அணியா?
யார் யாரு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டி பார்த்தது? யார் யாரு கடைசிவரை பொறுமையா உக்காந்து ஆஸ்திரேலியா கோப்பையை கையில வாங்கும் வரை பார்த்தது? கொஞ்சம் கை தூக்குங்க. நம்ம அணி நாறிப் போனாலும் நான் ஆஸ்திரேலியா பேட்டிங், அப்புறம் பரிசு வழங்கும் காட்சிவரை பொறுமையா உக்காந்து பாத்தேனுங்க. என்ன இருந்தாலும் ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாதான். ஒரு பக்கம் கெய்லும், சந்திரபாலும் வெளுத்து வாங்கினாலும் போராடி 138க்கு சுருட்டிப்புட்டானுங்க. அப்போவே தெரிஞ்சு போச்சு இந்த கோப்பை மஞ்சளுக்குத் தான். இப்போதைக்கு கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை பயமுறுத்துவது மழை மட்டுமே. :)
சரி, நம்ம மேட்டருக்கு வருவோம். பரிசு வழங்கும் நிகழ்ச்சியின் போது நடந்த ஒரு சின்ன மேட்டர் தாங்க மனசை உறுத்துச்சு. அதாவது, எப்படா கோப்பையை கையில வாங்குவோம்னு ஆர்வமா(வெறியா) ஆஸ்திரேலியாக்காரனுங்க நின்னுகிட்டு இருக்க. அதை வழங்க நம்ம அமைச்சர் கம் பிசிசிஐ தலைவர் ஷரத் பவார் நிக்க. ரிக்கி பாண்டிங் பொறுமை தாங்காம பவார் தோளைத் தட்டி 'கப்பை கொடு'னு கேட்டு வாங்குனாரு. அது போதாதுனு, இரண்டு வினாடி பவார் அங்கேயே ஃபோட்டோக்கு போஸ் கொடுக்க, அது ஆஸ்திரேலியா அணியை மறைக்குதுனு சொல்லி மார்டின் நம்ம பவாரின் தோளைப்பிடித்து, பின் முதுகைப் பிடித்து மெதுவாக தள்ளி (இடத்தை காலி பண்ணு என்று சொல்ற மாதிரி இருந்துச்சு) மாறி நிக்க சொல்கிறார். பவாரும் கண்டுக்காதவர்போல் இடத்தை காலி செய்கிறார். இதை பார்த்த எனக்கு அதிர்ச்சி. இது என்ன கொடுமை. என்னதான் விளையாட்டில் வெறி இருந்தாலும் மேடையில் நிற்கும் ஒரு பெரியவரிடம் நடந்து கொள்ளும் முறையா இது? அதுவும் கேப்டன்? சே! ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தை ரசித்த என்னால் இதை சகிக்க முடியவில்லை. ஆட்டம் படித்த வீரர்கள் பண்பாடு படிப்பது எப்போது? காலையில் செய்திகளில் இதைப் பற்றி ஒன்றும் இல்லை. ஆனால், மாலையில் சச்சின் இதைப் பற்றி வருத்தம் தெரிவித்ததாக செய்தி வந்துள்ளது.
"I wasn't watching the proceedings because I was travelling, but from what I heard (from others) it was an unpleasant experience which was uncalled for (action), Firstly, it should not have happened. It's important to show respect to the person who is so dear to the cricketers and is involved with cricket. So it's good that we avoid such incidents"-சச்சின்
The picture in the Indian Express came under the headline: "This is how-ஊடகங்கள்
champions behave when they get the trophy." The Times of India added: "They are supposed to be aggressive, even rude on the field. On Sunday, Australia showed they are not exactly polite off it too."
Dilip Vengsarkar, India's chief cricket selector added: "You expect such-வெங்க்சர்க்கார்
behaviour from uneducated people. If they wanted to pose for photographs, they could have politely requested him. This is appalling."
Niranjan Shah, the BCCI secretary, described the incident as-நிரஞ்சன் ஷா
"unintentional", but he also said players "seem to leave good sense behind". "Anyway, you know how players are once they get on the cricket field."
However, Pawar laughed off the incident. "It was a small thing, a stupid-ஷரத் பவார்
thing," Pawar said in the Hindustan Times. "I don't want to react."
-----------------
இது தொடர்பான தற்போதைய நிலவரம்:
இந்த அவமதிப்பு செயல் இப்போது கிரிக்கெட் வட்டாரத்தை மெதுவாக உலுக்க தொடங்கி உள்ளது. ரசிகர்களும் அவர்களின் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்.
இது பற்றி ஆஸ்திரேலிய வாரியம், வீரர்கள் இப்போது தான் நாடு திரும்பி இருக்கிறார்கள். விசாரனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
பார்க்கலாம் என்ன சொல்கிறார்கள் என்று.
18 comments:
நீண்ட காலமாக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது உதாரணம் வார்னே, மற்றும் முரளிதரன் மீது குற்றம் சொல்லிய விதம் போன்றவை.
மேட்ச் நான் பார்க்கவில்லை இருந்தாலும் நீங்க சொல்லும்போதும் சச்சின் சொல்லும்போதும் உண்மையாகவே இருக்கும்.
கண்டத்துக்கு உரியதே!
//இப்போதைக்கு கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை பயமுறுத்துவது மழை மட்டுமே. :)//
:))
//நீங்க சொல்லும்போதும் சச்சின் சொல்லும்போதும் உண்மையாகவே இருக்கும்.
//
அரிச்சந்திரன் நம்ம ஊருதாங்க. :)
இப்போத்தான் இந்த பிரச்சனை சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
yes frend nanum adhai parthane ..migavum kevalamaga avargal nadandhu kondargal..adhuvum pointing pavararai thatti sodakku pottu koopitu andha koopaiya pudunginaar..appuram avari thalli pogum maarum maartinum ponting thalli vittu kopiyai vaithu pose koduthu kudhikka arambithu vittargall..parthavudan manam kasta pattadhu..idhai eludhiya ungaluku nandri
சரியாக சொன்னீர்கள் வைசா. இந்த கோப்பையை பெற அவர்கள் உழைத்ததை பாராட்டும் அதே வேளயில், இது போன்ற பொது இடங்களில் அவர்கள் பண்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும். ஆடுகளத்தில் மட்டுமே அவர்களின் வெறி இருக்க வேண்டும்.
வருகைக்கும் வருத்தத்திற்கும் நன்றி கார்த்திக். உங்கள் மனநிலையும் என்னுடையதை போலவே இருந்திருக்கும் எனத் தெரிகிறது. என்ன செய்ய. Atleast, Lets hope for formal APOLOGY from Australian Cricket.
உண்மையிலெயே பொறுமைசாலிதான் நீங்க.. முழுசா பார்த்து இருக்கிங்களே..
இந்த நிகழ்ச்சி கண்டனத்துக்கு உரியதே..
//எத்தனை விருதுகளை வென்றாலும், Sprit of the Game விருதை இவர்கள் வெல்லப் போவதில்லை என்பதையே இந்த சம்பவம் மேலும் வலியுறுத்துகிறது.//
உண்மை.
//மனதின் ஓசை சொன்னது...…
உண்மையிலெயே பொறுமைசாலிதான் நீங்க.. முழுசா பார்த்து இருக்கிங்களே..
//
தெரு கிரிக்கெட் கூட ரசிப்பது என்னோட நோய்ங்க.
கருத்துக்கு நன்று மனதின் ஓசை.
என்னதான் கிரிக்கெட் கோப்பைகள் வென்றாலும்,ஆஸ்திரேலியா மற்றவர்களை மதிப்பதில் என்றுமே 0 தான்.
இதனாலேயே பலருக்கு ஆஸ்திரேலியா அணியை பிடிப்பதில்லை என்பது உண்மை.
//ப்ரியன் சொன்னது...…
என்னதான் கிரிக்கெட் கோப்பைகள் வென்றாலும்,ஆஸ்திரேலியா மற்றவர்களை மதிப்பதில் என்றுமே 0 தான்.
இதனாலேயே பலருக்கு ஆஸ்திரேலியா அணியை பிடிப்பதில்லை என்பது உண்மை.
//
ஆமாம் ப்ரியன். அது எதனால்? தன்னை வெல்ல யாருமில்லை என்ற மமதையா?
aamam fredn summavey australiya anikku thimir adhigam..andru wi udanna matchil adharku nallla padhiladi koduthar gyel..wi vs aut mudhal match parthavraglukk adhu therindhrukalam..
and india kuda nadandha matchil kuda watson miga kevalamaga nandandhu kondadhai kavanikalam
aus summa irundhalum ellarum idhu varai aus ani champion trophy i vendradgey illai endru eaathi vittu vitaargal..ini romba than pandha pannuvargal
ella anigalukum aus parthu bayamey thavira maarrapadi aus vella mudiyadha ani alla
சரியாக சொன்னீர்கள் கார்த்திக். ஆஸ்திரேலியா வெல்ல முடியாத அணி ஒன்றும் இல்லைதான். ஆனால், அவர்களுடனான தொடரை வெல்வது கடினம். சரியா?
ஆஸ்திரேலிய அணியில் பெரும்பானோர் படித்தவர்கள் என்று சொல்லமுடியாது. அங்கு கிராமத்தில் இருந்து விளையாட வருபவர்கள்தான் அதிகம். ஆனால், பண்பாடும் இல்லாத காட்டான்களாக இருப்பது துரதிருஷ்டவசமானது தான்.
//buginsoup சொன்னது...…
ஆஸ்திரேலிய அணியில் பெரும்பானோர் படித்தவர்கள் என்று சொல்லமுடியாது. அங்கு கிராமத்தில் இருந்து விளையாட வருபவர்கள்தான் அதிகம். ஆனால், பண்பாடும் இல்லாத காட்டான்களாக இருப்பது துரதிருஷ்டவசமானது தான்.
//
உண்மையா? பார்த்தால் சைமண்ட்ஸ் மட்டும் தான் அப்படி தெரிகிறார்.
////buginsoup சொன்னது...…
ஆஸ்திரேலிய அணியில் பெரும்பானோர் படித்தவர்கள் என்று சொல்லமுடியாது. அங்கு கிராமத்தில் இருந்து விளையாட வருபவர்கள்தான் அதிகம். ஆனால், பண்பாடும் இல்லாத காட்டான்களாக இருப்பது துரதிருஷ்டவசமானது தான்.
//
உண்மையா? பார்த்தால் சைமண்ட்ஸ் மட்டும் தான் அப்படி தெரிகிறார்.//
வெள்ளைகாரர்கள் என்றவுடனே அவர்கள் படித்தவர்கள், பண்பானவர்கள் என்ற பிம்பம் நம் மனதில் வருகின்றதல்லவா?
சரி, இப்போ ஒரு ஜல்லியடிப்பு கமெண்ட்.
ஆமா குற்றவாளிகள், நாடு கடத்தப்பட்டவர்களின் சந்ததிகளிடம் பண்பாட்டை எதிர்பார்க்கமுடியுமா?
//Anonymous சொன்னது...…
வெள்ளைகாரர்கள் என்றவுடனே அவர்கள் படித்தவர்கள், பண்பானவர்கள் என்ற பிம்பம் நம் மனதில் வருகின்றதல்லவா?
சரி, இப்போ ஒரு ஜல்லியடிப்பு கமெண்ட்.
ஆமா குற்றவாளிகள், நாடு கடத்தப்பட்டவர்களின் சந்ததிகளிடம் பண்பாட்டை எதிர்பார்க்கமுடியுமா?
//
வாங்க அனானி,
ஆமா, நீங்க யாரைச் சொன்னீங்க? அமெரிக்காவையா? ஆஸ்திரேலியாவையா?
நானும் டி வி யில் பார்த்தபொழுது மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.பண்பாடு இல்லாத மடையர்கள்.(உள்ளத்தில் இருக்கும் வார்த்தைகளை எழுதினால் பிரசுரிக்கமாட்டீர்கள்)
லியோ சுரேஷ்
துபாய்
வாங்க சுரேஷ்,
ஆஸ்திரேலிய வீரர்கள் பண்பாடற்ற கழுதைகள் என்பதை ரசிகர்கள் போராட்டம் செய்யும் போது விளக்கி உள்ளனர். மேலுள்ள படத்தை பார்க்கவும். :(
Post a Comment