Sunday, November 26, 2006

தீவிரவாதி 'கெம்ப்'பிற்கு கண்டனம்

இந்தியர்களுக்கு எதிராக சற்று முன் தென் ஆப்பிரிக்காவில் வன்முறை வெறியாட்டம் நடத்திய தீவிரவாதி கெம்ப்-ன் வன் செயலை கண்டித்து நாளை இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இயங்காமல் ஒரு நாள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. இதை அறிவித்த சுற்றுப்புற சூழல் அமைச்சர் கூறியதாவது:

இன்று நடத்தப்பட்ட இந்த வெறியாட்டத்தை வன்மையாக கண்டிப்பதோடு, கெம்ப் அடிக்கடி
சிக்ஸ் அடித்து வானத்தில் OZONE -ல் ஓட்டை ஏற்படுத்தியதையும் கண்டிக்கிறேன். இது குறித்து
சர்வதேச சுற்றுப்புற அமைப்பிற்கும் புகார் கொடுக்கப்படும்.


வெறிகொண்ட வேங்கை கெம்ப் இந்த வெறியாட்டத்தில் 89 பந்துகளில் 6 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடித்து நூறடித்து இந்தியாவின் மானத்தை நாறடித்தார். இதை நமது வலையுளக அன்பர்களும் கண்டிக்க வேண்டுகிறேன்.

13 comments:

Anonymous said...

//தீவிரவாதி 'கெம்ப்'பிற்கு கண்டனம் //

இதெல்லாம் ரொம்ப oover .சொல்லிப்புட்டேன் ஆமா

said...

இன்னிக்கும் கிழிஞ்சிது கிருஷ்ணகிரி!

said...

:)))
:)))
:)))

Anonymous said...

ஏமாத்திப்புட்டீங்களே ஐயா
ஏமாத்திப்புட்டீங்களே

Anonymous said...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை..

Anonymous said...

நடக்கும் என்பார் நடக்காது.
நடக்காதென்பார் நடந்து விடும்.

said...

போனால் போகட்டும் போடா!
இந்த பூமியில் நிலையாய் வெல்பவர் யாரடா?
போனால் போகட்டும் போடா!

ஓ.ஓ.ஓ............
பவுலிங்கும் தெரியும் ஃபீல்டிங்கும் தெரியும்
பந்தெங்கே போவது தெரியாது....

ஆடும் சேவாக்கும் ஆட்டமிழந்தால்
டெண்டுல்கரின் மேல் பழியேது!

50 ஓவரும் ஆடிவிட
ஆசையில் அனைவரும் தேடிவர...

போனால் போகட்டும் போடா....

said...

ஏற்கனவே இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கச் சொல்லி சி.பி.ஐ ரிப்போர்ட் வந்திருந்தும் நடவடிக்கை எடுக்காத இந்திய அஹிம்சாவாதிகள் மீதுதான் என்னுடைய கண்டனம் :-)

(லொடுக்கு... சீரியஸாவே ஆரம்பத்தில குழம்பிட்டேன். ஆனாலும் நல்லா சொல்லிருக்கீங்க. )

said...

//கெம்ப் சொன்னது...…

//தீவிரவாதி 'கெம்ப்'பிற்கு கண்டனம் //

இதெல்லாம் ரொம்ப oover .சொல்லிப்புட்டேன் ஆமா
//
யோவ். கொம்பு!
எதுய்யா ஓவர்? ஓவர் கணக்கு தெரியாம கன்னா பின்னா அடிச்சியே அதுவா? போயா.. போ! போ!!! (ஜெயம் ஸ்டைல்)

said...

//ஆவி அண்ணாச்சி சொன்னது...…

இன்னிக்கும் கிழிஞ்சிது கிருஷ்ணகிரி!
//
எல்லாம் உங்கள் வரவால் தான். :(

said...

//குட்டிச்சாத்தான்ஸ் கிளப் சொன்னது...…

ஏமாத்திப்புட்டீங்களே ஐயா
ஏமாத்திப்புட்டீங்களே
//
எதிர்பாத்தாதானே ஏமாறுவதற்கு. தோல் தடித்து நாளாகிவிட்டது.

said...

//மோகினி கழகம் சொன்னது...…

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை..

//
ஆனா கங்குலிக்கு நடக்குதே.

said...

//girish சொன்னது...…

ஏற்கனவே இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கச் சொல்லி சி.பி.ஐ ரிப்போர்ட் வந்திருந்தும் நடவடிக்கை எடுக்காத இந்திய அஹிம்சாவாதிகள் மீதுதான் என்னுடைய கண்டனம் :-)

(லொடுக்கு... சீரியஸாவே ஆரம்பத்தில குழம்பிட்டேன். ஆனாலும் நல்லா சொல்லிருக்கீங்க. )
//
க்ரிஷ்,
அஹிம்ஸாவாதிகள் ஹிம்ஸை இப்போலாம் தாங்க முடியல. டீம் 100 அடிப்பதே குறிஞ்சிப் பூ.