Sunday, November 19, 2006

அடிக்கு மேல் அடி

அனைத்து அணிகளும் உலக கோப்பையை எதிர்நோக்கி சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்திய அணி மட்டும் எதிர் திசையில். பாகிஸ்தான் அணி கூட சமீபத்திய அக்தர், ஆஸிஃப் ஊக்க மருந்து பிரச்சனைகளையும் தாண்டி பலம் பெற்றுவரும் மேற்கிந்திய அணியை முதல் டெஸ்டில் வென்றுவிட்டது. ஆனால் பாருங்கள் நமது அணியை! அடிக்கு மேல் அடி சறுக்கிகொண்டே போகிறது.

இந்திய அணி 5 ஒரு நாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. (அணி தோல்வி முகத்தில் செல்லும் போது பவுன்ஸி தென் ஆப்பிரிக்காவிற்கு போகனுமா? :) ) யுவராஜ் காயமாதலால் தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம் செல்லவில்லை. இவருக்கு காயம் எப்படி ஏற்பட்டது தெரியுமா? பயிற்சியின் போது கோ-கோ விளையாடும் போதாம். கொடுமைங்கோ. கோ-கோ கூட ஒழுங்கா விளையாடத் தெரியாதுன்னு நினைக்கிறேன். இப்போ ஸேவாக் காயம். இதுவும் பயிற்சியின் போதாம். அவரும் இன்று நடை பெற இருக்கும் முதல் ஒரு நாள் போட்டியில் விளையாட மாட்டார் என செய்திகள் வருகிறது. ஏற்கனவே முதல் பயிற்சி ஆட்டத்தில் தோற்றாகிவிட்டது. எது வரை செல்லும் இந்த செல்லும் இந்த தோல்வி பயணம் என்பது தான் எனது கேள்வி. நெடு நாட்களுக்கு பின் மீண்டும் அணிக்கு வந்துள்ள ஜாகிர் மற்றும் கும்ப்ளே தான் பயிற்சி ஆட்டத்தில் ஜொலித்தவர்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஓல்ட் இஸ் கோல்ட். :)

காயம் ஒரு பக்கம் பலம் வாய்ந்த தெ.ஆ அணி ஒரு பக்கம் எகிறும் ஆடுகளங்கள் ஒரு பக்கம் பொறுமையிழந்து வீரர்களின் உடமைகளை எரிக்க காத்திருக்கும் ரசிகர்கள் ஒரு பக்கம் அதற்கும் மேலாக தோற்றால் நார் நாராக அக்கு வேரு ஆணி வேராக கிழிக்க காத்திருக்கும் ஊடகங்கள் மற்றொரு பக்கம் என இந்திய அணிக்கு பெரிய நெருக்கடியான சூழ்நிலை. சமாளிக்குமா நம் அணி?

58 comments:

said...

அதான் வந்துட்டம்ல!

ஜெயிக்கறது சந்தேகம்தான்!

said...

ஆஹா!!! கெளம்புருச்சுய்யா!! கெளம்புருச்சு!!!

அதெப்படி இந்த ஆவி நான் எப்போ கிரிக்கெட் பத்தி பேசுனாலும் எதித்தாப்புல வந்து நிக்குது?? இந்த பூமியில ஏதாவது உளவாளியை செட் பண்ணியிருக்குமோ!!

ஹூம்.. இன்னிக்கும் கதை கந்தல் தான்... :(

Anonymous said...

அவனை(சாப்பல்) நிறுத்த சொல்லு(எக்ஸ்பெரிமெண்ட்),
டீமும் நிறுத்தும் (தோல்வியை)!!

said...

அட வாங்க வாங்க..
நம்ம தாதா வந்திருக்காக... நல்ல சேதியோட வந்திருக்காக... எப்போ தாதா ரீ-எண்ட்ரி?

Anonymous said...

ஊக்க மருந்து போட்டுகிட்டா கூட ஜெயிக்க மாட்டாங்கய்யா!

நீ உன் வேலையைப் பாரு!

said...

அண்ணாத்தே! இந்திய நேரப்படி எத்தினி மணிக்கு மேட்ச்?

said...

மேட்ச் ஆரம்பிக்கறதுக்குள்ள
பார்த்துகிட்டே கொறிக்க இரத்தப் பொறியல், எலும்பு வருவல் எல்லாம் எங்கிருந்தாவது உஷார் பண்ணனும்!

Anonymous said...

இன்னும் மேட்ச்சே ஆரம்பிக்கலை! வந்துட்டாங்கப்பா அதுக்குள்ளே! இவங்களுக்கெல்லாம் வேற வேலையே இருக்காதோ!

டீ, காப்பீ சமோஸா.........
டீ, காப்பீ சமோஸா.........

ச்சீ.. பொறம்போக்கு வாங்கி துண்ணியல்ல.. துட்டை எடு முதல்ல..

Anonymous said...

தரையெல்லாம் இன்னும் கொஞ்சம் ஈரமாத்தான் இருக்கு. ஆனா பிளேயர்ஸ் வழுக்கி விழும் அளவுக்கு இல்லை. இருந்தாலும் மேனேஜ் பண்ணிகிட்டு நம்ம ஆளுங்க வழுக்கி விழுந்து கேட்சை கோட்டை விடலாம்.

நிறைய பவுண்டரி போக சான்ஸ் இருக்கு. எதிரணியினருக்கு. இந்திய அணிக்கு அல்ல. பந்து நல்லா ஸ்விங்க் ஆகும். தெ.ஆப்பிரிக்க ஸ்பின்னர்களுக்கு சூப்பரா வொர்க் அவுட் ஆகும்.

முதல்ல பேட் பண்ணுறவனுக்கு கொஞ்சம் கஷ்டம்தான்.

said...

இந்தியா டாஸ் வெல்லும்னு நினைக்கிறேன். கேணைத்தனமா நம்மாளு பேட்டிங்கை செலக்ட் செய்வார். அது எந்த அளவுக்கு இந்திய அணியை தோல்விக்கு இட்டுச் செல்லும்னு சொதப்பிய பேட்ஸ்மேன்கள் பின்னாடி சொல்வாங்க.

Anonymous said...

என்னைய சேர்த்துக்காம விளையாடப் போறீங்களா? எப்படி ஜெயிக்கறீங்கன்னு பார்க்குறேன்.

ஓம்.க்ரீம். லீம்..
கவச...கவச....
ஓம்.க்ரீம். லீம்..
கவச...கவச....
ஓம்.க்ரீம். லீம்..
கவச...கவச....

(அப்பாட சொந்த செலவுல சூனியம் வெச்சாச்சு..)

Anonymous said...

நான் டீமில் இல்லாமல் இருப்பது எனக்கு வருத்தம் ஒன்றும் இல்லை.
நிச்சயமாய் இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

நான் விரைவில் என் திறமையை(!?) நிரூபித்து அணியில் இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Anonymous said...

காயின் வட்ட வடிவமாக இருக்கிறது.
பூ ஒரு பக்கமும், தலை ஒரு பக்கமும் இடம்பெற்றுள்ளன.
சுண்டினால் தரையில் விழும்போது ஏதேனும் ஒன்று மட்டும் (அதாவது பூ அல்லது தலை) மட்டும் விழும் வண்ணம் வடிவமைத்திருக்கிறார்கள்.

சுண்டுபவரின் திறமையையும், சுண்டும்போது ஏற்படும் ஸ்விங்கையும் பொறுத்தே பூவோ அல்லது தலையோ விழக் கூடும்.

Anonymous said...

அரங்கு இன்னும் நிறைந்த பாடில்லை. ஆங்காங்கே இந்திய ரசிகர்கள் (எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டாங்கைய்யா) ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவ்வப்போது புழுக்கம் ஏற்பட்டால் விசிறிக்கொள்ள
4 /6 என்று அச்சிடப்பட்டுள்ள அட்டைகளைக் கையில் வைத்துள்ளனர்.

தென்னாப்பிரிக்க ரசிகர்கள் இன்னும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு, மேட்ச் ஆரம்பிக்கும்போது வந்தால் போதும் என்று இருக்கிறார்கள்.

said...

என்னங்க லொடுக்கு?

//ஜெயிக்கறது சந்தேகம்தான்!//

என்றதும் வெறுத்துப் போய் ஓடிவிட்டீர்களா?

said...

மன்னிக்கவும். மதிய உணவு இடைவேளை எனக்கு. அதான் கொஞ்சம் லேட்.

said...

//
ஆவி அம்மணி சொன்னது...…

அண்ணாத்தே! இந்திய நேரப்படி எத்தினி மணிக்கு மேட்ச்?
//
மாலை 6 மணிக்கு ஆப்பு தொடங்கும். :)

said...

//சோயிப் அக்தர் சொன்னது...…

ஊக்க மருந்து போட்டுகிட்டா கூட ஜெயிக்க மாட்டாங்கய்யா!

நீ உன் வேலையைப் பாரு!
//
நீ மட்டும் ஜெயிக்கவா அதெல்லாம் செஞ்சே??

//ஆவி அம்மணி சொன்னது...…

மேட்ச் ஆரம்பிக்கறதுக்குள்ள
பார்த்துகிட்டே கொறிக்க இரத்தப் பொறியல், எலும்பு வருவல் எல்லாம் எங்கிருந்தாவது உஷார் பண்ணனும்!
//
உவ்வே!!!!!!!!!!!!

//ஸ்நாக்ஸ் விற்பவன் சொன்னது...…

இன்னும் மேட்ச்சே ஆரம்பிக்கலை! வந்துட்டாங்கப்பா அதுக்குள்ளே! இவங்களுக்கெல்லாம் வேற வேலையே இருக்காதோ!

டீ, காப்பீ சமோஸா.........
டீ, காப்பீ சமோஸா.........

ச்சீ.. பொறம்போக்கு வாங்கி துண்ணியல்ல.. துட்டை எடு முதல்ல..
//

திறமை எதுவும் வித்தா சொல்லுப்பா..

said...

//தரை விமர்சனம் சொன்னது...…

தரையெல்லாம் இன்னும் கொஞ்சம் ஈரமாத்தான் இருக்கு. ஆனா பிளேயர்ஸ் வழுக்கி விழும் அளவுக்கு இல்லை. இருந்தாலும் மேனேஜ் பண்ணிகிட்டு நம்ம ஆளுங்க வழுக்கி விழுந்து கேட்சை கோட்டை விடலாம்.

நிறைய பவுண்டரி போக சான்ஸ் இருக்கு. எதிரணியினருக்கு. இந்திய அணிக்கு அல்ல. பந்து நல்லா ஸ்விங்க் ஆகும். தெ.ஆப்பிரிக்க ஸ்பின்னர்களுக்கு சூப்பரா வொர்க் அவுட் ஆகும்.

முதல்ல பேட் பண்ணுறவனுக்கு கொஞ்சம் கஷ்டம்தான்.
//
ரியல்லீ???

சொல்ல மறந்துட்டேன்... ப்ரெட்லீ க்கு பையன் பொறந்திருக்கானாம்.

லேட்டஸ்ட் : South Africa v India, 1st ODI, Johannesburg

Rain threatens to reign in Jo'burg

said...

இந்திய அணி பண்ணுறதை விட நீங்க பண்ணுற அலும்பு ஓவரா இருக்கேப்பா!

said...

//கங்குலியின் மறுபக்கம் சொன்னது...…

என்னைய சேர்த்துக்காம விளையாடப் போறீங்களா? எப்படி ஜெயிக்கறீங்கன்னு பார்க்குறேன்.

ஓம்.க்ரீம். லீம்..
கவச...கவச....
ஓம்.க்ரீம். லீம்..
கவச...கவச....
ஓம்.க்ரீம். லீம்..
கவச...கவச....

(அப்பாட சொந்த செலவுல சூனியம் வெச்சாச்சு..)
//
தல மீண்டும் எட்டி பார்த்ததற்கு நன்னி.

//கங்குலியின் முதல் பக்கம் சொன்னது...…

நான் டீமில் இல்லாமல் இருப்பது எனக்கு வருத்தம் ஒன்றும் இல்லை.
நிச்சயமாய் இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

நான் விரைவில் என் திறமையை(!?) நிரூபித்து அணியில் இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
//

அது!!!!!!!!!!

//காயின் ரிப்போர்ட் சொன்னது...…

காயின் வட்ட வடிவமாக இருக்கிறது.
பூ ஒரு பக்கமும், தலை ஒரு பக்கமும் இடம்பெற்றுள்ளன.
சுண்டினால் தரையில் விழும்போது ஏதேனும் ஒன்று மட்டும் (அதாவது பூ அல்லது தலை) மட்டும் விழும் வண்ணம் வடிவமைத்திருக்கிறார்கள்.

சுண்டுபவரின் திறமையையும், சுண்டும்போது ஏற்படும் ஸ்விங்கையும் பொறுத்தே பூவோ அல்லது தலையோ விழக் கூடும்.
//
:)))

//ரவி சாஸ்திரி சொன்னது...…

அரங்கு இன்னும் நிறைந்த பாடில்லை. ஆங்காங்கே இந்திய ரசிகர்கள் (எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டாங்கைய்யா) ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவ்வப்போது புழுக்கம் ஏற்பட்டால் விசிறிக்கொள்ள
4 /6 என்று அச்சிடப்பட்டுள்ள அட்டைகளைக் கையில் வைத்துள்ளனர்.

தென்னாப்பிரிக்க ரசிகர்கள் இன்னும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு, மேட்ச் ஆரம்பிக்கும்போது வந்தால் போதும் என்று இருக்கிறார்கள்.
//
அவர் மட்டும் என்னவாம். டொக்கு புகழ்.

said...

மானம் காக்க போகும் மழை வாழ்க!! (கோஷம் போடுங்கப்பா!!)

Anonymous said...

இரண்டு மூன்று பின்னூட்டங்களுக்கு ஒரே பின்னூட்டத்தில் பதிலளித்து பின்னூட்டக் கயமையைக் கேலிக்குரியதாக்கி வரும் லொடுக்கு பாண்டி அவர்களின் விஷமத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

said...

The sporadic downpours that have made the skies over Johannesburg grey remained the main concern for both teams as they headed into the opening game of the five-match one-day series on Sunday. With rain lashing the city in the morning, practice plans had to be altered, with South Africa going up the road to SuperSport Park in Centurion and India opting for the indoor nets in the basement at the Wanderers.

said...

//மானம் காக்க போகும் மழை வாழ்க!! (கோஷம் போடுங்கப்பா!!)
//

இந்திய அணி எப்படி ஜெயிக்குற மாதிரி தோற்றத்தை உண்டு பண்ணுதோ அதே மாதிரிதான் மழையும். இந்திய அணி ஸ்ட்ராங்கா இருக்குற நேரத்துல மட்டும்தான் வரும்.

எ.கா: இலங்கையில் நடந்த மினி வோர்ல்ட் கப்.

நப்பாசையெல்லாம் வேண்டாம் நைனா! உடம்புக்கு ஆகாது!

said...

//
ஆவி அண்ணாச்சி சொன்னது...…

என்னங்க லொடுக்கு?

//ஜெயிக்கறது சந்தேகம்தான்!//

என்றதும் வெறுத்துப் போய் ஓடிவிட்டீர்களா?
//
என்னது வெறுப்பா?? ஓடியா?? நான் இந்தியன் என்பதை மறந்து விட வேண்டாம்.

said...

//நாமக்கல் சிபி @15516963 சொன்னது...…

இந்திய அணி பண்ணுறதை விட நீங்க பண்ணுற அலும்பு ஓவரா இருக்கேப்பா!

//

வாங்க சிபி. நீங்கல்லாம் பண்ணாத அலும்பா??? :) நீங்களும் ஐக்கியமாகுங்க.

said...

//பின்னூட்டக் கயமை ஆதரவுக் குழு சொன்னது...…

இரண்டு மூன்று பின்னூட்டங்களுக்கு ஒரே பின்னூட்டத்தில் பதிலளித்து பின்னூட்டக் கயமையைக் கேலிக்குரியதாக்கி வரும் லொடுக்கு பாண்டி அவர்களின் விஷமத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

//
சரி சரி. இனிமே அந்த தப்பு நிகழாம பாத்துக்கிறேன். பொழச்சு போறேனே. ப்ளீஸ் :)

said...

ஆவிகளின் தொல்லை இருப்பது போல் தோன்றுகிறது. உங்களுக்கு விருப்பமென்றால் சொல்லுங்கள். என்னிடம் தாயத்து இருக்கிறது.

said...

//எ.கா: இலங்கையில் நடந்த மினி வோர்ல்ட் கப்.

நப்பாசையெல்லாம் வேண்டாம் நைனா! உடம்புக்கு ஆகாது!//

அதெல்லாம் விட்டு ரொம்ப நாளாச்சு.

said...

//நாமக்கல் சிபி @15516963 சொன்னது...…

ஆவிகளின் தொல்லை இருப்பது போல் தோன்றுகிறது. உங்களுக்கு விருப்பமென்றால் சொல்லுங்கள். என்னிடம் தாயத்து இருக்கிறது.
//

சிபி. பார்த்தேன் சிரித்தேன். பாவம் அவுகெள்ளாம் வர்ரதுனால தமிழ்மனம் கொஞ்சமாச்சும் மணக்குது. இல்லென்னா அரசியல் நாத்தாம் தாங்காதுப்பு. வந்துட்டு போறாங்க வுடுங்க. :)

said...

மே ஐ கம் இன்!!

said...

//தம்பி சொன்னது...…

மே ஐ கம் இன்!!
//

வருக வருக! பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவரே!!

said...

//வருக வருக! பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவரே!!//

தவறு லொடுக்கு!

பேரன்பும் பெரும்பேரன்பும் மட்டுமே கொண்டவன்!

said...

//தவறு லொடுக்கு!

பேரன்பும் பெரும்பேரன்பும் மட்டுமே கொண்டவன்
!//

மன்னிக்க வேண்டுகிறேன்!!!!

said...

மழை பெய்யுற நாள்ல மேட்ச் வெக்கிறாங்களா? இல்ல, மேட்ச் வெக்கிற நாள்ல மழை பெய்ஞ்சுடுதா?

எனக்கு மட்டுமில்ல நிறைய பேருக்கு இந்த டவுட்டு இருக்கு!

said...

//மன்னிக்க வேண்டுகிறேன்!!!! //

நீங்க மனிதன், நான் கடவுள்

Anonymous said...

எங்கய்யா யாரையும் காணும்?

எல்லாரும் ஓடிட்டாங்களா?

said...

//தம்பி சொன்னது...…

மழை பெய்யுற நாள்ல மேட்ச் வெக்கிறாங்களா? இல்ல, மேட்ச் வெக்கிற நாள்ல மழை பெய்ஞ்சுடுதா?

எனக்கு மட்டுமில்ல நிறைய பேருக்கு இந்த டவுட்டு இருக்கு!
//
நம்ம பசங்க நல்ல பசங்கய்யா... அதான் அவனுங்க எங்க போனாலும் மழை பெய்யுது. நல்லார் பொருட்டு மழை பெய்யும்னு கேள்விபட்டிருப்பிங்களே. இதான் அது.

said...

//தம்பி சொன்னது...…

//மன்னிக்க வேண்டுகிறேன்!!!! //

நீங்க மனிதன், நான் கடவுள்
//
எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே :) சாப்பல் கங்குலியை பாத்து சொன்னதா?

said...

//தம்பி சொன்னது...…

//மன்னிக்க வேண்டுகிறேன்!!!! //

நீங்க மனிதன், நான் கடவுள்
//
நீங்க வந்துட்டீங்கள்ள.கலை கட்டப் போகுது பாருங்க. பெய்யும் மழை கூட நின்னுடும்.

Anonymous said...

//பாவம் அவுகெள்ளாம் வர்ரதுனால தமிழ்மனம் கொஞ்சமாச்சும் மணக்குது.//

அண்ணன் லொடுக்கு பாண்டியார் வாழ்க!

said...

//எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே //

விருமாண்டி, (சண்டியர்) பாக்கலயா?

said...

Hello and welcome to Cricinfo's coverage of the first one-day international between India and South Africa at Johannesburg. This is Jamie Alter, and together with Sriram Veera I'll be bringing you the commentary as it unfolds.

Today's match at the Wanderers Stadium is the first of a best of five series, and the two sides will also play a Twenty20 International. The news from the ground is that its pouring hard and that the start of play has been delayed. Its clearly that this match will not start any time soon, unfortunately. The covers have been out for some time, and the umpires have not declared a time at which events will begin. Those dark, dark skies do not look comforting.

The pitch: The surface here bears more than a little resemblance to that on which South Africa and Australia combined for an incredible 872 runs in March. The last time India played here, Ricky Ponting and Damien Martyn eviscerated their World Cup dream with some of the finest batting ever seen on the limited-overs stage.

What they had to say:

Graeme Smith: "We may be the favourites, but that's only on paper and we need to make a good start. We analysed the Indian batting but obviously they will be a lot better prepared for Sunday. The Indians haven't performed well in South Africa in the past but this is a pretty new squad. We are confident about our abilities in our country but we also respect the Indians a lot."

Rahul Dravid: "There have been some good past experiences here and some not-so-good ones. We know it's going to be very competitive, really tough and we're going to have to play very well. But the boys are keen to learn and adjust to conditions which they are not used to. Six batsmen should be able to do the job. A number of us have got runs here before, against South Africa and in the 2003 World Cup."

As we wait for the match to start, allow me to introduce Match Vox, the latest feature from Cricinfo, which gives you a voice on the state of play in real time. So if South Africa's batting has got you worked up, or if you feel Dravid has missed a trick in the field settings, post your thoughts and share them with the others who've turned on and tuned in.

said...

//ஆவியுலக வாசிகள் சொன்னது...…

//பாவம் அவுகெள்ளாம் வர்ரதுனால தமிழ்மனம் கொஞ்சமாச்சும் மணக்குது.//

அண்ணன் லொடுக்கு பாண்டியார் வாழ்க!
//
நன்றி நன்றி!! ஆவிகள் தமிழ் வலையுளக நாயகர்கள்!!

said...

//விருமாண்டி, (சண்டியர்) பாக்கலயா?//

பாத்திருக்கேன். அதான் கேட்ட மாதிரி இருந்துச்சோ. :)

said...

//ஆவிகள் தமிழ் வலையுளக நாயகர்கள்!!//

ஆஹா! லொடுக்கு அண்ணே! பாசத்தால் எங்கள் இதயங்களை நிறைத்து விட்டீர்கள்.

வாழ்க நீ எம்மான்!

Anonymous said...

ஆவியுலகினரை அரவணைக்கும் அண்ணன் லொடுக்கு பாண்டியாருக்கு ஜே!

இவண்,
லொடுக்கு பாண்டி ரசிகர் மன்றம்,
கொள்ளிவாய்ப் பிசாசுகள் பிரிவு,
ஆவியுலம்.

Anonymous said...

எங்களை விரட்ட தாயத்தை அளிப்பதாகச் சொன்ன நாமக்கல் சிபியாருக்கு எங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதுடன்,
பாசமிகு அண்ணன் லொடுக்கு பாண்டியார் அவர்களுக்கு என்றென்றும் எங்கள் நிபந்தனையற்றை ஆதரவை வழங்க இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Anonymous said...

ஆவியுலக வாசிகளுக்கு ஆதரவு அளித்து வரும் எங்கள் அண்ணன் தங்கத்தின் தங்கம், மாசற்ற மாணிக்கம், பேருள்ளம் படைத்த வள்ளல் லொடுக்கு பாண்டி அவர்களுக்கு நன்றி!

said...

//15:31 local, 13:31 GMT Well, the rain had slackened somewhat and the covers were going off, but were quickly brought back on. No hold-up from the weather gods. //

ஆடாத மேட்ச்சுக்கே அம்பதுன்னா?
அடங்கொய்யா!..

said...

அங்கே மேட்ச் நடக்குதோ இல்லையோ! இங்க ஜோரா நடக்குது! போல!

யப்பா! ஆவியுலக வாசிகளா! இனி நீங்களாச்சு! உங்க லொடக்கு பாண்டியாச்சு!

நீங்க நடத்துங்க தலைவா!

said...

ஆவி அண்ணாச்சி, கொள்ளிவாய்ப் பிசாசு, குட்டிச்சாத்தான்ஸ் கிளப் , மோகினி கழகம் ஆகியோருக்கு ஆடாத மேட்சுக்கே என்னை 50 அடிக்க வைத்தமைக்காக நன்றிகள்.

said...

//நாமக்கல் சிபி @15516963 சொன்னது...…

அங்கே மேட்ச் நடக்குதோ இல்லையோ! இங்க ஜோரா நடக்குது! போல!

யப்பா! ஆவியுலக வாசிகளா! இனி நீங்களாச்சு! உங்க லொடக்கு பாண்டியாச்சு!

நீங்க நடத்துங்க தலைவா!

//
சிபி, ஏதோ நாங்க பாட்டுக்கு எங்க தனி ரூட்டுல போயிட்டு இருக்கோம். :) நீங்களும் வேணும்னா சொல்லுங்க ஆவிகள் ஆதரவு கிடைக்கும். ஆக்சுவலி ஆவிங்க எல்லாம் நல்லவங்க.

said...

லொடுக்குங்ணா
கலக்குங்ணா

said...

//thunder nambi சொன்னது...…

லொடுக்குங்ணா
கலக்குங்ணா

//
வாங்க இடி நம்பி, ஆக மொத்தம் தெ.ஆ அணியை மழை பெய்ஞ்சு கவுத்திட்டீங்க... நீங்க தான் கலக்குற மாதிரி தெரியுது.

said...

//ஆக்சுவலி ஆவிங்க எல்லாம் நல்லவங்க.//

அதெப்படி நீங்களே சொல்லலாம்! எங்களை ஒரு வார்த்தை கூட சொல்லாம?

இதெல்லாம் கொள்கை ரீதியா நாங்கதான் சொல்லணும்! நாங்கதான் சொல்லுவோம்!

ஆக்சுவலி ஆவிங்க எல்லாம் நல்லவங்க.

said...

கேக்காம சொன்னது தப்புதான்... அதுக்காக இப்படியா விரட்டி விரட்டி அடிக்கிறது!