சிவாஜியில் ஒரு குறை கண்டேன்
சிவாஜி. சமீபத்தில் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து ஆராயப்பட்ட ஒரு பெயர். இதைப்பத்தி நாமலும் ஒன்னும் சொல்லாம இருந்தால் ஜோதியில் ஐக்கியமாகாதவன் என்ற ஒரு அவப்பெயருக்கு ஆளாக நேரிடும் என்பதால் இந்த பதிவு.
நானும் இந்த படம் பார்த்துவிட்டேன். இந்த படத்தின் நிறை குறைகளை பலரும் சொல்லி ஓய்ந்து விட்டதால் நான் மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எல்லாரும் குறிப்பிட மறந்த(?!) ஒன்றை இங்கே சொல்கிறேன்.
இந்தப் படத்தில் நெடுகிலும் காண்பிக்கப்படும் பெயர் பலகைகளில் 'Sivaji' என்பதுதான் சிவாஜியின் ஆங்கில Spelling. அதாவது இயக்குனர் 'சிவாஜி' என்ற பெயருக்கு தந்த ஸ்பெல்லிங். ஆனால், ரஜினி தனது வீட்டை அடமானம் வைக்கும் காட்சியில் கையெழுத்திடும் போது 'Shivaji' என்று கையெழுத்திடுவார் (படம் பாக்கும்போது ரொம்ப தெளிவா இருப்போம்ல). சரி, ஏன் இந்த முரண்பாடு? இயக்குனர் பேச்சை ரஜினி கேட்கவில்லையா? அவர்களுக்குள் எனி ப்ராப்ளம்? ;)
34 comments:
1
டைரக்டர் ஷங்கர் செய்த இந்த மாமாபெரும் தப்புக்காக அவரை தூக்கிலிட வேண்டும். இந்த தவறை கண்டுபிடித்த லொடுக்கு அவர்களுக்கு கனிமொழியை பதவியிரக்கம் செய்துவிட்டு லொடுக்குக்கு M P பதவி கொடுத்து கவுரவித்து அடுத்த சில நாட்களில் IT கேபினட் மினிஸ்டர் பதவி தர வேண்டும்!!!
வாங்க அபிஅப்பா,
படம் பார்த்தாச்சா?
ஏதோ 30 திர்ஹாம் கொடுத்தோமா படம் பார்த்தோமானு இருக்காம குறை கண்டுபுடிக்கனும்ல அதான் ;). அதுக்காக படத்துல இது மட்டும்தான் குறையான்னு சங்கடமான கேள்வியை கேட்டுடாதீங்க. நமக்கு மூனு மணி நேரம் பொழுது போகனும். அம்புட்டுத்தேன். அது கிடைச்சது. சிவாஜியை விட எம்.ஜி.ஆர் சூப்பர் இதுல.
//'Shivaji'//
அது ரஜினி ஸ்டைல். அவர் தமிழே ஆங்கிலம் மாதிரி பேசுறவரு. இதையெல்லாம் நோட் பண்றீங்களா?
கிரே8
இளா,
ஆமாங்க. அது ரஜினி ஸ்டைல்தான். லஷ்ஷம். லஷியம். அப்படித்தான் பேசுவாரு.
இருந்தாலும், ஷிவா(Shiva)ஜி தானே சரி. நாமதான் அதை தமிழ்படுத்தி சிவாஜி என்கிறோம். இல்லை?
இருந்தாலும் ரஜினியும் ச(ஷ?)ங்கரும் பேசி தீர்திருக்கலாம். நான் கூட குறை சொல்ற மாதிரி வந்துடுச்சு பாருங்க.
நல்ல கூர்மையான பார்வைங்க உங்களுக்கு
அய்யனார்,
எல்லாம் உங்க கவிதையை வாசிக்க தீட்டி வச்சதுதான். ;)
என்ன ஒரு கண்டுபிடிப்பு, என்ன ஒரு கண்டுபிடிப்பு... யய்யாவுக்கு சுத்தி (தூக்கிப்) போடுங்க. //சிவாஜியில் ஒரு குறை கண்டேன்// ஒண்ணே ஒண்ணுதானா? நிறைய இருக்குப்பா அத கண்டுபிடிக்கத்தான் நம்ம மக்கள் ஒருவாட்டி பார்த்ததோடு நிறுத்திக்காம இரண்டு -மூணுவாட்டி பார்க்கிறாங்களாம். ;-)
//ஒண்ணே ஒண்ணுதானா? நிறைய இருக்குப்பா அத கண்டுபிடிக்கத்தான் நம்ம மக்கள் ஒருவாட்டி பார்த்ததோடு நிறுத்திக்காம இரண்டு -மூணுவாட்டி பார்க்கிறாங்களாம். ;-)
//
இது என்னங்க கொடுமை. பொழுது போக்கு சித்திரத்தில் வரலாற்று தடயங்களை தேடிப்போவதன் விளைவு அது. ரஜினி என்ற ஒரு நடிகனிடமிருந்து நடிப்பை(!?) அல்லது அவருக்கு எது இளகுவாக வருகிறதோ அதை தவிர நான் கூடுதலாக எதையும் எதிர்பார்ப்பதில்லை.
ச்ச்சும்மா அதிருதுல்ல!
நாளைக்கு நம்ம பதிவு பக்கம் வாங்க
ச்ச்சும்மா அதிரும்ல
சிவாஜி மட்டும்தான வரப்போறதுக்கு முன்னால பில்டப் குடுப்பாரா? நாங்களூம்தான்
சாத்தான்குளத்தான்
//ரஜினி வெறியன் said...
ச்ச்சும்மா அதிருதுல்ல!
//
எது?
//ஆசிப் மீரான் said...
நாளைக்கு நம்ம பதிவு பக்கம் வாங்க
ச்ச்சும்மா அதிரும்ல
//
உங்க பதிவுக்கெல்லாம் அழைப்பு கொடுக்கனுமா அண்ணாச்சி. நீங்க பப்ளிஷ் பண்ணுறதுக்கு முன்னாடி நாங்க வந்து நிப்போம்ல. உங்க பதிவை படிக்காட்டி தூக்கமே வர்ரதில்லை.
சினிமாக்காரய்ங்கதான் விளம்பரம் கொடுக்குறாய்ங்கன்னா நீங்களுமா?
சங்கர் படத்தில் அப்படிதான் முன்பு ஜின்ஸ் என்பதையும் இப்படிதான் எழுதினார்...
ரெட்டையர் பற்றிய கதைக்கு (ஜின்ஸ்)பேண்ட் பேரு வைச்சாரு
படத்தில் ஒரே சந்தோசம் ஸ்ரேய்யா வேலை பாக்குற கடைக்கு எங்க சங்க தல ராயல் ராம் பேரை வச்சது... :)
அய்யனார் said...
நல்ல கூர்மையான பார்வைங்க உங்களுக்கு
அப்ப என் உடைந்து போன பென்சில சீவி தர முடியுமா????? அபி அப்பா கேட்டு சொல்லுங்க!!!
//ரெட்டையர் பற்றிய கதைக்கு (ஜின்ஸ்)பேண்ட் பேரு வைச்சாரு //
வாம்மா மின்னலு,
ஓ அதுவா! ஜீன்ஸ் - மரபணு. மரபணுங்கற பேரு நல்லா இல்லைன்னுதான் அப்படி பேருவச்சாராம்.
//படத்தில் ஒரே சந்தோசம் ஸ்ரேய்யா வேலை பாக்குற கடைக்கு எங்க சங்க தல ராயல் ராம் பேரை வச்சது... :)
//
நான் என்னமோ, படத்துல ஒரே சந்தோஷம் ஸ்ரேயா ரயிலை நிப்பாட்டுன சாகசத்தைதான் சொல்ல போறீங்களோன்னு நினைச்சேன். :)
//குசும்பன் said...
அய்யனார் said...
நல்ல கூர்மையான பார்வைங்க உங்களுக்கு
அப்ப என் உடைந்து போன பென்சில சீவி தர முடியுமா????? அபி அப்பா கேட்டு சொல்லுங்க!!!
//
என்ன கொடுமை அய்யனார் இது! இப்படி குசும்பன் கிட்ட மாட்டி விட்டுட்டீங்களே! அபிஅப்பா கேட்டு சொல்லுங்க.
நல்ல பாயிண்டு...இத வெச்சித்தான் நானும் சிவாஜி படத்தின் பெயரை மாற்ற வேண்டும்னு பதிவு போடலாம்னு நெனச்சேன். ஆனா அதுக்குள்ள மேக்கப் மகிமை வந்துருச்சு.
படம் முழுக்க எல்லாரும் சிவாஜிம்பாங்க. இவரு மட்டும் ஷிவாஜிம்பாரு. கையெழுத்தும் ஷிவாஜி. ஆகையால படத்தோட பேர ஷிவாஜி என்று மாற்றும் படி ஷங்கரைக் கேட்டுக் கொள்கிறேன். அப்படி மாற்றவில்லை என்றால் அவரை இனிமேல் சங்கர் என்று அனைவரும் அழைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தப்படும் என்று படுபயங்கரமாக எச்சரிக்கை விடுக்கிறேன்.
வாங்க ஜிரா,
நம்ம பக்கம் முதன்முதலா வந்துருக்கீங்க. நன்றி!
உள்ளதை உள்ளது மாதிரி சொல்லனும், இல்லன்னா எல்லாத்தை ஒழுங்கா ஒரே மாதிரி தமிழில் சொல்லனும். இது என்ன அரை-குறையா?
ஜிரா,
இதே பிரச்சனை 'பாட்சா'வின் போதே இருந்ததாக ஞாபகம். தலைவர் சொல்லும்போது அது பாஷா-ன்னு தான் கேக்கும்.
லொடுக்கு said...
வாங்க ஜிரா,
நம்ம பக்கம் முதன்முதலா வந்துருக்கீங்க. நன்றி!
அப்ப நாங்க என்ன பல தடவை வந்து இருக்கோமா! எங்களுக்கு எங்க வரவேற்ப்பு!!! மின்னல் என்னப்ப இது...எங்களு ஒரு நன்றி எல்லாம் வேண்டாம் பர்ஜிலராப்ல ஒரு வரவேற்ப்பு டிரீட் கொடுத்துவிடுங்க...
டீல்...
//குசும்பன் said...
அப்ப நாங்க என்ன பல தடவை வந்து இருக்கோமா! எங்களுக்கு எங்க வரவேற்ப்பு!!! மின்னல் என்னப்ப இது...எங்களு ஒரு நன்றி எல்லாம் வேண்டாம் பர்ஜிலராப்ல ஒரு வரவேற்ப்பு டிரீட் கொடுத்துவிடுங்க...
//
பேருக்கேத்த குசும்பு. சரி சரி, மன்னிச்சுடுங்க. நன்றி வேண்டாம்னு சொன்னாலும் விடமாட்டோம்ல. நன்றி அய்யா!
ட்ரீட்டா????? ஆளை வுடுங்க சாமிகளா. அபிஅப்பா எடுத்து சொல்லுங்க.
"நன்றி வேண்டாம்னு சொன்னாலும் விடமாட்டோம்ல."
முடிஞ்சது முடிஞ்சு போச்சு..கதம் கதம்
எங்க ரெண்டு பேர கவனிச்சா ஒரு 2000 dhs செலவோட போய்டும்...இதுல அபி அப்பா எடுத்து சொன்னா ஒரு 5000dhs ஆகும் அய்யாவுக்கு வசதி எப்படி!!!
// குசும்பன் said...
லொடுக்கு said...
வாங்க ஜிரா,
நம்ம பக்கம் முதன்முதலா வந்துருக்கீங்க. நன்றி!
அப்ப நாங்க என்ன பல தடவை வந்து இருக்கோமா! எங்களுக்கு எங்க வரவேற்ப்பு!!! மின்னல் என்னப்ப இது...எங்களு ஒரு நன்றி எல்லாம் வேண்டாம் பர்ஜிலராப்ல ஒரு வரவேற்ப்பு டிரீட் கொடுத்துவிடுங்க...
டீல்... //
அடடே. அப்ப எனக்கு மட்டும் நன்றியா? அஸ்க்கு புஸ்க்கு. எனக்கும் ட்ரீட்தான் வேணும்.
என்னமோ ஒலக மகா குத்தம் பண்ணிட்டாப்புல குதிக்கிறீங்களே
ஷுகர் னு சொல்லிட்டு sugar னு ஸ்பெல்லிங் எழுதறோம்
birthday என்பதை ஸ்டைலா பர்டே ன்னு ஸ்டைலா சொல்றோம்.
ஒவ்வொரு எடத்துல ஒவ்வொரு மாதிரி கையெழுத்துப் போட்டாத்தான் ஃபோர்ஜரீ.
இது ச்சும்மா ஸ்டைலு.இத ஷிவாஜி அல்லது ஷங்கர் கேட்டா அதிரும்ல.
ராகவன்,
ச்சும்மா இருக்க மாட்டீங்களா? ஷிவாஜின்னு பேரை வச்சா எப்படி வரி விலக்கு கிடைக்கும்?
யோசிங்கப்பா:-)))))
ம்ம்ம்ம்ம் ஒருவேளை ஷிவாஜியும் 'தமிழ்'தான்னு சொல்லிருவாங்களோ?
G.Ragavan said...
"அடடே. அப்ப எனக்கு மட்டும் நன்றியா? அஸ்க்கு புஸ்க்கு. எனக்கும் ட்ரீட்தான் வேணும்."
ராகவன் லொடுக்கு ரொம்ப நல்லவராம் நீங்க இங்க வர முடியவில்லை என்றா கூட நீங்க விரும்பிய இடத்தில் உங்க நண்பர்களுடன் போய் சாப்பிட்டு விட்டு பில் அனுப்புங்க லொடுக்கு பணம் அனுப்பி விடுவார்...
(மறக்காமல் ஒரு காலி சேரில் "லொடுக்கு" என்று எழுதி ஒட்டி அவரும் உங்க கூட இருந்த பீலிங்க ஏற்படுத்தீக்குங்க...
//எங்க ரெண்டு பேர கவனிச்சா ஒரு 2000 dhs செலவோட போய்டும்...இதுல அபி அப்பா எடுத்து சொன்னா ஒரு 5000dhs ஆகும் அய்யாவுக்கு வசதி எப்படி!!!//
சரி உங்க டீல் ஓ.கே. அடுத்த அமீரக வலைப்பதிவர் சந்திப்பு நடு பாலைவனத்துல நடத்தலாம்னு தம்பி சொல்லியிருக்காரு. அவர் தலைமையில். அப்ப பாத்துக்கலாம். ஓ.கே வா?
//அடடே. அப்ப எனக்கு மட்டும் நன்றியா? அஸ்க்கு புஸ்க்கு. எனக்கும் ட்ரீட்தான் வேணும்.
//
ஐரோப்பாவுக்கெல்லாம் பார்சல் அனுப்ப முடியாது ராகவன் சார். ;)
//கண்மணி said...
என்னமோ ஒலக மகா குத்தம் பண்ணிட்டாப்புல குதிக்கிறீங்களே
ஷுகர் னு சொல்லிட்டு sugar னு ஸ்பெல்லிங் எழுதறோம்
birthday என்பதை ஸ்டைலா பர்டே ன்னு ஸ்டைலா சொல்றோம்.
ஒவ்வொரு எடத்துல ஒவ்வொரு மாதிரி கையெழுத்துப் போட்டாத்தான் ஃபோர்ஜரீ.
இது ச்சும்மா ஸ்டைலு.இத ஷிவாஜி அல்லது ஷங்கர் கேட்டா அதிரும்ல.
//
வாங்க நகைச்சுவை சிகாமணி,
இதெல்லாம் எப்படிங்க உங்களால மட்டும் இந்த மாதிரி விளக்கம் கொடுக்க முடியுது!
//துளசி கோபால் said...
ராகவன்,
ச்சும்மா இருக்க மாட்டீங்களா? ஷிவாஜின்னு பேரை வச்சா எப்படி வரி விலக்கு கிடைக்கும்?
யோசிங்கப்பா:-)))))
ம்ம்ம்ம்ம் ஒருவேளை ஷிவாஜியும் 'தமிழ்'தான்னு சொல்லிருவாங்களோ?
//
வாங்க டீச்சர்,
அதான் பெயர்ச்சொல்லுக்கெல்லாம் வரிவிலக்குன்னு புது ரூல்ஸ் வந்தாச்சே. :)
//ராகவன் லொடுக்கு ரொம்ப நல்லவராம் நீங்க இங்க வர முடியவில்லை என்றா கூட நீங்க விரும்பிய இடத்தில் உங்க நண்பர்களுடன் போய் சாப்பிட்டு விட்டு பில் அனுப்புங்க லொடுக்கு பணம் அனுப்பி விடுவார்...
(மறக்காமல் ஒரு காலி சேரில் "லொடுக்கு" என்று எழுதி ஒட்டி அவரும் உங்க கூட இருந்த பீலிங்க ஏற்படுத்தீக்குங்க...//
யோவ் குசும்பு,
சும்மா இருய்யா நீ வேற. அதான் உங்களுக்கு தர்றேன்ன்னு சொல்லியாச்சுல்ல. எல்லாரையும் கூப்டா சாயா மட்டுந்தான். ஓ.கே வா?
Pozhuthu Pogatha Bommus are wasting precious time in this way - rubbish
suppamani
Post a Comment