எப்படி முடிந்தது இவர்களால்!!
கடந்த 20 ஆண்டுகளுகாகவே பாதிக்கப்பட்டு வரும் ஒரு நாடு. விடாத போரினால் கிழித்தெரியப்பட்டு நித்தம் பல இழப்புகளை சந்தித்து வரும் ஒரு நாடு. பொருளாதரத்திலும், அரசியலிலும் ஏன் அன்றாட வாழ்க்கை வாழ்வதிலும் கூட சீரழிவை சந்தித்துக்கொண்டிருக்கும் ஒரு நாடு. ஆனால், நேற்று ஜகார்த்தாவில் நடந்த ஆசிய கோப்பை கால்பந்து கோப்பையை வென்று சாதித்திருக்கிறது.
ஆம். இராக் -தான் இப்போதைய ஆசிய சாம்பியன் கால்பந்தில். சவூதி அரேபியாவுடனான நேற்றைய இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று சாதனை படைத்திருக்கிறது.
நேற்றிரவு ஷார்ஜாவிலிருந்து நான் துபை வந்துகொண்டிருந்த போது பல வண்டிகளில் இராக்கிய கொடி பறக்க இளைஞர்கள் கூச்சலிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். போரினால் பாதிக்கப்பட்டு சோகமிழைந்த அவர்களின் முகங்களில் சில நாட்களுக்காகவாவது அந்நாட்டு கால்பந்து அணியினர் மகிழ்ச்சியை வரவழைத்துள்ளனர்.
இந்தப் போட்டிகளில் பங்கேற்று கோப்பையை வெல்ல, ஒரு போரினால் அழிந்துகொண்டிருக்கும் ஒரு நாட்டினர் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்கள். குண்டு வெடிப்புகள் தினசரி நிகழ்ச்சியாயிருக்கையில் எப்படி பயிற்சி செய்திருப்பார்கள்? பொருளாதரத்தில் அதர பாதளத்தில் கிடப்பவர்களுக்கு ஸ்பான்ஸர் தொல்லைகளை எப்படி சமாளித்திருப்பார்கள்? இன்னும் பல தொல்லைகளுக்கு இடையில் இந்த வெற்றி! எல்லாம் நாட்டின் மீதும் விளையாட்டின் மீதுமுள்ள வெறி. இந்திய விளையாட்டு வீரர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்.
வெற்றியை கொண்டாடும் வீரர்களும் மக்களும்.

வெல்டன் இராக்! வாழ்க விளையாட்டு!!!
15 comments:
அபாரம்!!
இவர்களிடமிருந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள்(!) ஆளுக்கு ஒரு கப் ---வாங்கி குடிக்கவேண்டும்.
தங்கள் கருத்தை வழிமொழிகிறேன்
//இவர்களிடமிருந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள்(!) ஆளுக்கு ஒரு கப் ---வாங்கி குடிக்கவேண்டும். //
:)
//இராஜராஜன் said...
தங்கள் கருத்தை வழிமொழிகிறேன்//
நன்றி.
//இந்தப் போட்டிகளில் பங்கேற்று கோப்பையை வெல்ல, ஒரு போரினால் அழிந்துகொண்டிருக்கும் ஒரு நாட்டினர் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்கள். குண்டு வெடிப்புகள் தினசரி நிகழ்ச்சியாயிருக்கையில் எப்படி பயிற்சி செய்திருப்பார்கள்?// ம்ம் ஆமாம். பயிற்சிக்கு ரொம்ப கஷ்டப்பட்டிருப்பார்கள். ஒருவேளை கால்பந்தை நாட்டின் எதிரிகளாக நினைத்து உதை உதைன்னு உதைத்து தள்ளியிருப்பார்கள். ;-)
//ஒருவேளை கால்பந்தை நாட்டின் எதிரிகளாக நினைத்து உதை உதைன்னு உதைத்து தள்ளியிருப்பார்கள். ;-)//
எதிராகா ஆடிய சவுதிகளையே எதிரியாக எண்ணித்தான் விளையாடியிருப்பார்கள். சவுதியும் அவர்களின் இன்றைய நிலைமைக்கு ஒரு(பெருங்?) கராணம்தானே!!
உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம் தான் தல ;-))
தகவலுக்கு நன்றி ;-)
hip hip hooray!!!!!!!!!
நான் இந்த ஆட்டத்தை ஆபிஸில் பார்த்தேன் ஈராகிடம் இருந்த வெறி சவுதியிடமும் இருந்தது
ஆனால் 57 % பந்து ஈராக்கிடம் இருந்ததும் வெற்றிக்கு காரணம்
hip hip hooray!!!!!!
yahooooooooooooooooooooooooooo
கோபிக்கு நன்றி.
மின்னல், கொடுத்து வைத்தவர் பாத்திருக்கிறீர்கள். எனக்கு நேரம் அமையவில்லை :(
கடந்த 7 முறைகளில் இது 6-வது இறுதிப்போட்டியாம் சவுதிக்கு. அதில் 3 முறை சாம்பியன். 4வது முறை வெல்வது உறுதி என நம்பியிருந்தனர்.
இராக் வச்சது ஆப்பு. :)))
அனானியின் மகிழ்ச்சி துள்ளலுக்கு ஒரு ஹுர்ர்ர்ர்ரேஏஏஏஏஏஏஎ!!
நிச்சயம் பாராட்ட பட வேண்டிய விசயம் லொடுக்கு.
மின்னல் said:
ஆனால் 57 % பந்து ஈராக்கிடம் இருந்ததும் வெற்றிக்கு காரணம் ...
பந்து பிஞ்சு போச்சா? அதையே வச்சு விளையாண்டாங்களா?
//பந்து பிஞ்சு போச்சா? அதையே வச்சு விளையாண்டாங்களா? //
குசும்பரே! தொடங்கியாச்சா???
Post a Comment