Sunday, July 29, 2007

அமீரக தமிழ் வலைப்பதிவுகள்

எல்லாரும் எல்லா வலைப்பதிவுகளையும் வாசிப்பதில்லை. அவரவருக்கு ஒவ்வொரு ரசனைகள். ஒவ்வொரு விருப்பங்கள்.

அதுபோலவே எனக்கும். திரட்டிகளில் சுண்டி இழுக்கும் தலைப்புகளையோ, அதிகமாக பார்வையிட்ட இடுகைகளையோ, தெரிந்தவர்களின் இடுகைகளையோ மட்டுமே நானும் வாசித்து வருகிறேன். போதுமான நேரமின்மையும் இது போன்ற தெரிவிற்கு காரணம். இதுபோல், விருப்பமான பதிவுகளை இழக்க நேரிட மனமில்லாதவர்கள் பல ஃபீட் ரீடர்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதுபோல நானும் Page Flakes என்னும் ரீடரை பயன்படுத்தி வருகிறேன். இது ரீடராக மட்டுமில்லாமல் பன்முகங்களிலும் பயன்படுகிறது. நமக்கு தேவையான ஃபீட்-களுடன் அதில் பலரால் உருவாக்கப்பட்ட பலவிதமான Flakes-களையும் நாம் நமது பக்கங்களில் சேர்த்து கொள்ளலாம்.

அமீரகத்திலுள்ள பெரும்பான்மையான வலைப்பதிவர்களும் இப்போது தெரிந்தவர்களாகிவிட்டதால், அமீரக வலைப்பதிவுகள் அனைத்தையும் ஒரு பக்கத்தில் வரச்செய்து உங்களுடன் பகிர்ந்தும் கொண்டுள்ளேன். இதில் யாரேனும் அமீரக வலைப்பதிவரின் பதிவு இணைக்கப்படாமல் விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். மாற்றங்கள் தேவையென்றாலும் அமீரக நண்பர்கள் தெரிவிக்கவும்.

நேரமின்மை காரணமாக இதுபற்றி சுருக்கமாகவே எழுத முடிந்தது. Page Flakes-ல் உங்களது பக்கத்தை உருவாக்கி பயன்படுத்துவதில் உதவி தேவையெனில் தெரிவிக்கவும். எனக்கு தெரிந்ததை சொல்லித்தருகிறேன்.

5 comments:

said...

இதுல எப்படி லொடுக்கு புது பதிவு போட்டால் தானக திரட்டிக்கொள்ளுமா?


அமீரக பதிவுகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்பது மகிழ்சி.

தங்கள் முயற்சிக்கு நன்றி...

said...

ஆமா குசும்பரே, தானாகவே திரட்டிக்கொள்ளும். நீங்க இதை ஃபேவரிட் போட்டு வச்சுக்குங்க. :)

said...

குட் ஓர்க்

பயனுள்ள சேவை

said...

நல்லா இருக்கு சார். புக் மார்க் பண்ணியாச்சு. நன்றி.

said...

ரொம்ப நன்றி லொடுக்கு. நானே இப்படி ஒண்ணு செய்யணும்னு இருந்தேன். வேலைய மிச்சப்படுத்திக் கொடுத்துட்டீங்க.