Tuesday, July 03, 2007

மனிதர் உணர்ந்துகொள்ள இது மனித காதல் அல்ல...

கோவையில் அது ஒரு பிரபலமான பொறியியல் கல்லூரி. அந்த கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் அவனும் ஒரு ஜூனியர் பொண்ணும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். ஒன்றாகவே ஊர் சுற்றி வருகின்றனர். அவனுக்கு கல்லூரி வாழ்க்கை முடியப்போகும் வருத்தமிருந்தாலும் அவனுக்கு அதே ஊர்தான் என்பதால் அந்த வருத்தம் அவனை பெரிதாக பாதிக்கவில்லை.

அவனுடைய இறுதியாண்டும் நிறைவடைந்து விட்டது. அவனும் வேலை தேடி அலைந்து, இறுதியில் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக வேலை கிடைக்கிறது. அவளைப் பிரியப்போகும் துயரம் அவனையும், அவனை பிரியப்போகும் துயரம் அவளையும் வாட்டுகிறது. இருவரும் தத்தமது பெற்றோரிடம் பேசி தங்களது திருமணத்திற்கும் சம்மதம் பெறுகின்றனர். அவன் அமெரிக்க போய் ஒர் ஆண்டு கழித்து திரும்பி வந்ததும் திருமணம் என்பதாக முடிவெடுக்கப்படுகிறது.

அமெரிக்கா செல்லும் நாளில் அவன் அவளுக்கு அன்பளிப்பாக ஒரு 'செல்பேசி' வாங்கி கொடுக்கிறான். அந்த செல்பேசி எப்போதும் அவளுடனே இருக்க வேண்டும் என அன்பு கட்டளையும் இடுகிறான். அவனும் பிரியா விடை பெற்று அமெரிக்கா பறந்து செல்கிறான். அவன் அங்கு சென்ற பின் இருவருக்குள்ளும் காதல் அந்த செல்பேசி மூலமாக மேலும் வளர்கிறது.

ஒருநாள், இதையெல்லாம் அறிந்த தோழி ஒருத்தியுடன் சாலையை கடக்க முயற்சி செய்த அவள் கண்மூடித்தனமாக வந்த லாரியில் அடிபட்டு வீழ்கிறாள். சிகிச்சை பலனளிக்காமல் அவள் உயிர் மருத்துவமனையில் பிரிகிறது. இதை அறிந்தால் அவன் பைத்தியமாகிவிடுவான் என பயந்த இருவீட்டாரும் அவனிடம் இப்போதைக்கு இதை அறிவிக்க வேண்டாமென முடிவெடுக்கிறார்கள். அவன் நாடு திரும்பியதும் அவனிடம் பக்குவமாக எடுத்து சொல்லிக்கொள்ளலாம் என்பது அவர்களின் எண்ணம். அதற்கிடையில் அவளது உடலை சவப்பெட்டியில் அடைத்து மூட முயன்ற போது மூட முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் பலனில்லை. பாதிரியார், ஆச்சர்யத்துடன் கவலை கொள்கிறார். அவள் மிகவும் விரும்பிய பொருள் எதாவது இருந்தால் கொண்டு வாருங்கள் என பாதிரியார் சொல்ல, அந்த தோழி 'அவளுக்கு மிகவும் விருப்பமான் பொருள் இந்த செல்பேசி தான்' என அவளுக்கு அவன் வாங்கித்தந்த அந்த செல்பேசியை பாதிரியாரிடம் கொடுக்கிறார். அவரும், அதை சவப்பெட்டியில் வைத்து மூட அதுவும் மூடிக்கொண்டது. ஆச்சர்யத்தில் அனைவரும் வாய் பிளந்தனர்.

இரண்டு மாதங்கள் கழித்து அவன் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்புகிறான். வரவேற்க வந்த பெற்றோரை தன்வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு (அவள் இறந்ததை அவனது பெற்றோர்கள் சொல்லவில்லை) அவள் வீட்டிற்கு நேராக செல்கிறான் கையில் மலர்கொத்தோடு.

அவள் வீட்டினுள் நுழைந்ததும், அவள் பெயரை உரக்க கூவி அழைத்தவாறு அங்குமிங்கும் ஓடி தேடுகிறான். அவளது பெற்றோர்கள் திகைத்து நிற்கின்றனர் எப்படி இவனிடம் சொல்வதென்று தெரியாமல். அவர்களிடம் அவன், 'அவள் எங்கே?' என கேட்க. அவர்களும் தட்டு தடுமாறி அவள் விபத்தில் இறந்ததை கூறிகின்றனர். அதைக்கேட்ட அவன் பலமாக சிரிக்கிறான். 'என்ன உளறுகிறீர்கள்? அவள் இறக்கவில்லை. நேற்று வரை அவளுடன் செல்பேசியில் பேசினேன்' என சிரித்தவாறு கூறுகிறான். அவர்கள் விளக்க முயற்சிக்க, அவனோ அங்கிருந்து புறப்படும் வரை அவளுடன் பேசியதாக நம்ப மறுக்கிறான். அவர்களோ இதைக்கேட்டதும் குழப்பத்தில் அவனை சமாதானப்படுத்த முயற்சிக்க, அவன் அவளுடைய செல்பேசி எண்ணுக்கு டயல் செய்ய தொடங்கினான். அவளது பெற்றோர்களோ திகைத்து நிற்கின்றனர்.

காட்சி மாறுகிறது.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.

10 comments:

Anonymous said...

mokkai! mokkai!! mokkai!!

said...

என்ன கொடுமை சரவணா!மொக்கைக்கு அளவே இல்லியா!

said...

பேய் காதல் பயமாயிருக்கு

said...

//Anonymous said...
mokkai! mokkai!! mokkai!!
//

நன்றி ஐயா நன்றி.

said...

//அபி அப்பா said...
என்ன கொடுமை சரவணா!மொக்கைக்கு அளவே இல்லியா!
//

நமக்கு தெரிஞ்சதைதானே செய்ய முடியும் ;)

said...

//ஜெஸிலா said...
பேய் காதல் பயமாயிருக்கு
//

பயமா? உங்களுக்கா???

said...

புனிதமானது!!!... புனிதமானது!!... புனிதமானது!....

கதை பாதியிலேயே நின்னுடுத்தா? பிரியலியே.

said...

வாங்க சுல்தான் பாய்,
இல்ல இல்ல பாதியிலேயே முடியல. முடிவில் பல புள்ளிகளுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள படத்தை பாருங்கள். ஹட்ச் மொபைலுக்கான விளம்பரம். ;)

said...

அடங்..... .... ... ...!!!

said...

//சுல்தான் said...
அடங்..... .... ... ...!!!
//

சரி சரி :)