புகைப்பட போட்டிக்கு...
புகைப்பட போட்டி அறிவிச்சவுடனே எல்லாரும் கடகடன்னு போட்டில இறங்கிட்டாங்க. நாம சும்மா இருந்தா தமிழ் கூறும் நல்லுலகம் நம்மை இகழுமே. அந்த ஒரே காரணத்திற்காக நானும் பங்கெடுக்கிறேன். நான் அப்பப்ப சுட்டு வச்சதை இங்க பரிமாறுகிறேன். போட்டிக்கு ரெண்டே ரெண்டுதான் அனுப்பனுமாமே? இருந்தாலும் போனஸா ரெண்டு அவங்களுக்கு நான் அனுப்புறேன்.
இது ஓமன்(Omen) நாட்டிலுள்ள கஸ்ஸப் (Qasssab) என்ற அழகான ஊருக்கு சென்ற போது வண்டியை ஓட்டியவாறே எடுத்தது (Thru front wind sheild).
இது துபையில் பாலைவனத்தை சுத்திப்பார்த்த போது எடுத்தது. பாலையும் கூட அழகுதான் இல்லை?
கஸ்ஸப்-ல் சிறு சிறு தீவுகளுக்கிடையே படகில் ஊர்ந்த போது எடுத்தது.
இதுவும் இயற்கைக்குள் அடங்குமானால் போட்டிக்கு எடுத்துக்கொள்ளவும்.
11 comments:
நல்ல படங்கள். எந்த படம் போட்டிக்கு என்று சொல்லிடுங்க.
அட்டகாசமாக இருக்கு தலைவா.....வாழ்த்துக்கள் ;)
முதலிரண்டு படங்கள் போட்டிக்கு என்று சொல்லியாச்சு ஜெஸிலா.
//கோபிநாத் said...
அட்டகாசமாக இருக்கு தலைவா.....வாழ்த்துக்கள் ;)
//
நன்றி தல நன்றி.
தங்கமணிய பலூன்ல பறக்க விட்டு குழந்தைய பார்த்துக்கறேன்ன்னு எஸ்கேப் ஆன பார்ட்டியில நீர்! போட்டோ வெல்லாம் அருமை!
கடைசி படமும் நல்லா இருக்கு ஆனா இயற்கை விதி மிஸ்..
// அபி அப்பா said...
தங்கமணிய பலூன்ல பறக்க விட்டு குழந்தைய பார்த்துக்கறேன்ன்னு எஸ்கேப் ஆன பார்ட்டியில நீர்! போட்டோ வெல்லாம் அருமை!
//
அப்படியில்லைவே...
குழந்தையை நான் பாத்துக்கிறேன்னு தங்கமணிக்கு வாய்ப்பளித்து பறக்கவிட்டு மகிழ்ந்த, பெண்ணுரிமைக் காவலனய்யா நான்.
வாம்மா மின்னலு...
ஆமாங்க கடைசி படம் இயற்கைக்கு உட்படாதுன்னு நினைக்கிறேன். அதனால் தான் போட்டிக்கு முதலிரண்டு படங்களை தேர்வுசெய்யும்படி கூறிவிட்டேன்.
பரிசெல்லாம் கிடைக்கும்னு கொஞ்சமும் நம்பிக்கையில்லை. இருந்தாலும் நம்ம பங்குக்கு படம் காட்டனும்ல. என்ன சொல்றீய??
thala mutha padam kalakkal thaan.. jeyichaa enakku solliyanuppunga! party tharanumlaa!
//OSAI Chella said...
thala mutha padam kalakkal thaan.. jeyichaa enakku solliyanuppunga! party tharanumlaa!
//
வாங்க வாத்தியாரே!
ஜெயிச்சா உங்களுக்கு இல்லாத பார்ட்டியா. எப்படியோ வாத்தியார் பேரை மாணவன் காப்பாத்தினா சரி. :)
படங்கள் நல்லா இருக்கு அடுத்த முறை பாலைக்கு செல்ல நேரின் மாலையில் கதிரவன் மறைதல் மறக்காமல் எடுங்க. பில்டர் உபயோகித்தால் இன்னும் நன்றாக இருக்கும். இல்லையேல் போட்டோ ஷாப் இருக்கவே இருக்கு.
Post a Comment