பாலபாரதியை மிஞ்சிய அபிஅப்பா:துபை பதிவர் சந்திப்பு
தல பாலபாரதிக்கு போட்டியாக அமீரகத்தில் உருவெடுத்திருக்கும் அபிஅப்பா, தான் மாநாடுகள் நடத்துவதில் தலையை மிஞ்ச வேண்டும் என்ற வெறியுடன் துவங்கியுள்ள 'வாரம் ஒரு சந்திப்பு' என்ற கொள்கையின்படி நேற்று துபையில் மாபெரும் வலைப்பதிவர் சந்திப்பை நடத்தி வெற்றியும் கண்டுள்ளார். இருபது நாட்களுக்குள் இரண்டு சந்திப்பு! இது வலையுலக வரலாற்றில் மைல் கல். இது போதாதென்று அண்ணாச்சி தாயகம் திரும்பியவுடன் (அதாங்க அவர் துபை திரும்பியவுடன்) அவருடைய ஒத்துழைப்புடன் 'பதிவர் ஒர்க் ஷாப்பும்' நடத்த திட்டமிட்டுள்ளார்.
* சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்த கராமா பூங்காவானது சிம்ரன் ஆப்பக்கடை, வீனஸ், அஞ்சப்பர், சரவணபவன் இப்படி பல உணவகங்கள் சூழ அமையப்பெற்றுள்ளது.
* 'ஜூலை துபை வெயிலில் திறந்தவெளியில் சந்திப்பா' என அனைவரும் பயந்ததில் தவறேதுமில்லை என்பது போல் இருந்தது வெயில்.
* 'காலம் தவறா காந்தியடிகள்' என்ற பட்டப்பெயருக்கு புதிதாக பொருந்தியுள்ள அபிஅப்பா சரியான நேரத்திற்கு வருவாரா என்ற சந்தேகத்துடன் குடும்பத்துடன் சென்ற எனக்கு இன்ப அதிர்ச்சியாக சென்ஷியுடன் முதல் வருகை தந்திருந்தார். நான் மூன்றாவது ஆளாக இணைந்து கொண்டேன்.
* பின்னர், அய்யனார் தனிமையில் வராமல் தம்பி & குசும்பனுடன் வந்து சேர்ந்தார். பெரிதும் எதிர்பார்கப்பட்ட மகேந்திரன் மிஸ்ஸிங். குசும்பனை பார்த்தால் இந்த பூனையும் பால் குடிக்குமா என்றிருக்கிறார்.
* பெனாத்தலார் கோபியுடன் வந்து சேர்ந்தார். இவர்களுடன் வருவதாக எதிர்பார்க்கப்பட்ட லியோ சுரேஷ் மிஸ்ஸிங். அய்யனாரும் குசும்பனும் ஆள் மாறாட்ட அறிமுகம் செய்து கொண்டனர் பெனாத்தலாருடன். அய்யனார் நடிப்பு சீன நடிகர் யுவான் ஷிங் ஜிங்-ஜை மிஞ்சுவதாக இருந்தது. பாவம் பெனத்தலார் நம்பி விட்டார்.
* பின்னர் சந்திப்பு நாயகன் 'சூடான் புலி' நாகை சிவா கையில் வெயிட்டுடன் வந்து சேர்ந்தார். 'துபை டூட்டி ஃப்ரீ' பையை பார்த்தவுடன் சாக்லேட் அயிட்டமாக இருக்குமோ என்று அபிஅப்பா ஜொல்லியதை என்னைத்தவிர யாரும் கவனிக்கவில்லை.
* பின்னர் ஜெஸிலா தனது குடும்பத்துடன் வந்து சேர்ந்தார்.
* இதற்கிடையே நாங்கள் ஒருவர் மாற்றி ஒருவர் போட்டி போட்டு அய்யனாரை கலாய்த்து கொண்டிருந்தோம். மனுஷன் ரொம்ப நல்லவர். எவ்வளவு கலாய்ச்சாலும் தாங்கி கொண்டார்.
* அப்போது ஒரு அனானி தூரத்திலிருந்து எங்களையெல்லாம் போட்டோ எடுத்து விட்டு (இட்லிவடையாரின் ஆள்?), தான் ஒரு அனானி என அறிமுகப்படுத்தி கொஞ்சம் இடவெளி விட்டு அமர்ந்து கொண்டார்.
* இறுதியாக எங்களுடன் சுல்தான் இணைந்து கொண்டார்.
* அய்யனார் தான் கொண்டுவந்திருந்த 'சங்க இலக்கிய' நூலை அபிஅப்பாவிடம் கொடுத்து தமிழை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அடிக்கல் நாட்டினார். அபிஅப்பா அந்த நூலின் எடையை பார்த்து தலையணையாக உதவும் என்று பத்திரப்படுத்திகொண்டார்.
* பலவற்றை பேசிக்கொண்டேயிருந்தாலும், அய்யனாரை கலாய்க்கும் வாய்ப்பை மட்டும் யாரும் தவறவிடவில்லை. மின்னல் இல்லாமல் போனது பேரிழப்பாகவே இருந்தது. மின்னல் 'எங்கே பழி வாங்கும் விதமாக தனக்கு ஆப்பு தயார் செய்துள்ளார்களோ' என பயந்தே வரவில்லை என பேசிக்கொண்டனர்.
* இடையே தேநீர் அருந்திவிட்டு மீண்டும் தொடர்ந்தது அரட்டை. அரட்டையின் போக்கில் அடித்த வெயிலின் தாக்கத்தை சிறிதும் உணர்ந்திருக்கவில்லை.
* சந்திப்பை நிறைவு செய்யும் விதமாக சரவணபவனில் நுழைந்து அபிஅப்பாவிற்கு மனதார நன்றி சொல்லும் விதமாக வயிறார சாப்பிட்டோம். அபிஅப்பா மட்டும் எதையோ இழக்கப் போகும் பரிதவிப்புடன் (இடையிடையே பாக்கெட்டை தடவிப் பார்த்துகொண்டார்) காணப்பட்டார்.
* இறுதியாக நாகை சிவா தான் கொண்டு வந்திருந்த 'துபை டூட்டி ஃப்ரீ' பையை திறந்தார். எல்லாருக்கும் ஒரு நினைவுப்பரிசாக ஒரு சிங்கம் தந்தார். புலி சிங்கமானது.
இதோ சில புகைப்படங்கள்:
புகைப்பட போட்டிக்கு தனது படத்தை அனுப்பச்சொல்லி அடம்பிடித்த அபிஅப்பா
சிறந்தது எது? அப்பக்கடையா? சரவணபவனா? (அபிஅப்பா & கோபி) என்ற விவாத்ததில்.
கலந்துகொண்ட அனானிகள்.
சூடான் புலி தந்த சிங்கம்.
முழுதும் வலைப்பதிவர் சந்திப்பாக மட்டும் இல்லாமால் நண்பர்கள் கூட்டமாக அமர்ந்து அரட்டையடித்த உணர்வே எனக்கிருந்தது.
கலந்து கொண்டு சிறப்பித்த எல்லாருக்கும் என்னுடைய நன்றி.
32 comments:
இந்த நேரத்தில் ஜஸீலாவின் ரங்கமணிக்கும் நாம் நன்றி சொல்லியீ ஆகனும்! மனுஷன் என்ன ஒரு பொருமை! நன்றிங்கய்யா!!
அமுக மழலை அணி தான் மாநாட்டின் ஹைலைட்!
ஆஹா தலைப்பிலேயே வச்சாச்சா ஆப்பு நல்லா இருங்கப்பா!
படிக்கல இன்னும் படிச்சிட்டு வருகிறேன்:)
//அபி அப்பா said...
ஆஹா தலைப்பிலேயே வச்சாச்சா ஆப்பு நல்லா இருங்கப்பா! //
உங்க எல்லாருக்கு எழுத நிறைய விட்டுவச்சிருக்கேன். புகுந்து விளையாடுங்க. நான் எழுதுனது வெரும் வருகைப் பதிவேடு மட்டுந்தான். :)
ரெண்டாவது படத்தில் போஸ்ட் பக்கத்தில் நிற்பவர் & போன் செய்பவர் யார் யார்..?
//மின்னுது மின்னல் said...
ரெண்டாவது படத்தில் போஸ்ட் பக்கத்தில் நிற்பவர் & போன் செய்பவர் யார் யார்..?//
வாங்க மின்னல்,, நீங்கள் இல்லாதது குறையாகவே இருந்தது.
போனில் பேசுபவர் பெனாத்தலார். மற்றவர் பொறுமையின் சிகரம்.
உள்ளேன் ஐயா!
போன் செய்பவர் பெனாத்தலார், பொருமையாக சகிப்பவர் ஸஸரி நிற்பவர் ஜஸீலாவின் ரங்கமணி தான்.
மின்னல் இல்லாமல் போனது பேரிழப்பாகவே இருந்தது.
//
வந்திருந்தா எனக்கு பேரிழப்பா இருந்திருக்கும்னு சொல்லுங்க
//
மின்னல் 'எங்கே பழி வாங்கும் விதமாக தனக்கு ஆப்பு தயார் செய்துள்ளார்களோ' என பயந்தே வரவில்லை என பேசிக்கொண்டனர்
//
குசும்பன் வாங்க மின்னல் நல்லா கவணிச்சிடுவோம்னு அன்பா(??) கேட்டாரு அதுக்கெல்லாம் நான் பயப்பிடலை அய்யனாரை பார்த்துதான் பயமே.. :)
ஊருலையும் அய்யனாரை கண்டா பயம் தான்..:)
//சுல்தான் said...
உள்ளேன் ஐயா! //
அங்கேயும் அளவு. இங்கேயும் அளவுதானா பாய். :)
//ஊருலையும் அய்யனாரை கண்டா பயம் தான்..:)//
நேத்து வந்திருந்தா நீங்க பழிக்குப் பழி வாங்கியிருக்கலாம். (நாங்கல்லாம் இருக்கோம்ல)
பதிவிட்டதற்கு நன்றி.
குழந்தைங்க போட்டோ ரொம்ப நல்லா வந்திருக்கு.
//தம்பி said...
பதிவிட்டதற்கு நன்றி.
குழந்தைங்க போட்டோ ரொம்ப நல்லா வந்திருக்கு.//
நான் நல்லா இல்லன்னு பளிச்சுன்னு சொல்ல வேந்தியதுதானே:-))
//நான் நல்லா இல்லன்னு பளிச்சுன்னு சொல்ல வேந்தியதுதானே:-)) //
:)))))))
//தம்பி said...
பதிவிட்டதற்கு நன்றி.
குழந்தைங்க போட்டோ ரொம்ப நல்லா வந்திருக்கு.//
அபிஅப்பாவை இப்படி வாரியிருக்க வேண்டாம் :)
தல
பதிவும் சூப்பர்....படங்களும் சூப்பர் ;-))
\* இதற்கிடையே நாங்கள் ஒருவர் மாற்றி ஒருவர் போட்டி போட்டு அய்யனாரை கலாய்த்து கொண்டிருந்தோம். மனுஷன் ரொம்ப நல்லவர். எவ்வளவு கலாய்ச்சாலும் தாங்கி கொண்டார்.\\\
அங்க தான் அய்யனார்...அய்யனார்ன்னு பாடிக்கிட்டு இருந்திங்க....பதிவுலையும் அவரை விட்டுவைக்கலியா ;-)))))
"குசும்பனை பார்த்தால் இந்த பூனையும் பால் குடிக்குமா என்றிருக்கிறார்."
எல்லாரும் இதையே சொன்னா எல்லாம் என்னை பற்றி என்ன நினைப்பாங்க :( நான் என்னமோ எல்லாரையும் கிண்டல் செய்வதாய் தப்பா நினைச்சிட மாட்டாங்க:(
ஜெஸிலா சீக்கிரம் கல்யாணம் செய்யுங்க என்று சொன்னதில் இருந்து நானும் பெண் தேடலாம் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன், அதுக்கு தகுந்த மாதிரி, குசும்பன் நல்லவர், வல்லவர், அன்பானவர், பன்பாணவர், அழகானவர்,அழகானவர்,
அழகானவர்,
(தானாக மூற்று முறை வந்துவிட்டது) இப்படி சொன்னா படிக்கிறவுங்க பார்த்துட்டு ஏதும் தெரிஞ்ச பொண் இருந்தா சொல்வாங்கலா அத விட்டுட்டு இப்படி எல்லாரும் உள் குத்து வச்சே எழுதுனா என்னங்க நான் செய்யுறது:(
நச்சுன்னு ஒரு பதிவு :-)
இந்த சந்திப்பின் மூலம் நடந்த மிக பெரிய நன்மை எனக்கும் அபி அப்பாவுக்கும் தான், என்னவென்றால் தம்பி வெகு நாட்களாக தேடிவந்த பின்னூட்ட மஞ்சு யார் என்று தெரிந்து விட்டதால் இனி அபி அப்பாவையும் அப்பாவி குசும்பனையும் சந்தேக படமாட்டார்.
நல்லா எழுதியிருக்கீங்க தல ..ஆனா அந்த மஞ்சுளா குடும்பம் நீங்களா இருப்பிங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல..
:)
//அங்க தான் அய்யனார்...அய்யனார்ன்னு பாடிக்கிட்டு இருந்திங்க....பதிவுலையும் அவரை விட்டுவைக்கலியா ;-)))))//
அவர்தான் ரொம்ப நல்லவரு. :)
//இப்படி சொன்னா படிக்கிறவுங்க பார்த்துட்டு ஏதும் தெரிஞ்ச பொண் இருந்தா சொல்வாங்கலா அத விட்டுட்டு இப்படி எல்லாரும் உள் குத்து வச்சே எழுதுனா என்னங்க நான் செய்யுறது:(//
அய்யாக்களே! அம்மாக்களே! குசும்பன் ரொம்ப நல்லவரு. நாங்கதான் அவரை பொய் பொய்யா எழுதித் தள்ளுகிறோம்.
//ஜெஸிலா said...
நச்சுன்னு ஒரு பதிவு :-)
//
நன்றி நன்றி!!
//ஆனா அந்த மஞ்சுளா குடும்பம் நீங்களா இருப்பிங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல..//
காக்கா உக்கார பனங்கா விழுந்திருச்சு!!
லொடுக்கு said...
"அய்யாக்களே! அம்மாக்களே! குசும்பன் ரொம்ப நல்லவரு. நாங்கதான் அவரை பொய் பொய்யா எழுதித் தள்ளுகிறோம்."
இதுக்கு நீங்க முன்பு சொன்னதே பெட்டர் :(
நல்லா இருங்க:(
லொடுக்கு said...
"காக்கா உக்கார பனங்கா விழுந்திருச்சு!!
அப்ப குருவி உட்கார என்னா விழும், கிளி உட்கார என்னா விழும்? அதெல்லாம் டீட்டெயிலா சொல்லுங்க அப்ப தான் தம்பிய காப்பாத்த முடியும்..
:)) good ones lodukku
//அப்ப குருவி உட்கார என்னா விழும், கிளி உட்கார என்னா விழும்? அதெல்லாம் டீட்டெயிலா சொல்லுங்க அப்ப தான் தம்பிய காப்பாத்த முடியும்..//
தம்பியை அந்த சிவாஜியே வந்தாலும் காப்பாத்தமுடியாது போலிருக்கு. அந்த கவிதையை படிச்சீங்கல்ல!!
//சந்தோஷ் said...
:)) good ones lodukku //
நன்றி சந்தோஷ்.
//அபி அப்பா said...
//தம்பி said...
பதிவிட்டதற்கு நன்றி.
குழந்தைங்க போட்டோ ரொம்ப நல்லா வந்திருக்கு.//
நான் நல்லா இல்லன்னு பளிச்சுன்னு சொல்ல வேந்தியதுதானே:-))//
நீங்க இவ்ளோ நல்லவரா?...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
Post a Comment