என்னதான் லக்கி இந்த 'எப்படி' வகையான பதிவுகளை நிறுத்த சொன்னாலும். நம்மோட மனநிலை 'அவனை நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன்' தான். ஆனால், இது சமையல் குறிப்பு பதிவல்ல. 'செமை'யாக வாங்கி கட்டி கொண்டிருக்கும் நம்ம சாப்பல் பற்றியது.
இந்திய அணி மூன்றாவது போட்டியில் வழக்கம்போல் மானங்கெட்டு தோற்றதை அனேகமாக எல்லாரும் மறந்திருக்கலாம் (அதானெ நம்ம மக்களின் அரிய குணம்). அந்த போட்டி முடிந்த பிறகு நடந்த ஊடக கூட்டத்தில் பதிலளிக்கையில்
'எம்.பிக்களின் கருத்து எனக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை. அவ்வாறு பேசுவதற்கே
அவர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது' என்று கூறினார்.
இவர் மேல் ஏற்கனவே வெறுத்து போயிருந்தவர்கள் இதை விடுவார்களா? உண்டு இல்லை என்றாக்கிவிட்டார்கள் நேற்றைய பாராளுமன்ற கூட்டத்தை. நாட்டு மக்களின் அன்றாட/நெடுங்கால பிரச்சனைகளை பேசி கலைய துப்பிள்ளாதவர்கள். உலகின் மிகப்பெரிய மக்களாட்சியை கிண்டலடித்த சாப்பல் கண்டிப்பாக கண்டிக்கபட வேண்டியவர்தான். இவர் யார் இந்திய எம்.பிக்களை பற்றி பேச? இந்திய பாராளுமன்றத்தில் கிரிக்கெட் பற்றிய விவாதம் வரலாம் தான். கிரிக்கெட் துறையும் இந்திய அரசுக்கு உட்பட்டது தானே? அதனால் எம்.பிக்கள் கிரிக்கெட் பற்றி பேச உரிமை இருக்கிறது. ஆனால், சகிக்க முடியாதது என்னவெனில் இவர்களின் அக்கறை கிரிக்கெட் தவிர்த்து மற்ற விளையாட்டுக்களில் இல்லை. ஹாக்கி துறை நாறி கிடக்கிறது. தடகளத்துறை, அய்யோ கேட்கவே வேண்டாம். அதை பற்றி பேசி தேசிய விளையாட்டான ஹாக்கியை, தேங்கி கிடக்கும் தடகளத்துறையை மேம்படுத்த இவர்களுக்கில்லாத அக்கறை கிரிக்கெட்டின் மீது மட்டும் ஏன்? கத்தை கத்தையாக பணம் புழங்குமிடம் என்பதாலா? உலகிலேயே பணக்கார விளையாட்டு வாரியம் நம் கிரிக்கெட் வாரியம் தான். நம் நாட்டு கிரிக்கெட்டிற்கு சாபம் என்றுதான் சொல்லவேண்டும், ஒரு பழுத்த அரசியல் வாதி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருப்பது. கிரிக்கெட் விளையாடாமல் அரசியல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.
இந்நிலையில் நேற்று பல தரப்புகளின் கண்டனத்திற்கு ஆளானார் சாப்பல். எம்.பிக்கள் சாப்பலை கண்டித்ததோடு அவரை எச்சரிக்கையாக பேசும்படியும் கூறினர். பி.ஜே.பியின் நாடாளுமன்ற செய்தி தொடர்பாளர் இது குறித்து கூறுகையில்,
'இந்திய அணியின் தொடர் தோல்விகளை நிறுத்த சரத் பவார் விரைவில நடவடிக்கை எடுக்க
வேண்டும்' என்று கூறினார்.
'இந்திய அணியின் தொடர் தோல்விகளுக்கு சாப்பல் தான்
காரணம். அவரை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும்' என்று குடியரசு கட்சியின் எம்.பி
ராம்தாஸ் த்வாலே கூறினார்.
இதோடில்லாமல் கம்யூனிஸ்டுகள் (ஏற்கனவே கங்குலி
சர்ச்சையில் சாப்பல் மேல் கடுப்பாக இருப்பவர்கள்) சாப்பலை கார சாரமா திட்டி
தீர்த்தனர்.
மேலும், கட்சி பாகுபாடில்லாமல் (இந்த ஒரு விஷயத்திலாவது ஒன்று சேர்ந்தார்களே) அனைத்து கட்சியினரும் இது குறித்துன் கண்டனம் தெரிவித்ததோடு இந்திய அணியின் தோல்வி குறித்து கவலை தெரிவித்தனர்.
இது மட்டுமில்லாமல் முகம்மது கைஃபின் வீட்டின் மீது கல்லெறியும் நடத்தியுள்ளனர் ஒரு கூட்டத்தினர். நேற்று சாலை முழுவதும் சாப்பல் எரிக்கப்பட்டார் (பொம்மைதான்). இந்திய அணியினர் செருப்படி வாங்கினர். (இதையெல்லாம் சத்தியமா நான் எதிர்பார்த்தேன்). இந்திய ரசிகர்களின் இந்த செயல் ஒரு தோல்வியின் பின் விளைவல்ல ஒரு ஆண்டில் இந்திய சந்தித்து தொடர் தோல்விகளின் விளைவாக எனக்கு தெரிகிறது. எதுவாயினும் இச்செயல் பண்பாடற்றது. இதற்கிடையில், சிலர் சந்துல சிந்து பாடுவது கங்குலி புகழ் பாடினர். 'சவுரவ் ஹமாரா கவுரவ்', 'கங்குலி தி ப்ரைட் ஆஃப் இந்தியா' என்றும் எழுதி காண்பித்து தங்களது ஆதங்கத்தை தீர்த்துக்கொண்டனர்.
முடிவாக, சாப்பல் எம்.பிக்களை விமர்சித்தது தேவையற்றது. கிரிக்கெட்டின் மீது மட்டும் இந்தளவு அக்கறை காட்டும் அரசியல்வாதிகளும் என் கண்டனத்திற்குரியவர்கள். இந்திய அணியின் மானங்கெட்ட தோல்விகளுக்கு காரணமான அரசியல், முறையற்ற தேர்வு முறை, செத்த ஆடுகளங்கள், வெறியில்லாத சூடு சுரணையற்ற வீரர்கள் மற்றும் அணியின் ஒற்றுமையை குலைத்து வரும் பயிர்ச்சியாளர் இவர்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
ஜான் ரைட்டின் நான்காண்டுகளில் இல்லாத/வெளிவராத பிரச்சனைகள், தோல்விகள் சாப்பலின் இந்த இரண்டாண்டுகளில். இப்படியே போனால்.......??????